PTA 75

ஆழியானே! நீ என் உள்ளத்தில் உள்ளாய்

2659 புவியுமிருவிசும்பும் நின்னகத்த * நீயென்
செவியின் வழிபுகுந்து என்னுள்ளாய் * - அவிவின்றி
யான்பெரியன்நீபெரியை என்பதனையாரறிவார்? *
ஊன்பருகுநேமியாய்! உள்ளு.
2659 puviyum iru vicumpum niṉ akatta * nī ĕṉ
cĕviyiṉ vazhi pukuntu * ĕṉ ul̤l̤āy ** avivu iṉṟi
yāṉ pĕriyaṉ nī pĕriyai * ĕṉpataṉai yār aṟivār? *
ūṉ paruku nemiyāy ul̤l̤u -75

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2659. You have swallowed the earth and the wide sky and kept them in your stomach. Through my ears, you entered my heart and remain there. You are inside me. Who is better, you or me? You carry a discus, smeared with flesh. Think about it.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஊன் பருகு மாம்ஸங்களைக் கவர்கின்ற; நேமியாய்! சக்கரத்தை கையிலுள்ள பெருமானே!; இருவிசும்பும் பரந்த விண்ணுலகும்; புவியும் மண்ணுலகும்; நின் அகத்த இரண்டு லோகங்களையும் உன்னுள்; நீ அடக்கிக் கொண்டிருக்கும் நீ; என் உள்ளாய் என்னிடம் உள்ளாய்; யான் பெரியன் ஆகவே நானே பெரியவன்; என் செவியின் வழி என் காது வழியே; புகுந்து புகுந்து ஒருநாளும் என்னை விட்டு; அவிவு இன்றி நீங்காமல் என்னுள் அடங்கிய பிறகு; நீ பெரியை நீ பெரியவனா? நான் பெரியவனா?; என்பதன யார் அறிவார்? என்பதை யார் அறிவார்?; உள்ளு இதை நீயே ஆலோசித்துப் பார்
ūn parugu nĕmiyāy ŏh one who has the chakra (disc) which drinks up the blood of enemies!; puviyum this world (which is made of primordial matter); iruvisumbum the expansive land of paramapadham (ṣrīvaikuṇtam) which is not made of primordial matter; nin agaththa are under your control; you (who are as mentioned above); en seivyin vazhi pugundhu entering through my ear; avivinṛi without any interruption; en ul̤l̤āy exist inside me; nān periyan am ī greater (between the two of us)?; nī periyai āre you the greater?; enbadhanai this matter; yār aṛivār who could know?; ul̤l̤u think (yourself)