PTA 82

அந்தோ! இராமபிரானை நினையாமல் இளமை கழிந்ததே!

2666 தெரிந்துணர்வொன்றின்மையால் தீவினையேன் * வாளா
இருந்தொழிந்தேன் கீழ்நாள்களெல்லாம் * - கரந்துருவின்
அம்மானை அந்நான்றுபின் தொடர்ந்த * ஆழியங்கை
அம்மானையேத்தாதயர்ந்து.
2666 tĕrintuṇarvu ŏṉṟu iṉmaiyāl * tīviṉaiyeṉ * vāl̤ā
iruntŏzhinteṉ * kīzh nāl̤kal̤ ĕllām ** karanturuviṉ
am māṉai * annāṉṟu piṉ tŏṭarnta * āzhi aṅkai
ammāṉai ettātu ayarttu -82

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2666. I have done bad karmā and not knowing him I have passed all my days in vain. I did not follow and praise him who carries a discus in his beautiful hand.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அந்நான்று முன்பொரு காலத்தில்; கரந்துருவின் தன் உருவத்தை மறைத்துக்கொண்டு; அம் மானை மாரீச மானை; பின் தொடர்ந்த பின் தொடர்ந்து; சென்று சென்று அதைக்கொன்றவனான; ஆழி அங்கை மோதிரம் அணிந்த; அம்மானை அப்பெருமானை வணங்காமல்; தீ வினையேன் மகாபாவியான நான்; தெரிந்துணர்வு நல்ல உணர்வு என்னும் அறிவு; ஒன்று இன்மையால் ஒன்றும் இல்லாததால்; ஏத்தாது அயர்த்து வாழ்த்தி வணங்காமல்; கீழ் நாள்கள் எல்லாம் கீழ் கழிந்த நாட்களை; வாளா இருந்து ஒழிந்தேன் வீணாக கழித்தேனே
therindhu uṇarvu knowledge which can be qualified as knowing truly; onṛu inmaiyāl lacking in it totally; thīvinaiyĕn ī, having cruel sins; agyānṛu during that time; karandha uruvin hiding the form (of a demon); ammānai that deceitful deer; pin thodarndha one who followed; āzhi am kai ammānai emperumān who had in his beautiful hand, the signet ring; ĕththādhu without praising; ayarththu being ignorant; kīzh nāl̤gal̤ellām in the days gone by; vāl̤ā irundhozhindhĕn ī had spent purposelessly