PTA 79

எப்பிறவி எடுத்தாலும் கண்ணனுக்கே யான் அடிமை

2663 உள்நாட்டுத் தேசன்றே! ஊழ்வினையையஞ்சுமே? *
விண்ணாட்டையொன்றாகமெச்சுமே? * - மண்ணாட்டில்
ஆராகி எவ்விழிவிற்றானாலும் * ஆழியங்கைப்
பேராயற்கு ஆளாம்பிறப்பு.
2663 ul̤ nāṭṭut tecu aṉṟe? * ūzhviṉaiyai añcume? *
viṇ nāṭṭai ŏṉṟu āka mĕccume? ** maṇ nāṭṭil
ār āki * ĕv izhiviṟṟu āṉālum * āzhi aṅkaip
per āyaṟku āl̤ ām piṟappu -79

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2663. Even those of low birth, whose occupations are despised, if they become the devotees of the god with a discus in his beautiful hand have no need to worry about the results of their karmā. This world in which they were born will be like the shining world of the gods for them— there is no need for them to go to the spiritual world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மண் நாட்டில் இந்த மண்ணுலகத்திலே; ஆர் ஆகி எப்பிறவியிலே பிறந்தவராயினும்; எவ் இழி விற்று எப்படிப்பட்ட இழிவான தொழில்; ஆனாலும் செய்பவரானாலும்; ஆழி அங்கை சக்கரத்தைக் கையிலுடைய; பேர் ஆயற்கு ஆயர் குலத்தில் பிறந்த கண்ணனுக்கு; ஆள் ஆம் அடிமைப்பட்டவர்களாக; பிறப்பு பிறக்கும் பிறப்பு; உள் நாட்டு பரமபதத்திலுள்ள; தேசு அன்றே? ஒளி போன்ற ஒளியுடையதன்றோ?; ஊழ் வினையை அநாதியான பாவங்களைக் குறித்து; அஞ்சுமே! அஞ்சவேண்டாம்; விண் நாட்டை சுவர்க்க லோகத்தை; ஒன்று ஆக ஒரு பொருளாக; மெச்சுமே? விரும்பக் கூடுமோ?
maṇṇāttil on this earth; ārāgi even if one were in lowly birth; evvizhi viṝānāgilum even if (he were) engaged in lowly profession [for a livelihood]; āzhi am kai pĕr āyaṛku to kaṇṇa (krishṇa) who holds the beautiful divine disc on his divine hand; āl̤ ām piṛappu birth which is apt to carry out servitude; ul̤ nāttu thĕsu anṛĕ is it not sacred similar to the resplendence of paramapadham which is very intimate (to emperumān)?; ūzh vinaiyai thinking of sins carried over since time immemorial; anjumĕ will it be fearful?; viṇṇāttai svarga (heaven); onṛāga mechchumĕ will it consider that as an entity?