PTA 71

அரியே ஆதிமூலம்

2655 இனிநின்று நின்பெருமை யானுரைப்பதென்னே? *
தனிநின்றசார்விலாமூர்த்தி! * - பனிநீர்
அகத்துலவு செஞ்சடையானாகத்தான் * நான்கு
முகத்தான் நின்னுந்திமுதல்.
2655 iṉi niṉṟu niṉ pĕrumai * yāṉ uraippatu ĕṉṉe? *
taṉi niṉṟa cārvu ilā mūrtti ** paṉi nīr
akattu ulavu * cĕñcaṭaiyāṉ ākattāṉ * nāṉku
mukattāṉ niṉ unti mutal-71

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2655. How can I describe your power? Shivā with beautiful jata stays in the left part of your body and Brahmā stays on a lotus on your navel, and there is no one to match you who do not depend on anything.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தனி நின்ற தானே அனைத்துக்கும் காரணமானவனும்; சார்வு வேறு ஒருவரும் தனக்கு ஆதாரமாக; இலா இல்லாதவனுமான; மூர்த்தி! நீயே முழுமுதற்கடவுள்; பனி நீர் அகத்து குளிர்ந்த கங்கையை; உலவு செஞ்சடையான் சடையில் கொண்டுள்ள சிவன்; ஆகத்தான் உன் திருமேனியை ஆச்ரயித்து வாழ்பவன்; நான்கு முகத்தான் பிரமனோ; நின் உந்தி முதல் உன் நாபிக் கமலத்தில் வாழ்பவன்; இனி நின் பெருமை இதற்கு மேல் உன் பெருமையை; யான் நின்று நான் முயன்று; உரைப்பது என்னே? உரைக்க என்ன இருக்கிறது?
thani ninṛa standing as a unique, causative factor, during the time of mahāpral̤ayam (great deluge); sārvu ilā not having anyone as a refuge for him; mūrththi ŏh my lord!; pani nīr agaththulavu having the cool gangā (river ṅanges) which is flowing inside; sem sadaiyān siva who has reddish matted hair; āgaththān resides in a corner of your divine form; nāngu mugaththān brahmā, who has four faces; nin undhi mudhal has your divine navel as the cause for his existence; ini when things are like these; yān ninṛu ī, taking efforts; nin perumai your greatness; uraippadhu ennĕ how to talk about?