PTA 22

திருமால் என் மனத்தில் குடிபுகுந்தார்

2606 காலேபொதத்திரிந்து கத்துவராமிந்நாள் *
மாலார்குடிபுகுந்தாரென்மனத்தே * - மேலால்
தருக்குமிடம்பாட்டினொடும் வல்வினையார்தாம் * வீற்
றிருக்குமிடம்காணாதிளைத்து.
2606 kāle pŏtat tirintu * kattuvarām iṉanāl̤ *
mālār kuṭipukuntār ĕṉ maṉatte ** melāl
tarukkum iṭampāṭṭiṉŏṭum * valviṉaiyār tām * vīṟṟu
irukkum iṭam kāṇātu il̤aittu -22

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2606. When Thirumāl entered my heart the karmā left that ruled me and made me suffer. My bad karmā shouts with sorrow as it runs away, unable to find a place to stay.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாலார் திருமால்; என் மனத்தே என் மனத்துள்ளே; குடி புகுந்தார் குடி புகுந்து நிறைந்துவிட்டார்; தாம் இதுவரை இங்கு குடியிருந்த; வல் வினையார் கொடிய பாபங்கள்; வீற்று இனிமேலும் அதிகாரம் செலுத்திக்கொண்டு; இருக்குமிடம் இருக்க இடம்; காணாது கிடைக்காததால்; காலே பொதத் திரிந்து கால்கள் நோகத் திரிந்து; மேலால் முன்பெல்லாம் என்னை; தருக்கும் துன்புறுத்திக் கொண்டிருந்த; இடம் பாட்டினொடும் பெருமையால்; இளைத்து இளைத்து; இனநாள் கத்துவராம் இப்போது கதறுகின்றன
mālār sarvĕṣvaran (supreme being) who is very great; en manaththĕ in my mind; kudi pugundhār came with his entourage; mĕlāl in earlier times; tharukkum tormenting; idam pāttinodum with arrogance; val vinaiyār cruel sins; thām vīṝirukkum idam kāṇādhu not finding a suitable place where then can live in comfort; il̤aiththu being without any strength; kālĕ podha thirindhu roaming all over the place such that their legs would split; ina nāl̤ in these times; kaththuvarām called out