PTA 61

தேவர்கள் திரிவிக்கிரமனையே பூசிப்பர்

2645 இறைமுறையான்சேவடிமேல் மண்ணளந்தஅந்நாள் *
மறைமுறையால் வானாடர்கூடி * - முறைமுறையின்
தாதிலகு பூத்தெளித்தாலொவ்வாதே * தாழ்விசும்பின்
மீதிலகித்தாங்கிடக்கும்மீன்.
2645 iṟai muṟaiyāṉ cevaṭimel * maṇ al̤anta an nāl̤ *
maṟai muṟaiyāl vāṉ nāṭar kūṭi ** muṟaimuṟaiyiṉ
tātu ilaku * pūt tĕl̤ittāl ŏvvāte * tāzh vicumpiṉ
mītu ilakit tāṉ kiṭakkum mīṉ? -61

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2645. When we see the shining stars in the sky, they look like flowers filled with pollen strewn by the gods in the sky as they recited the Vedās and worshiped his divine feet when he measured the world at the sacrifice of Mahābali.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாழ் விசும்பின் மீது தெளிந்த ஆகாசத்தில்; இலகித் தான் பிரகாசிக்கும்; கிடக்கும் மீன் நக்ஷத்திரங்களும்; வான் நாடர் வானுலகத்திலுள்ளாரெல்லாரும்; கூடி ஒன்று கூடி; மண் அளந்த அந் நாள் அக்காலத்தில் உலகளந்த; முறையான் முறைமையையுடைய; இறை எம்பெருமானின்; சேவடி மேல் சிவந்த திருவடிகளின் மேல்; மறை முறையால் வேதங்களிற் சொல்லிய விதிப்படி; தாது இலகு பூ தாதுக்களுடன் கூடின மலர்களை; முறை முறையின் முறை முறையாக; தெளித்தால் தெளித்தாற் போன்று; ஒவ்வாதே உள்ளனவன்றோ?
iṛai muṛaiyān one who has the relationship of being īṣvaran (controller) for us; maṇṇalandha when he measured the worlds (which are his possessions); annāl̤ during that time; thāzh visumbin mīdhu on the expansive sky; ilagi kidakkum mīn stars which are scattered over an expansive area, emitting lustre; vānādar celestial entities; kūdi together; muṛai muṛaiyin standing in an orderly way; maṛai muṛaiyāl in the method mentioned in the vĕdhas (sacred texts); sĕvadi mĕl on those divine feet; thādhu ilagu pū thel̤iththāl ovvādhĕ appear scatted like flowers which are lustrous due to their pollens