PTA 9

மனமே! திருமாலையே சிந்தித்திரு

2593 நுமக்கடியோமென்றென்று நொந்துதுரைத்தென்? * மாலார்
தமக்கு அவர்த்தாம்சார்வரியரானால் * - எமக்கினி
யாதானும் ஆகிடுகாண்நெஞ்சே! * அவர்திறத்தே
யாதானும்சிந்தித்திரு.
2593 numakku aṭiyom ĕṉṟu ĕṉṟu * nŏntu uraittu ĕṉ? * mālār
tamakku avar tām * cārvu ariyar āṉāl ** ĕmakku iṉi
yātāṉum * ākiṭu kāṇ nĕñce * avartiṟatte
yātāṉum cintittu iru-9

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2593. We said to him again and again, “We, your slaves, are suffering, ” but we still can’t approach him. O heart, let whatever will happen happen. Just live, thinking only of him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! மனமே!; மாலார் அவர் தாம் திருமாலான பெருமானை; சார்வு அரியர் நாம் அடையமுடியாதவர்களாக; ஆனால் இருந்தாலும்; நொந்து அவர் மனம் நோகும்படி; உரைத்து உரைத்து என்ன பயன்?; இனி எமக்கு இன்று முதலாக நமக்கு; யாதானும் எது வேண்டுமானாலும்; ஆகிடு காண் நேரட்டும்; மாலார் தமக்கு அந்த எம்பெருமானை நோக்கி; நுமக்கு உமக்கு; அடியோம் நாங்கள் அடிமைப்பட்டவர்கள்; என்று என்று என் என்று பல தடவை சொல்லி; அவர் திறத்தே அவனைக் குறித்தே நினைத்தே; யாதானும் எதையாவது; சிந்தித்து இரு சிந்தித்து இருப்போம்
nenjĕ ŏh mind!; avar thām he, the supreme entity; sārvu ariyar ānāl if he is not attainable; “numakku adiyŏm are we not servitors to you, the lord?”; enṛu enṛu saying this many times; nondhu feeling anguished; mālār thamakku for such a great entity; uraiththu en what is the purpose in saying?; emakku for us (who are his possession); ini from now onwards; yādhānum āgidu kāṇ let whatever happen; avar thiṛaththĕ towards him; yādhānum something or the other; sindhiththu iru keep meditating on