PTA 76

உலகளந்தவனே! உன்னை நினைப்பவர்க்கு அழிவில்லை

2660 உள்ளிலுமுள்ளந்தடிக்கும் வினைப்படலம் *
விள்ள, விழித்துன்னைமெய்யுற்றால் * - உள்ள
உலகளவும் யானும்உளனாவனென்கொலோ? *
உலகளந்தமூர்த்தி! உரை.
2660 ul̤l̤ilum ul̤l̤am taṭikkum * viṉaip paṭalam *
vil̤l̤a vizhittu uṉṉai mĕy uṟṟāl ** ul̤l̤a
ulaku al̤avum yāṉum * ul̤aṉ āvaṉ ĕṉkŏlo? *
ulaku al̤anta mūrtti urai -76

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2660. You have measured the world. When I think of you my heart throbs. If your grace touches my body, I will be happy and feel as if I have measured the world and the sky as you did. Tell me, what will happen to me?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உலகு அளந்த மூர்த்தி! உலகளந்த பெருமானே!; உன்னை உன்னை; உள்ளிலும் நினைத்த மாத்திரத்தில்; உள்ளம் தடிக்கும் மனம் பூரிக்கிறது; விழித்து உன் கடாக்ஷத்தால் அருளாலே; வினைப் படலம் பாபங்கள் என்னை விட்டு; விள்ள விலகி விட்டால்; மெய் பரமபதத்தில் உன்னை; உற்றால் அடைந்து விட்டேனாகில்; உள்ள நீ வியாபித்திருக்கிற; உலகு அளவும் உலகமெங்கும்; யானும் உளன் ஆவன் நானும் வியாபித்தவனாவேன்; என் கொலோ? இப்படி நான் கூறுவது நடக்கக்கூடியதா?; உரை நீயே சொல்லுவாய்
ulagu al̤andha mūrththy ŏh emperumān who mercifully measured all the worlds!; ul̤l̤ilum even if you are thought of; ul̤l̤am thadikkum mind puffs up [with pride]; vinaippadalam the bundle of sins; vil̤l̤a to go away (from me); vizhiththu bestowing with your grace; unnai meyyuṝāl if (ī am) able to envision you; yānum ī too; ul̤l̤a ulagal̤avum ul̤anāvan it appears that ī will permeate all over the worlds; en kolŏ how is this?; urai please tell (yourself)