PTA 32

தாமோதரனுக்கே அடிமை செய்

2616 தமக்கடிமைவேண்டுவோர் தாமோதரனார்
தமக்கு * அடிமைசெய்யென்றால் செய்யாது * - எமக்கென்று
தாம்செய்யுந்தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார் *
யாஞ்செய்வதிவ்விடத்திங்கியாது?
2616 tamakku aṭimai veṇṭuvār * tāmotaraṉār
tamakku * aṭimai cĕy ĕṉṟāl cĕyyātu ** ĕmakku ĕṉṟu
tām cĕyyum tīviṉaikke * tāzhvuṟuvar nĕñciṉār *
yām cĕyvatu ivviṭattu iṅku yātu? -32

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2616. Damodharan wishes me to serve him, but my heart would rather do evil deeds and live a wicked life. What can I do in this world to take away my karmā?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தமக்கு அடிமை தாம் அடிமையாயிருக்க; வேண்டுவார் ஆசைப்படும்; தாமோதரனார் தாம்பால் ஆப்புண்ட; தமக்கு பெருமானுக்கு; அடிமை செய் அடிமை செய்; என்றால் என்று சொன்னால்; நெஞ்சினார் என் நெஞ்சானது; செய்யாது செய்யாமல்; எமக்கு என் சொல் கேளாமல்; என்று சுதந்திரமாக திரியும்படி; தாம் செய்யும் தாம் செய்யும்; தீவினைக்கே தப்புக் காரியத்திலேயே; தாழ்வுறுவர் ஈடுபட்டிருக்கிறது; இவ்விடத்து இங்கு இப்படிப்பட்ட நிலையில்; யான் செய்வது யாது? நான் செய்யத்தக்கது யாது?
adimai being servile (towards those who are involved with him); thamakku vĕṇduvār one who desires it for himself; dhāmŏdharanār thamakku for dhāmôdhara (who had a scar to display to others, when he was tied down by yaṣŏdhā); adimai sey enṛāl if told to carry out service; seyyādhu not doing it; nenjinār my mind, the elderly person [āzhvār says this with derision]; emakku enṛu with stubbornness saying ‘ī will do what ī like’; thām seyyum what it does often; thīvinaikkĕ the activity of going away [from emperumān]; thāzhvuṛuvar will be interested in; ivvidaththu when things are like this; ingu in this world; yām seyvadhu yādhu what is there for us to do?