PTA 50

கண்ணனின் மனம் கடினமானதோ?

2634 பிரிந்தொன்றுநோக்காது தம்முடையபின்னே *
திரிந்துழுலும்சிந்தனையார்தம்மை * - புரிந்தொருகால்
ஆவா! எனவிரங்கார் அந்தோ! வலிதேகொல்? *
மாவைபிளந்தார்மனம்.
2634 பிரிந்து ஒன்று நோக்காது * தம்முடைய பின்னே *
திரிந்து உழலும் சிந்தனையார் தம்மை ** புரிந்து ஒருகால்
ஆஆ என இரங்கார் * அந்தோ வலிதேகொல் *
மா வாய் பிளந்தார் மனம்? 50
2634 pirintu ŏṉṟu nokkātu * tammuṭaiya piṉṉe *
tirintu uzhalum cintaṉaiyār tammai ** purintu ŏrukāl
āā ĕṉa iraṅkār * anto valitekŏl *
mā vāy pil̤antār maṉam? -50

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2634. My heart leaves me searching for where he is without looking for anything else and it runs behind anything with a dark color. In his heart he does not feel sorry for me. Does he who split open the mouth of the Asuran Kesi when he came as a horse that have such a cruel mind?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
பிரிந்து பெருமானை விட்டுப் பிரிந்து; ஒன்று வேறொன்றிலும்; நோக்காது கண் வைக்காமல்; தம்முடைய பின்னே அவன் கூடவே; திரிந்து உழலும் திரிந்துகொண்டிருக்கும்; சிந்தனையார் தம்மை என் நெஞ்சை; ஒருகால் ஒருக்காலும்; புரிந்து பரிவுடன் கூர்ந்து பார்த்து; ஆ ஆ! என ஆஹா என்று; இரங்கார் அன்பு காட்டுவதில்லை; அந்தோ! மா அந்தோ! கேசி என்னும் குதிரையின்; வாய் வாயை; பிளந்தார் மனம்? பிளந்த பெருமானின் நெஞ்சு; வலிதே கொல்? வன்மையானதோ?
pirindhu other than self [emperumān]; onṛu nŏkkādhu not thinking of anything else; thammudaiya pinnĕ going behind him; thirindhu uzhalum roaming, and tottering; sindhanaiyār thammai my mind; oru kāl even once; purindhu showering mercy; ā ā [āvā] ena saying “ŏh my! ḥow sad!”; irangār he is not showing any consideration; andhŏ ŏh my!; mā vāy pil̤andhār manam the mind of emperumān who tore the mouth of demon kĕṣi, who came in the form of a horse; validhĕ kol how did it become so hardened?