PTA 49

கருநிறப் பொருள்கள் கண்ணனையே நினைவூட்டும்

2633 கொண்டல்தான்மால்வரைதான் மாகடல்தான் கூரிருள் தான் *
வண்டறாப்பூவைதான் மற்றுத்தான் * - கண்டநாள்
காருருவம் காண்தோறும்நெஞ்சோடும் * கண்ணனார்
பேருருவென்றெம்மைப்பிரிந்து.
2633 kŏṇṭal tāṉ māl varai tāṉ * mā kaṭal tāṉ kūr irul̤ tāṉ *
vaṇṭu aṟāp pūvai tāṉ maṟṟuttāṉ ** kaṇṭa nāl̤
kār uruvam * kāṇtoṟum nĕñcu oṭum * kaṇṇaṉār
per uru ĕṉṟu ĕmmaip pirintu -49

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2633. Whenever I see clouds, a dark mountain, the dark ocean, deep darkness, puvai flowers always swarming with bees or anything else that is dark-colored, my heart, thinking it has seen his wonderful dark form, leaves me and runs there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொண்டல் தான் மேகங்களையும்; மால் வரை தான் பெரிய மலைகளையும்; மா கடல் தான் பெருங்கடலையும்; கூர் இருள் தான் செறிந்த இருளையும்; மற்றுத்தான் கார் மற்றுமுள்ள கருத்த; உருவம் உருவங்களையும்; கண்ட நாள் பார்க்கும் போதெல்லாம் என்மனம்; கண்ணனார் கண்ணனின் அழகிய; பேர் உரு என்று உருவம் என்று எண்ணும்; வண்டு அறா தேனைப் பருகும் வண்டுகள்; பூவை தான் அமரும் பூவை; காண் தோறும் பார்க்கும் போது; நெஞ்சு என் மனம்; கண்ணனார் கண்ணனின் திருமேனி என்று; எம்மைப் பிரிந்து என்னைப் பிரிந்து; ஓடும் அங்கே ஓடும்
koṇdaldhān the clouds; mālvaraidhān the huge mountains; mākadaldhān the vast oceans; kūrirul̤dhān the dense darkness; vaṇdu aṛā pūvaidhān the pūvai tree (bilberry) from whose flowers the beetles will never leave; maṝum kār uruvam thān other objects which are dark in complexion; kaṇda nāl̤ on days when they are seen; kāṇdhŏṛum whenever they are seen; nenju my heart; kaṇṇanār pĕr uru enṛu thinking (this is) kaṇṇa’s (krishṇa’s) huge physical form; emmai us; pirindhu ŏdum vittu will run (towards him), leaving [us]