PTA 6

கண்ணா! என்னைக் கைவிடப் பார்க்கிறாயா?

2590 நெறிகாட்டி நீக்குதியோ? * நின்பால்கருமா
முறிமேனிகாட்டுதியோ? * மேல்நாள் - அறியோமை
எஞ்செய்வானெண்ணினாய்? கண்ணனே! * ஈதுரையாய்
என்செய்தாலென்படோம்யாம்?
2590 nĕṟi kāṭṭi nīkkutiyo? * niṉpāl karu mā
muṟi meṉi kāṭṭutiyo? * mel nāl̤ aṟiyomai **
ĕṉ cĕyvāṉ ĕṇṇiṉāy? kaṇṇaṉe * ītu uraiyāy
ĕṉ cĕytāl ĕṉ paṭom yām? -6

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2590. Will you show me the right path and guide me? Will you show your tender dark body to me, your innocent devotee? Dear Kannan, tell me what you want to do with me. Whatever you do to me, I will think it is for my good.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்ணனே! எம்பெருமானே!; நெறி காட்டி ஞானம் முதலிய உபாயங்களைக்காட்டி; நின்பால் உன்னைவிட்டு; நீக்குதியோ? நீக்கிவிட பார்க்கிறாயோ?; கரு மா கறுத்த பெரிய; முறி மேனி தளிர் போன்ற மேனி; காட்டுதியோ? அழகைக் காட்டி என்னை ஆட்கொள்வாயோ?; மேல் நாள் நெடுங்காலமாக; அறியோமை அறியாமையில் உழலும்; என் செய்வான் என்னை என்ன செய்வதாக; எண்ணினாய் நினைத்திருக்கிறாய்; ஈது தங்களின் எண்ணம்; உரையாய் என்ன என்பதை கூறுக; என் செய்தால் நான் உனக்கு ஆட்படுவதைத் தவிர; என் படோம் யாம் வேறு எந்த தீயவற்றையும் செய்யோம்
kaṇṇanĕ ŏh my swāmy (lord) who incarnated as krishṇa!; neṛi kātti showing (other) means; nin pāl nīkkudhiyŏ will you remove (me) from you?; (nin pāl) karu mā muṛi mĕni your blackish divine form which is like a tender mango leaf; kāttudhiyŏ will you show?; mĕl nāl̤ since time immemorial; aṛiyŏmai ī, who am ignorant; en seyvāṇ eṇṇināy what do you propose to do?; īdhu uraiyāy tell us the words (mā ṣucha:); en seydhāl whatever beneficial acts which you do; yām en padŏm (if you leave the act of protecting us, to us) what troubles will we not create?