PTA 44

திருமாலை வாழ்த்தாமல் இருப்பது பாவம்

2628 வகைசேர்ந்தநல் நெஞ்சும் நாவுடையவாயும் *
மிகவாய்ந்துவீழாவெனிலும் * - மிகவாய்ந்து
மாலைத்தாம் வாழ்த்தாதிருப்பர்இதுவன்றே? *
மேலைத்தாம் செய்யும்வினை.
2628 vakai cernta nal nĕñcum * nā uṭaiya vāyum *
mika vāyntu vīzhā ĕṉilum ** mika āyntu
mālait tām * vāzhttātu iruppar itu aṉṟe *
melait tām cĕyyum viṉai? -44

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2628. There are people who do not wish to praise him who is adorned with a thulasi garland even though their good hearts and their tongues would like to. Is that because they have done bad karmā in a past life?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வகை சேர்ந்த ஞானமார்க்கத்திற்கு வழியாக; நல் நெஞ்சும் நல்ல நெஞ்சும்; நா உடைய எம்பெருமானை துதிக்க நாவோடு; வாயும் கூடின வாயும்; மிக வாய்ந்து இருந்தும்; தாம் மிக ஆய்ந்து மனிதர்கள் ஆராய்ந்து; வீழா எனிலும் பெருமானை அனுபவிக்காவிட்டாலும்; மாலை திருமாலை; வாழ்த்தாது வாழ்த்தாமல்; இருப்பர் இருக்கிறார்கள்; தாம் மேலும் தாங்கள்; செய்யும் வினை செய்யும் பாபங்கள்; மேலை வரும் காலத்தையும்; இது வன்றே வீணாக்குமன்றோ?
vagai sĕrndha that which has come as the path (for manifesting knowledge); nal nenjum superior mind; nāvu udaiya having tongue; vāyum mouth too; miga vāyndhu involving deeply; vīzhā enilum even if they do not attain (emperumān); miga āyndhu taking lot of troubles; mālai sarvĕṣvaran (lord of all); thām vāzhththādhiruppār samsāris will not praise emperumān; mĕlai since time immemorial; thām seyyum vinai the result of their sins; idhu anṛĕ is it not this?