PTA 69

திருமாலையே யான் சிந்திப்பேன்

2653 அகஞ்சிவந்தகண்ணினராய் வல்வினையராவார் *
முகஞ்சிதைவராமன்றே? முக்கி * - மிகுந்திருமால்
சீர்க்கடலையுள்பொதிந்த சிந்தனையேன்தன்னை *
ஆர்க்கு அடலாம் செவ்வேயடர்த்து?
2653 akam civanta kaṇṇiṉar āy * valviṉaiyar āvār *
mukam citaivarām aṉṟe mukki ** mikum tirumāl
cīrk kaṭalai ul̤ pŏtinta * cintaṉaiyeṉ taṉṉai *
ārkku aṭal ām cĕvve aṭarttu?-69

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2653. I praised the highest ocean-colored Thirumāl and he gave me his grace and entered my heart. The bad karmā that was in my heart grew angry and, red-faced and frustrated, left me. No one can come and trouble me anymore.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வல்வினையர் ஆவார் கடுமையான பாவங்களானவை; அகம் தங்கள் இடத்தை இழந்ததின் கோபத்தினால்; சிவந்த உள்ளே சிவந்த; கண்ணினர் ஆய் கண்களையுடையவனாய்; முக்கி முகம் வருந்தி முகம்; சிதைவராம் அன்றே வாடியிருக்கின்றனவோ?; மிகும் எல்லோரைக்காட்டிலும்; திருமால் மேம்பட்டவரான திருமாலின்; சீர்க் கடலை கல்யாண குணங்களாகிற கடலை; உள் பொதிந்த உள்ளே அடக்கிக் கொண்ட; சிந்தனையேன் சிந்தனையை; தன்னை உடைய என்னை; செவ்வே அடர்த்து இனி செவ்வையாக நெருக்கி; ஆர்க்கு அடல் ஆம்? யாரால் என்னை துன்பப்படுத்த முடியும்?
valvinaiyar āvār cruel sins; agam sivandha kaṇṇinarāy having reddish eyes, inside; mukki feeling sorrowful; mugam sidhaivarām anṛĕ wouldn’t the face droop?; migum thirumāl̤ the great consort of ṣrī mahālakshmi; sīr kadalai ocean of auspicious qualities; ul̤ podhindha having taken in; sindhanaiyĕn thannai me, who has such mind; sevvĕ adarththu pressing tightly; aṛkku adalām who can trouble?