PTA 12

மனமே! கண்ணன் தாள் வாழ்த்து

2596 நீயன்றேயாழ்துயரில் வீழ்விப்பான்நின்றுழன்றாய்? *
போயொன்றுசொல்லியென்? போநெஞ்சே! * - நீயென்றும்
காழ்த்துபதேசம்தரினும் கைகொள்ளாய் * கண்ணன்தாள்
வாழ்த்துவதேகண்டாய்வழக்கு.
2596 nī aṉṟe āzh tuyaril * vīzhvippāṉ niṉṟu uzhaṉṟāy *
poy ŏṉṟu cŏlli ĕṉ? po nĕñce ** nī ĕṉṟum
kāzhttu upatecam tariṉum * kaikkŏl̤l̤āy * kaṇṇaṉtāl̤
vāzhttuvate kaṇṭāy vazhakku-12

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2596. O heart, you immerse me in an ocean of sorrow, and if I say you shouldn’t, what is the use? Whatever I tell you, you don’t listen. The only right thing is to worship the feet of Kannan.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! ஓ மனமே!; ஆழ் துயரில் துக்க ஸாகரத்தில்; வீழ்விப்பான் என்னைத் தள்ள; நின்று இடைவிடாது; உழன்றாய் முயன்று உழல்வது; நீ அன்றே நீ அன்றோ?; போய் ஒன்று நானும் நீயும்; சொல்லி என்? போ நீ விவாதிப்பதில் என்ன பயன்?; தரினும் பெருமானுக்கு நம்மீது கருணை உண்டு; உபதேசம் என்று நான் உபதேசித்தாலும்; காழ்த்து என்றும் என் மேல் உள்ள கோபத்தால் நீ; கை கொள்ளாய் நான் சொல்வதை ஏற்கப்போவதில்லை; கண்ணன் தாள் கண்ணன் திருவடிகளை; வாழ்த்துவதே பற்றுவது தான் நம் கடமை என்பதை; கண்டாய் வழக்கு தெரிந்துகொள்
nenjĕ ŏh [my] mind!; āzh thuyaril in deep sorrow; vīzhvippān to push (me); ninṛu uzhanṛāy one who made perennial efforts; nī anṛĕ was it not you?; pŏy repeatedly; onṛu solli by saying one word; en what is the purpose?; leave this; upadhĕsam tharinum even if ī instruct you (about emperumān’s simplicity); you; kāzhththu getting angry (with me); enṛum kaikkol̤l̤āy you do not recognise (that instruction); kaṇṇan thāl̤ the divine feet of krishṇa; vāzhththuvadhĕ to keep praising; vazhakku kaṇdāy is appropriate for us, please see