PTA 14

மனமே! தீவினையைச் சேராதே

2598 சாயால்கரியானை உள்ளறியாராய்நெஞ்சே! *
பேயார்முலைகொடுத்தார்பேயராய் * - நீயார்? போய்த்
தேம்பூண்சுவைத்து ஊனறிந்தறிந்தும் * தீவினையாம்
பாம்பார்வாய்க்கைநீட்டல்பார்த்தி.
2598 cāyāl kariyāṉai * ul̤ aṟiyārāy nĕñce *
peyār mulai kŏṭuttār peyar āy ** nī yār? poyt
tempu ūṇ cuvaittu * ūṉ aṟintu aṟintum * tīviṉai ām
pāmpār vāyk kain nīṭṭal pārtti -14

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2598. O heart, the devil Putanā did not know the power of the dark god, and gave her milk to him, but he killed her. You know that if you fall into the enjoyments of your senses they will hurt you, but still you want to enjoy them and collect bad karmā. It is as if you were putting your hand into a snake pit.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! ஓமனமே!; பேயார் பூதனை; சாயால் கரியானை நிறத்தால் கருத்த கண்ணனின்; உள் அறியாராய் குணங்களை அறியாதவளாய்; பேயர் ஆய் அறிவு கெட்டவளாய்; முலை கொடுத்தார் விஷப்பாலைக் கொடுத்தாள்; நீ யார்? உனக்கும் அவளுக்கும் பொருத்தம் உண்டோ?; தேம்பு ஊண் புலன்களின் போகங்களை; சுவைத்து நீ அனுபவித்து; ஊன் அறிந்து அதனால் ஊனமடைந்திருப்பதை; அறிந்தும் நன்கு அறிந்தும்; போய் நீ பகவானை அனுபவிக்க விரும்புகிறாயே; தீவினை ஆம் தீவினை விளைவிக்கும் உன் முயற்சி; பாம்பார் வாய் பாம்பின் வாயில்; கை நீட்டல் பார்த்தி கை நீட்டுவது போல் உள்ளது
nenjĕ ŏh my mind!; sāyāl kariyānai krishṇa, who is dark in complexion; ul̤ aṛiyārāy not knowing how to enjoy, after entering; pĕyār pūthanā, the fiend; pĕyarāy mulai koduththār being a fiend, she offered her (poisoned) bosom; pŏy going repeatedly; thĕmbu ūṇ suvaiththu enjoying ṣabdha (sound) etc which keep eroding the āthmā (soul); ūṇ aṛindhum aṛindhum even after knowing the result; thīvinaiyām pāmbār vāy inside the mouth of the snake samsāram (materialistic realm) which nurtures only evil qualities; kai nīttal pārththi you are trying to put out your hand; nī yār how lowly are you (in comparison with pūthanā)?