PTA 40

பூதனையைக் கொன்ற கண்ணனை வாழ்த்து

2624 வாய்ப்போஇதுவொப்ப மற்றில்லைவாநெஞ்சே! *
போய்ப்போஒய்வெந்நரகில்பூவியேல் * - தீப்பால
பேய்த்தாய் உயிர்கலாய்ப்பாலுண்டு * அவளுயிரை
மாய்த்தானை வாழ்தேவலி.
2624 vāyppo itu ŏppa * maṟṟu illai vā nĕñce *
poyp poŏy * vĕm narakil pūviyel ** tīp pāla
peyt tāy * uyir kalāyp pāl uṇṭu * aval̤ uyirai
māyttāṉai vāzhtte vali -40

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2624. O heart! There is no other opportunity for us like this one to praise his power and fame. You will not be pushed into cruel hell if you worship him who drank the milk of the devil Putanā and killed her when she came as a mother. Praising him will give you true strength.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வா நெஞ்சே! வாராய் மனமே!; இது ஒப்ப இப்போது கிடைத்திருக்கும்; வாய்ப்போ வாய்ப்பை; மற்று போன்ற சிறந்த வாய்ப்பு; இல்லை நமக்கு கிடைக்காது; வெம் இதைத் தவற விட்டால் கொடிய; நரகில் நரகத்துக்கு போக; பூவியேல் நேரிடும் ஆகையால் நழுவ விடாதே; தீப் பால தீய எண்ணங்களுடன்; பேய்த் தாய் தாய் போல் வந்த பூதனையின்; உயிர் பால் கலாய் உயிரை பாலுடன் சேர்த்து; உண்டு அவள் உயிரை உண்டு அவள் உயிரை; மாய்த்தானை மாய்த்த எம்பெருமானை; வாழ்த்தே வலி வாழ்த்தி வணங்குவதே நமக்கு வலிமை தரவல்லது
vā nenjĕ ŏh heart! Come [and hear me]; idhu oppa equivalent to this; vāyppu opportunity; maṝu illai there is none; pŏyppŏy separating a great deal; vennaragil in the cruel hell (of separation); pūviyĕl do not make me enter; thīppāla one who had cruel nature; pĕy thāy the demon pūthanā, who had the form of a loving mother; uyir (her) life; pāl kalāy uṇdu drinking after mixing it with milk; aval̤ uyirai māyththānai one who destroyed her life; vāzhththĕ praising; vali is strength (for us)