PTA 62

மண்ணளந்த மாலே பிணிக்கு மருந்து

2646 மீனென்னுங்கம்பில் வெறியென்னும் வெள்ளிவேய் *
வானென்னும் கேடிலாவான்குடைக்கு * - தானோர்
மணிக்காம்புபோல் நிமிர்ந்து மண்ணளந்தான் * நங்கள்
பிணிக்காம்பெருமருந்துபின்.
2646 mīṉ ĕṉṉum kampil * vĕṟi ĕṉṉum vĕl̤l̤i vey *
vāṉ ĕṉṉum keṭu ilā vāṉ kuṭaikku ** tāṉ or
maṇik kāmpu pol * nimirntu maṇ al̤antāṉ * naṅkal̤
piṇikku ām pĕru maruntu piṉ -62

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2646. The faultless sky is an umbrella that protects the earth, the stars are like its shining decorations, and the moon is its silver base. When he grew tall and measured the world he looked like a pole holding up the umbrella that is the sky. He is the best remedy for all our troubles.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மீன் என்னும் நக்ஷத்திரங்கள் என்னும்; கம்பில் இலைக் கம்புகளையுடையதும்; வெறி என்னும் சந்திரனென்னும்; வெள்ளி வேய் வெள்ளிக் குழையை உடையதும்; கேடு இலா ஒரு நாளும் அழிவில்லாத; வான் என்னும் ஆகாசமென்னும்; வான் குடைக்கு ஆகாயக் குடைக்கு; ஓர் மணி ஒப்பற்ற நீல மணி மயமான; காம்பு போல் காம்பு போல; நிமிர்ந்து நிமிர்ந்து வளர்ந்து; தான் மண் அளந்தான் உலகளந்த பெருமான்; பின் மேலுள்ள காலமெல்லாம்; நங்கள் நம்முடைய சம்ஸாரமாகிற; பிணிக்கு வியாதிக்கு; பெரு மருந்து ஆம் சிறந்த மருந்தாவான்
mīn ennum kambil in the rods of stars; veṛi vel̤l̤i ennum vĕy having moon, the king of stars and Venus as the spokes; vān ennum having the name of sky; kĕdilā vān kudaikku for the indestructible, huge umbrella; thān he (as thrivikrama); ŏr maṇi kāmbu pŏl nimirndhu as a unique handle with blue gem; maṇ al̤andhān measured the worlds; pin beyond that; nangal̤ piṇikku for our disease (of samsāram); peru marundhu ām is a great medicine