PTA 4

கண்ணனுக்கு அடிமையான என்னினும் சிறந்தவர் இல்லை

2588 என்னின்மிகுபுகழார்யாவரே? * பின்னையும்மற்
றெண்ணில் மிகுபுகழேன்யானல்லால் * - என்ன
கருஞ்சோதிக் கண்ணன், கடல்புரையும் * சீலப்
பெருஞ்சோதிக்குஎன்னெஞ்சாள்பெற்று.
2588 ĕṉṉiṉ miku pukazhār yāvare? * piṉṉaiyum maṟṟu
ĕṇ il * miku pukazheṉ yāṉ allāl ** ĕṉṉa
karuñ cotik * kaṇṇaṉ kaṭal puraiyum * cīlap
pĕruñcotikku ĕṉ nĕñcu āṭpĕṟṟu -4

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2588. My heart has become a slave to the dark shining ocean-colored Kannan. If I think about it, I am most fortunate and I have a good name. Who could there be more fortunate than I?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கருஞ் சோதி ஒளிமிகுந்த கருத்த நிறமுடைய; கடல் புரையும் கடல் போன்ற கம்பீரமானவன்; சீல சீல குணமுடையவன்; கண்ணன் என்ன கண்ணன் என்னுடையவன்; பெருஞ்சோதிக்கு பெரும் சோதி வடிவமானவனுக்கு; என் நெஞ்சு ஆள்பெற்று என் மனம் அடிமைப் பட்டது; என்னின் மிகு என்னைக் காட்டிலும் மிகுந்த; புகழார் யாவரே? பேறு பெற்றவர் யார்?; மற்று பின்னையும் மேலும் மறுபடியும்; எண்ணில் எண்ணிப் பார்த்தால்; அல்லால் என்னைத் தவிர வேறு யாருமில்லை; மிகு புகழேன் யான் நானே மிக்க புகழுடையவன்
enna being mine; karum sŏdhi kaṇṇan krishṇa with black complexion; kadal puraiyum seelam having the inherent quality of ocean; perum sŏdhikku to you who are having great radiance; en nenju my mind; āl̤ peṝu became a servitor; maṝu eṇṇil if one were to analyse; migu pugazhĕn yān allāl only ī have great fame and none else; pinnaiyum more than that; ennil more than ī; migu pugazhār having more fame; yāvarĕ who else is there?