PTA 56

மாயவர் காட்டும் வழியே இனிய வழி

2640 வரவாறொன்றில்லையால் வாழ்வினிதால் * எல்லே!
ஒருவாறு ஒருவன்புகாவாறு * - உருமாறும்
ஆயவர்தாம்சேயவர்தாம் அன்றுலகம்தாயவர்தாம் *
மாயவர்தாம்காட்டும்வழி.
2640 varavu āṟu ŏṉṟu illaiyāl * vāzhvu iṉitāl * ĕlle!
ŏru āṟu ŏruvaṉ pukāvāṟu ** uru māṟum
āyavar tām ceyavar tām * aṉṟu ulakam tāyavar tām *
māyavar tām kāṭṭum vazhi -56

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2640. There are no troubles in the lives of his devotees after he has entered their hearts. He came to the world in many forms, as a cowherd, as a god in the sky and as a dwarf who measured the sky and the earth at Mahābali’s sacrifice. He, the Māyavan, shows the way to all.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சேயவர் அசுரர்களால் அணுக முடியாத; தாம் எம்பெருமான்; அன்று உலகம் முன்பு உலகங்களை; தாயவர் தாம் தாவி அளந்தான்; மாயவர் தாம் மாயவனான பெருமான்; காட்டும் வழி காட்டுகிற உபாயம்; வரவு ஆறு ஒன்று இன்ன வழியாக வந்ததென்று; இல்லையால் ஒருவராலும் அறிய முடியாது ஆனால்; வாழ்வு இனிதால் பலனோ இனிதாகவே இருக்கும்; எல்லே! என்ன ஆச்சர்யம்!; ஒரு ஆறு ஒருவன் ஒரு அடியவன் எந்த உபாயத்தையும்; புகாவாறு பற்றாதபடி அவன் காரியத்தை தானே ஏற்று; உரு மாறும் நடத்த தன் உருவத்தையும் மாற்றி கொள்பவன்; ஆயவர் தாம் அந்த ஆயர்குலத்தில் பிறந்த கண்ணன்
oru āṛu in any means; oruvan any jīvāthmā (sentient entity); pugāvāṛu not allowing to enter; uru māṛum transforming his basic nature and qualities; āyavar thām as krishṇa who was born in the clan of cowherds; sĕyavar thām being at a far away distance (for dhuriyŏdhana et al); anṛu at one point in time; ulagam thāyavar thām one who measured all the worlds; māyavar thām emperumān who is an amaśing entity; kāttum vazhi the means that he showed; vara āṛu the way it came; onṛu illaiyāl nothing is manifesting; vāzhvu indhāl (our) life is very sweet; ellĕ how amaśing is this!