PTA 38

மாயனைத் துதித்துப் பாவத்தைப் போக்குக

2622 அமைக்கும்பொழுதுண்டே? ஆராயில்நெஞ்சே! *
இமைக்கும்பொழுதும் இடைச்சி - குமைத்திறங்கள் *
ஏசியேயாயினும் ஈன்துழாய்மாயனையே *
பேசியேபோக்காய்பிழை.
2622 amaikkum pŏzhutu uṇṭe * ārāyil nĕñce *
imaikkum pŏzhutum? iṭaicci kumaittiṟaṅkal̤ **
eciye āyiṉum * īṉ tuzhāy māyaṉaiye *
peciye pokkāy pizhai -38

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2622. O heart, do not worry about how to spend your time. Think about the time Yashodā hit him and scolded him, and even if you cannot do that, speak about Māyan adorned with a thulasi garland. Your karmā will go away and you will be saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! ஓ மனமே!; ஆராயில் ஆராய்ந்து பார்த்தால்; இமைக்கும் ஒரு வினாடி; பொழுதும் பொழுதும்; அமைக்கும் பொழுது வீண் பொழுதாக; உண்டே? போக்க முடியுமோ?; இடைச்சி யசோதையின் கையில் அகப்பட்ட; குமைத்திறங்கள் கண்ணனின் எளிய குணங்களை; ஏசியே ஆயினும் ஏசிப் பேசியாவது; ஈன் துழாய் இனிமையான துளசி மாலை; மாயனையே அணிந்த பெருமானை; பேசியே பேசி வணங்கியே; பிழை உன் பாபங்களை; போக்காய் போக்கிக் கொள்வாய்
nenjĕ ŏh heart!; ārāyil if we analyse; īamikkum pozhudhum even during the time of winking; amaikkum pozhudhuṇdĕ do we have the time to keep quiet?; īdaichchi the cowherd lady, yaṣŏdhā; kumai thiṛangal̤ the ways in which she punished (krishṇa); ĕsiyĕ āyinum even if you speak abusively; īn thuzhāy māyanaiyĕ the amaśing entity having thul̤asi garland; pĕsiyĕ pŏkkāy you are not passing your time by meditating on him; pizhai (what you are doing is) incorrect.