PTA 59

அரவணையானையே சிந்தியுங்கள்

2643 மாடே வரப்பெறுவராமென்றே * வல்வினையார்
காடானுமாதானும் கைக்கொள்ளார் * - ஊடேபோய்ப்
பேரோதம்சிந்து திரைக்கண்வளரும் * பேராளன்
பேரோதச்சிந்திக்கப்பேர்ந்து.
2643 māṭe varappĕṟuvarām ĕṉṟe * valviṉaiyār
kāṭāṉum ātāṉum kaikkŏl̤l̤ār ** ūṭe poyp
per otam cintu * tiraik kaṇval̤arum * perāl̤aṉ
per ota cintikka perntu? -59

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2643. As soon as I recited the names of the generous lord who rests on the ocean with rolling waves I thought my karmā would go away and hide in a forest. Nothing like that happened. Does my karmā think it can still remain with me?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேர் ஓதம் சிந்து பரந்த கடலில் சிதறி விழும்; திரைக் ஊடேபோய் அலைகளின் நடுவே; கண்வளரும் கண்வளரும்; பேராளன் பெருமானின்; பேர் திருநாமங்களை; ஓத அனுஸந்திக்க வேண்டும்; சிந்திக்க என்று நினைத்த மாத்திரத்திலே; வல்வினையார் கொடிய பாவங்கள்; பேர்ந்து நம்மைவிட்டுக் கிளம்பி; காடானும் காடுகளிலோ மற்றேதுமோர்; ஆதானும் இடத்திலோ போய்; கைக்கொள்ளார் சேராமல் இங்கேயே இருக்கின்றனவே; மாடே வரப்பெறுவராம் இன்னமும் இங்கேயே வாழலாம்; என்றே? என்ற எண்ணமோ?
pĕr ŏdham huge ocean; thirai (agitating) waves; ūdĕ pŏy sindhu scattering, close-by; kaṇval̤arum reclining, as if sleeping; pĕrāl̤an one who has greatness; pĕr ŏdha to recite his divine names; sindhikka the moment one thinks; valvinaiyār sins who are very powerful; pĕrndhu leaving (us); kādānum either forest; ādhānum or some other place; kaikkol̤l̤ār they do not attain; mādĕ near us (just like before); varap peṛuvarām enṛĕ is it due to the desire to attain us?