PTA 26

இறைவன் அருளால் தீவினையை நீக்கினோம்

2610 யானும்என்னெஞ்சும் இசைந்தொழிந்தோம் * வல்வினையைக்
கானும்மலையும் புகக்கடிவான் * - தானோர்
இருளன்னமாமேனி எம்மிறையார்தந்த *
அருளென்னும்தண்டாலடித்து.
2610 yāṉum ĕṉ nĕñcum icaintŏzhintom * valviṉaiyaik
kāṉum malaiyum pukak kaṭivāṉ ** tāṉ or
irul̤ aṉṉa mā meṉi * ĕm iṟaiyār tanta *
arul̤ ĕṉṉum taṇṭāl aṭittu -26

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2610. His beautiful body is like dark night. His grace is like a club that can hit and remove my bad karmā. I and my heart decided to cross the forest and the hills of my bad karmā by worshiping him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஓர் இருள் தான் அன்ன இருளே வடிவெடுத்த அழகிய; மா மேனி திருமேனியுடைய எம்பெருமானுக்கு; யானும் என் நெஞ்சும் நானும் என் மனமும்; இசைந்து ஒழிந்தோம் இசைந்து ஆட்பட்டோம்; எம் இறையார் தந்த எம்பெருமான் அளித்த; அருள் என்னும் அருள் என்னும்; தண்டால் அடித்து ஒரு கொம்பால் அடித்து; வல்வினையை என் கொடிய பாபங்களை; கானும் மலையும் காடுகளிலும் மலைகளிலும்; புகக் கடிவான் புகும்படி துரத்தினோம்
ŏr irul̤ thān anna it is as if darkness took a form; māmĕni having a great divine form; em iṛaiyār emperumān; thandha gave; arul̤ ennum thaṇdāl the stick of (that emperumān’s) mercy; adiththu beating; val vinaiyai (our) cruel sins; kānum malaiyum puga to enter forest sand mountains; kadivān to drive away; yānum en nenjum my mind and ī; isaindhu ozhindhŏm have agreed