PTA 78

இராமனின் பண்புகளையே ஊணாக உண்

2662 துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும் * சுற்றத்
திணைநாளும் இன்புடைத்தாமேலும் * - கணைநாணில்
ஓவாத்தொழிற்சார்ங்கன் தொல்சீரைநல்நெஞ்சே! *
ஓவாதவூணாகவுண்.
2662 tuṇai nāl̤ pĕruṅ kil̤aiyum * tŏl kulamum * cuṟṟattu
iṇai nāl̤um iṉpu uṭaittāmelum ** kaṇai nāṇil
ovāt tŏzhil cārṅkaṉ * tŏl cīrai nal nĕñce *
ovāta ūṇāka uṇ -78

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2662. O good heart, you feel happy that you have a large family, an ancient lineage and other friends, but none are permanent. Praise the heroism of the lord who shot arrows from his bow unceasingly and conquered all his enemies. That is how you will have strength.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
துணை நண்பர்களும்; நாள் வாழ்க்கையும்; பெருங் கிளையும் குடும்பத்தினரும்; தொல் குலமும் நல்ல குலமும்; சுற்றத்து உறவினர்களுடன்; இணை இணைந்திருத்தலும் இவை அனைத்தும்; நாளும் எப்போதும் ஆனந்தத்தையே; இன்பு அளிக்கவல்லவை; உடைத்தாமேலும் என்று வைத்துக் கொண்டாலும்; நல் நெஞ்சே! நல்ல மனமே! நீ இவற்றில் ஆசை கொள்ளாதே; கணை நாணில் ஓவா வில்லில் நாண் ஏற்றி; தொழில் வீரத்தொழில் செய்யும்; சார்ங்கன் சார்ங்கத்தையுடைய; தொல் சீரை ராமபிரானின் நற்குணங்களையே; ஓவாத இடைவிடாத போக்யமான பக்தியாகிய; ஊணாக உண் உணவாகக் கொள்வாய்
thuṇai nāl̤ companionship (from friends) and longevity; perum kil̤aiyum relatives in large numbers; thol kulamum birth in an ancient clan; suṝaththu iṇai togetherness of relatives; nāl̤um at all times; inbudaiththām ĕlum even if they are sweet; kaṇai nāṇil ovāththozhil having arrows constantly on the drawn bow (in order to protect followers), ready for action; sārngan one who controls the bow called as sārngam; thol sīrai ancient, auspicious qualities; nal nenjĕ ŏh my heart, which is favourable to me; ŏvādha without any hurdle; ūṇāga as a food to be enjoyed; uṇ enjoy