தனியன் / Taniyan

பெரியதிருவந்தாதி தனியன்கள் / Periya Thiruvandāthi taṉiyaṉkal̤

முந்துற்ற நெஞ்சே! முயற்றி தரித்துரைத்து *
வந்தித்து வாயார வாழ்த்தியே * - சந்த
முருகூருஞ்சோலசூழ் மொய் பூம் பொருநல் *
குருகூரன் மாறன் பேர் கூறு

muntuṟṟa nĕñce! muyaṟṟi taritturaittu *
vantittu vāyāra vāḻttiye * - canta
murukūruñcolacūḻ mŏy pūm pŏrunal *
kurukūraṉ māṟaṉ per kūṟu
எம்பெருமானார் / ĕmpĕrumāṉār

Word by word meaning

தரித்து உற்சாகத்துடன்; முந்துற்ற நல்ல விஷயங்களை நாடும்; நெஞ்சே! மனமே! நான் உனக்கு இப்போது; முயற்றி கூறப்போகும் விஷயத்தை; உரைத்து என் நிலையை ஆழ்வாரிடம் தெரிவித்து; வந்தித்து வணங்கி; வாயார வாழ்த்தியே வாயார வாழ்த்தி; சந்த முருகூரும் தேன் பெருகும் சந்தன; சோலச் சூழ் சோலைகள் சூழ்ந்த; மொய்பூம் அழகிய பூக்கள் நிறைந்த; பொருநல் தாமிரபரணி நதியை உடைய; குருகூதன் திருக்குருகூரில் அவதரித்த; மாறன் பேர் நம்மாழ்வாரின் நாமத்தை; கூறு நீ கூறி தியானிப்பாயாக