PTA 34

ஆழியானே! நின் பண்பைக் கேட்டால் தீவினை நீங்கிவிடும்

2618 பாலாழி நீகிடக்கும்பண்பை * யாம்கேட்டேயும்
காலாழும்நெஞ்சழியும் கண்சுழலும் * - நீலாழிச்
சோதியாய்! ஆதியாய்! தொல்வினையெம்பால்கடியும் *
நீதியாய்! நிற்சார்ந்துநின்று.
2618 pāl āzhi nī kiṭakkum paṇpai * yām keṭṭeyum
kāl āzhum * nĕñcu azhiyum kaṇ cuzhalum ** nīl āzhic
cotiyāy ātiyāy * tŏlviṉai ĕmpāl kaṭiyum *
nītiyāy niṉ cārntu niṉṟu -34

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2618. You, the ancient lord of justice, shine with the dark color of the ocean. I worship you and all my karmā is destroyed. When I hear of the beauty of you as you rest on Adisesha on the ocean, my legs become unsteady, my heart suffers to see you, and my eyes look for you everywhere.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நீல் ஆழி நீலக்கடல் போன்ற; சோதியாய்! ஒளியுடையவனே!; ஆதியாய்! முழுமுதற் கடவுளே!; எம்பால் எங்களுடைய; தொல் வினை பழைய பாபங்களை; கடியும் தொலைக்கும்; நீதியாய்! இயல்புடையவனே!; நின் சார்ந்து நின்று உன்னை அணுகி; நீ பால் ஆழி நீ திருப்பாற்கடலில்; கிடக்கும் சயனித்திருக்கும்; பண்பை யாம் அழகைப் பற்றி நாம்; கேட்டேயும் கேட்கும் பொழுது; கால் ஆழும் கால்கள் தடுமாறும்; நெஞ்சு அழியும் நெஞ்சு உருகும்; கண் சுழலும் கண் சுழன்று பிரமிக்கும்
neel āzhi like a dark ocean; sŏdhiyāy having effulgence; ādhiyāy ŏh one who is the cause for everything!; empāl with me; thol vinai kadiyum removing sins which have been there since time immemorial; nīdhiyāy one who has the nature!; nin sārndhu ninṛu holding on to you; nī pālāzhi kidakkum paṇbai the beauty with which you are reclining in the milky ocean; yām kĕttĕyum even as ī hear; kālāzhum my legs become weak; nenjazhiyum my mind will flutter; kaṇ suzhalum eyes will spin (in bewilderment)