PTA 30

திருமாலைச் சிந்தித்தால் வல்வினை ஓடிவிடும்

2614 இங்கில்லை பண்டுபோல்வீற்றிருத்தல் * என்னுடைய
செங்கண்மால் சீர்க்கும்சிறிதுள்ளம் * - அங்கே
மடியடக்கிநிற்பதனில் வல்வினையார்தாம் * மீண்டு
அடியெடுப்பதன்றோவழகு?
2614 இங்கு இல்லை பண்டுபோல் * வீற்றிருத்தல் * என்னுடைய
செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் ** அங்கே
மடி அடக்கி நிற்பதனில் * வல்வினையார் தாம் * ஈண்டு
அடி எடுப்பது அன்றோ அழகு? 30
2614 iṅku illai paṇṭupol * vīṟṟiruttal * ĕṉṉuṭaiya
cĕṅkaṇ māl cīrkkum ciṟitu ul̤l̤am ** aṅke
maṭi aṭakki niṟpataṉil * valviṉaiyār tām * īṇṭu
aṭi ĕṭuppatu aṉṟo azhaku? -30

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2614. Lovely-eyed Thirumāl entered my small heart, and from now on bad karmā cannot stay there because there is no space for it. It is best if it leaves my heart and never comes back.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
இங்கு என்னுடைய என்னுடைய மனதில்; பண்டு போல் இத்தனை நாளும் போல்; செங்கண் சிவந்த கண்களையுடைய; மால் பெருமானின்; சீர்க்கும் பரந்த குணங்களுக்கே; உள்ளம் என் உள்ளத்தில்; சிறிது இடம் போதவில்லை; அங்கே வீற்றிருத்தல் பாபங்களுக்கு அங்கே இடம்; இல்லை இல்லை; வல் வினையார் தாம் இனி கொடிய பாபங்கள்; மடி தன்னை; அடக்கி கஷ்டப்படுத்திக் கொண்டு; நிற்பதனில் இருப்பதைக் காட்டிலும்; ஈண்டு இங்கிருந்து வெளிக்கிளம்பி; அடி எடுப்பது போவது தானே; அன்றோ அழகு? அழகு?
ingu in my mind (for my karmas); paṇdu pŏl like earlier times; vīṝiruththal illai there is no place to sit expansively; ennudaiya sengaṇmāl my swāmy (lord), having reddish eyes indicating affection, that sarvĕṣvaran’s; sīrkkum auspicious qualities; (idamillādahapadi without a place); ul̤l̤am siṛidhu my heart is very small; valvinaiyār thām my cruel sins; angĕ in that same place (wherefrom they were ruling); madi adakki niṛpadhanil instead of standing submissively, folding the end of their dress; mīṇdu moving away from there; adi eduppadhanṛŏ azhagu isn’t stepping back, a thing of beauty?