PTA 27

<BR>நெடியவனே! நீ எப்படி உலகங்களை அளந்தாய்?

2611 அடியால்படிகடந்தமுத்தோ? * அதன்றேல்
முடியால் விசும்பளந்தமுத்தோ? * - நெடியாய்!
செறிகழல்கள்தாள்நிமிர்த்துச் சென்றுலகமெல்லாம் *
அறிகிலமால்நீயளந்தவன்று.
2611 aṭiyāl * paṭi kaṭanta mutto? * atu aṉṟel
muṭiyāl * vicumpu al̤anta mutto? ** nĕṭiyāy
cĕṟi kazhal kŏl̤ tāl̤ nimirttuc * cĕṉṟu ulakam ĕllām *
aṟikilamāl nī al̤anta aṉṟu -27

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2611. Are you, tall Thirumāl, happy because you measured the earth with your foot? Are you happy because you measured the sky with your foot? The whole world knows that you raised your ankleted feet and measured the earth and the sky. Am I someone who does not know your power?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெடியாய்! உயர்ந்தவனான எம்பெருமானே!; செறி கழல்கள் செறிந்த வீரக்கழல்கள்; தாள் நிமிர்த்து அணிந்த திருவடிகளை நீட்டி; சென்று உலகம் எல்லாம் திருவிக்கிரமனாய் உலகை; நீ அளந்த அன்று நீ அன்று அளந்த; அடியால் படி திருவடிகளால்; கடந்த முத்தோ? உனக்கு உண்டான மகிழ்ச்சியோ?; அது அன்றேல் இல்லையேல்; முடியால் விசும்பு திருமுடியால் ஆகாசத்தை; அளந்த முத்தோ? அளந்த மகிழ்ச்சியோ?; அறிகிலமால் நான் அறியேன்
nediyāy ŏh one who is superior to everyone else!; you; seṛi kazhalgal̤ having anklets which are close to each other; thāl̤ divine feet; nimirththu making them grow; ulagam el̤l̤am senṛu going to all the worlds; al̤andha anṛu during that time when you divinely measured the worlds; padi kadandha muththŏ is the happiness due to measuring all the worlds (which we see on your divine face)?; adhu anṛĕl if it is not due to that; mudiyāl̤ with your divine head; visumbu al̤andha muththŏ is it the happiness due to measuring the skies (which we see)?; aṛigilam āl we do not know; how amaśing is this!