PTA 55

மனக்கவலை தீர்ப்பவர் நாகணையார்

2639 மருங்கோதம்மோதும் மணிநாகணையார் *
மருங்கேவரவரியரேலும் * - ஒருங்கே
எமக்கவரைக்காணலாம் எப்பொழுதுமுள்ளால் *
மனக்கவலைதீர்ப்பார்வரவு.
2639 maruṅku otam motum * maṇi nākaṇaiyār *
maruṅke vara ariyarelum ** ŏruṅke
ĕmakku avaraik kāṇalām * ĕppŏzhutum ul̤l̤āl *
maṉak kavalai tīrppār varavu-55

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2639. He rests on the ocean rolling with waves on Adisesha who has a jewel on his head. It is hard if you think he will come to you but if you think of him always in your heart he will enter it and take away the troubles in your mind.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மருங்கு சமீபத்தில்; ஓதம் மோதும் அலை மோதும் திருப்பாற்கடலிலே; மணி மாணிக்கத்தையுடைய; நாகணையார் ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும் பெருமான்; மருங்கே வர தன் முயற்சியால் அணுக; அரியரேலும் முடியாதவனாயிருந்தாலும்; எமக்கு அவரை நாம் அப்பெருமானை அவன் அருளாலே; உள்ளால் ஒருங்கே மனத்தை ஒருமுகப்படுத்தினால்; எப்போதும் எப்போதும்; காணலாம் கண்டு அனுபவிக்க முடியும்; வரவு தானே வந்து; மனக் கவலை நம் மனக்கவலைகளை; தீர்ப்பார் தீர்ப்பவனும் அவனே
varavu due to (his) arrival; manam kavalai thīrppār one who removes sorrow from the mind; marungu nearby; ŏdham mŏdhum such that ocean will keep lapping; maṇi nāgaṇaiyār emperumān who is reclining on the mattress of thiruvananthāzhwān (ādhiṣĕshan) who has gems; marungĕ vara ariyarĕlum even if he is beyond approach (by us); emakku for us; ul̤l̤āl through mind; eppozhudhum at all times; orungĕ in the same manner; avarai kāṇalām have direct vision of him.