PTA 74

கண்ணன் தரிசனம் எப்பொழுது கிடைக்கும்?

2658 என்றுமொருநாள் ஒழியாமையானிரந்தால் *
ஒன்றுமிரங்காருருக்காட்டார் * - குன்று
குடையாக ஆகாத்தகோவலனார் * நெஞ்சே!
புடைதான்பெரிதேபுவி.
2658 ĕṉṟum ŏrunāl̤ * ŏzhiyāmai yāṉ irantāl *
ŏṉṟum iraṅkār uruk kāṭṭār ** kuṉṟu
kuṭai āka * ā kātta kovalaṉār * nĕñce
puṭai tāṉ pĕrite puvi -74

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2658. O heart, he, the cowherd, carried Govardhanā mountain as an umbrella and protected the cows and the cowherds. Even though I have pleaded with him continuously telling him every day that I long to see him, he does not take pity on me and appear before me. Is my heart a big mound keeping the flood of his grace from flowing over it?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒருநாள் ஒழியாமை ஒரு நாளும் தவறாமல்; என்றும் யான் தினமும் நான்; இரந்தால் பிரார்த்தித்தாலும்; குன்று குடையாக கோவர்த்தன மலையைக் குடையாக; ஆ காத்த எடுத்து பசுக்களை காத்த; கோவலனார் கோபாலகிருஷ்ணன்; ஒன்றும் அடியேனுக்கு சிறிதும்; இரங்கார் இரங்கவில்லை; உரு தன் திருமேனியின் அழகை; காட்டார் காட்டவுமில்லை; நெஞ்சே! ஓ மனமே!; புவி நாம் இருக்குமிடம் ஒரு வேளை; பெரிதே அவன் அருள் வெள்ளம் பாய முடியாத; புடை தான்? மேட்டு நிலமோ?
orunāl̤ ozhiyāmai without missing even one day; enṛum at all times; yān irandhāl even if ī beseech; kunṛu kudaiyāga taking the hill gŏvardhana like an umbrella; ākāththa one who protected cows; kŏvalanār one who tends to cows; onṛum irangār does not show even a little bit of mercy; uru kāttār does not show his divine form too; nenjĕ ŏh my mind; puvidhān this earth; pudai peridhĕ appears to be on an elevated place (such that his mercy will not flow towards us)