PTA 83

மனமே! கண்ணனையே வாழ்த்து

2667 அயர்ப்பாயயராப்பாய் நெஞ்சமே! சொன்னேன் *
உயப்போம்நெறியிதுவேகண்டாய் * - செயற்பால
வல்லவேசெய்கிறுதி நெஞ்சமே! அஞ்சினேன் *
மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து.
2667 ayarppāy ayarāppāy * nĕñcame cŏṉṉeṉ *
uyappom nĕṟi ituve kaṇṭāy ** cĕyaṟpāla
allave cĕykiṟuti * nĕñcame añciṉeṉ *
mallar nāl̤ vavviṉaṉai vāzhttu -83

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2667. O heart, you do not want to do good things and you are tired of the results of your karmā. See, I told you this. Find a way to save yourself. I am worried about myself He fought with the wrestlers and killed them. The way you will be saved is to worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சமே! ஓ மனமே!; செயற்பால அல்லவே செய்யத்தகாதவற்றையே; செய்கிறுதி செய்ய முயல்கிறாய்; நெஞ்சமே! அஞ்சினேன் என்று அஞ்சினேன் நெஞ்சே!; மல்லர் நாள் மல்லர்களின் ஆயுளை முடித்த; வவ்வினனை வாழ்த்து கண்ணனை வாழ்த்தி வணங்கு; உயப்போம் நெறி அதுவே நீ உய்வடைய சிறந்த வழி; இதுவே கண்டாய் என்பதை அறிந்துகொள்; அயர்ப்பாய் மறவாமல் நினைந்து வாழ்ந்தாலும் சரி; அயராப்பாய் மறந்து கெட்டாலும் உன் பாடு; சொன்னேன் நான் கூற வேண்டிய நல்லதைக் கூறிவிட்டேன்
nenjamĕ ŏh heart!; seyaṛpāla alla whatever has been proscribed; seygiṛudhi you are doing; anjinĕn (ī am) scared; mallar nāl̤ longevity of the wrestlers; vavvinanai one who removed; vāzhththu please praise; uyappŏm neṛi the way to uplift; idhuvĕ kaṇdāy is it not this?; nenjamĕ ŏh my heart!; ayarppāy seek ways to destroy yourself, forgetting (emperumān); ayarāppāy uplift yourself, by not forgetting (emperumān); sonnĕn ī have told (you, that which is beneficial for you)