PT 3.2.1

தவம் செய்யவேண்டாம்; சித்திரகூடம் செல்லுங்கள்

1158 ஊன்வாடஉண்ணாதுஉயிர்க்காவலிட்டு
உடலிற்பிரியாப்புலனைந்தும்நொந்து *
தாம்வாடவாடத்தவம்செய்யவேண்டா
தமதாஇமையோருலகாளகிற்பீர்!
கானாடமஞ்ஞைக்கணமாட மாடே
கயலாடுகானீர்ப்பழனம்புடைபோய் *
தேனாடமாடக்கொடியாடு தில்லைத்
திருச்சித்ரகூடம்சென்றுசேர்மின்களே. (2)
PT.3.2.1
1158 ## ūṉ vāṭa uṇṇātu uyir kāval iṭṭu *
uṭalil piriyāp pulaṉ aintum nŏntu *
tām vāṭa vāṭat tavam cĕyya veṇṭā- *
tamatā imaiyor ulaku āl̤akiṟpīr **
kāṉ āṭa maññaik kaṇam āṭa māṭe *
kayal āṭu kāl nīrp pazhaṉam puṭaipoy *
teṉ āṭa māṭak kŏṭi āṭu * tillait
tiruccitrakūṭam cĕṉṟu cermiṉkal̤e-1 **

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1158. O devotees, if you want to rule the world of the gods, you do not have to starve and suffer and do tapas and all of your five senses do not have to be restrained. Just go to Thillai Chitrakudam where peacocks dance, fish frolic in the water of the springs, bees drink honey and flags flutter on the tops of palaces.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஊன் வாட உடல் வற்றி உலரும்படி; உண்ணாது உண்ணாது; உயிர் காவல் இட்டு பிராணனைக் காப்பாற்றி; உடலில் பிரியா சரீரத்தை விட்டுப் போகாத; புலன் ஐந்தும் நொந்து ஐந்து புலன்களும் நொந்து; தாம் தாங்கள் மேன்மேலும்; வாட வாட வாட்டமடையும்படி; தவம் செய்ய வேண்டா தவம் செய்ய வேண்டாம்; கான் ஆட சோலை அசைய; மஞ்ஞைக் கணம் ஆட மயில்களின் கூட்டங்கள் ஆடவும்; மாடே அதனாலே வண்டுகளானவை; கயல் ஆடு கால் நீர் நீர்நிலங்களினருகே போய்; பழனம் புடைபோய் மதுவின் மயக்கத்தில்; தேன் ஆட வண்டுகள் மேலே பறக்கவும்; மாட கொடி மாடங்களிலுள்ள கொடிகள்; ஆடு அசையவும்; தமதா பரமபதத்தை தங்களதாக; இமையோர் உலகு ஆளவேண்டி யிருக்கும்; ஆளகிற்பீர்! தேவர்களே!; தில்லை திருச்சித்ரகூடம் தில்லை திருச்சித்ரகூடம்; சென்று சேர்மின்களே சென்று சேருங்கள்
imaiyŏr ulagu paramapadham; thamadhā as yours; āl̤giṛpīr ŏh you who are desiring to rule!; ūn flesh; vāda to wither; uṇṇādhu avoiding eating etc; uyir prāṇa (vital air) (with the help of water, air etc, to not leave); kāval ittu imprisoning it; udalil piriyā not leaving the body; aindhu pulanum five senses; nondhu torture; thām them; vāda vāda to suffer further; thavam seyya vĕṇdā no need to perform penance;; kān forest; āda to sway; manjaik kaṇam pride of peacocks; āda dance; mādĕ near by; kayal kayal fish; ādu roaming; nīr water flowing; kāl having canals; pazhanam pudai pŏy going near the water bodies; thĕn beetles; āda rise to fly (by that wind); mādam on the mansions; kodi flags; ādu swaying; thillaith thiruchchiththirakūdam thillaith thiruchchiththirakūdam; senṛu sĕrmingal̤ go and reach.