PT 3.2.4

உலகளந்தவனின் திருநாமங்களைச் சொல்லுங்கள்

1161 அருமாநிலம்அன்றுஅளப்பான்குறளாய்
அவுணன்பெருவேள்வியில்சென்றிரந்த *
பெருமான்திருநாமம்பிதற்றி நுந்தம்
பிறவித்துயர்நீங்குதுமென்னகிற்பீர்! *
கருமாகடலுள்கிடந்தான்உவந்து
கவைநாஅரவினணைப்பள்ளியின்மேல் *
திருமால்திருமங்கையொடாடு தில்லைத்
திருச்சித்ரகூடம்சென்றுசேர்மின்களே.
PT.3.2.4
1161 aru mā nilam aṉṟu al̤appāṉ kuṟal̤ āy *
avuṇaṉ pĕru vel̤viyil cĕṉṟu iranta *
pĕrumāṉ tirunāmam pitaṟṟi * num-tam
piṟavit tuyar nīṅkutum ĕṉṉakiṟpīr **
karu mā kaṭalul̤ kiṭantāṉ uvantu *
kavai nā araviṉ-aṇaip pal̤l̤iyiṉmel *
tirumāl tirumaṅkaiyŏṭu āṭu * tillait
tiruccitrakūṭam cĕṉṟu cermiṉkal̤e-4 **

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1161. O devotees, you say that your sorrow-filled births will go away if you recite the divine names of the lord who went as a dwarf and asked for three feet of land at the sacrifice of Mahābali and measured the world and the sky with his two feet. If you want to reach him, just go to Thillai Chitrakudam where Thirumāl with divine Lakshmi rests happily on Adisesha on the dark ocean and worship him, and you will not be born again.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று இந்திரன் ராஜ்யத்தை இழந்த அன்று; அரு மா நிலம் அளக்க அரிதான பூமியை; அளப்பான் அளப்பதற்காக; குறள் ஆய் வாமந ரூபம் கொண்டு; அவுணன் பெரு அசுரனான மகாபலியின்; வேள்வியில் யாகசாலையில்; சென்று இரந்த சென்று யாசித்த; பெருமான் திருநாமம் பெருமானின் திருநாமம்; பிதற்றி நும் தம் வாயராச் சொல்லி; பிறவித் துயர் பிறவித் துயர்; நீங்குதும் நீக்கிக் கொள்ள; என்னகிற்பீர்! விரும்பும் அன்பர்களே!; கரு மா கடலுள் கருத்தப் பெரிய பாற்கடலிலே; கவை நா இரண்டு நாவையுடைய; அரவின் அணை ஆதிசேஷன் மேல்; பள்ளியின் மேல் சயனித்திருக்கும் பெருமான்; கிடந்தான் உவந்து உவந்து கிடந்த; திருமால் திருமால்; திருமங்கையொடு ஆடு திருமகளுடனிருக்கும்; தில்லைத் திருச்சித்ரகூடம் தில்லைத் திருச்சித்ரகூடம்; சென்று சேர்மின்களே சென்று சேருங்கள்
anṛu When indhra lost his kingdom; aru immeasurable; mānilam the great earth; al̤appān to measure; kuṛal̤āy in vāmana form; avuṇan mahābali, the demon-s; peru vĕl̤viyil in the great yāgam; senṛu irandha went and begged; perumān sarvĕṣvaran-s; thirunāmam divine name; pidhaṝi reciting incoherently; nundham your; piṛavith thuyar the sorrow of birth; nīngudhum let us eliminate; ennagiṛpīr ŏh you who say in this manner!; karumā dark and vast; kadalul̤ in thiruppāṛkadal (kshīrābdhi, milk ocean); kavainā having two tongues; aravin aṇaip pal̤l̤iyin mĕl on the bed which is thiruvananthāzhwān (ādhiṣĕshan); uvandhu joyfully; kidandhān one who mercifully reclined; thirumāl ṣrīya:pathi; thirumangaiyŏdu with periya pirāttiyār; ādu eternally residing; thillaith thiruchchiththirakūdam thillaith thiruchchiththirakūdam; senṛu sĕrmingal̤ go and reach.