PMT 10.5

இப்பூவுலகம் பாக்கியம் பெற்றது!

745 வலிவணக்குவரைநெடுந்தோள்விராதைக்கொன்று
வண்டமிழ்மாமுனிகொடுத்தவரிவில்வாங்கி *
கலைவணக்குநோக்கரக்கிமூக்கைநீக்கிக்
கரனோடுதூடணன்றன்னுயிரைவாங்கி *
சிலைவணக்கிமான்மரியவெய்தான்தன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
தலைவணக்கிக்கைகூப்பியேத்தவல்லார்
திரிதலால் தவமுடைத்துத்தரணிதானே.
745 vali vaṇakku varai nĕṭuntol̤ virātaik kŏṉṟu * vaṇ tamizh mā muṉi kŏṭutta vari vil vāṅki *
kalai vaṇakku nokku arakki mūkkai nīkki * karaṉoṭu tūṭaṇaṉ taṉ uyirai vāṅki **
cilai vaṇakki māṉ maṟiya ĕytāṉ taṉṉait * tillai nakart tiruccitrakūṭan taṉṉul̤ *
talai vaṇakkik kaikūppi etta vallār * tiritalāl tavamuṭaittut taraṇi tāṉe (5)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

745. As Rāma he killed the Rakshasā Virādan with strong mountain-like arms, received a bow from the sage Agasthya, creator of rich Tamil, cut off the nose of the beautiful Rakshasi Surpanakha, took the lives of Karan and Dushanan, and bent his bow and shot arrows to kill the Raksasa Mārisan when he came as a golden deer. He stays in Thiruchitrakudam in Thillai and this earth is fortunate that his devotees wander there bowing their heads and worshiping him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வலி வணக்கு எதிரியின் வலிமையை அடக்குகிற; வரை மலை போன்ற; நெடுந்தோள் பெரிய தோளையுடைய; விராதைக் கொன்று விராத ராட்சசனை அழித்து; வண் தமிழ் மா சிறந்த தமிழ்; முனி கொடுத்த முனிவர் கொடுத்த; வரி வில் வாங்கி சிறப்பான வில்லை வாங்கி; கலை வணக்கு மான் விழியை; நோக்கு மிஞ்சிவிடும் விழியாள்; அரக்கி சூர்ப்பனகை என்ற அரக்கியின்; மூக்கை மூக்கை; நீக்கி துண்டித்தும்; கரனோடு தூடணன்தன் கரன் தூஷணர்களின்; உயிரை வாங்கி உயிரைப் பறித்தும்; சிலை வணக்கி மான் மறிய மாயமான் இறக்கும்படி; எய்தான் தன்னை வில்லை எய்தவனை; தில்லை நகர்த் தில்லை நகர்; திருச்சித்ரகூடந் தன்னுள் திருச்சித்ரகூடத்தில்; தலை வணக்கி தலை வணங்கி; கைகூப்பி கைகூப்பி; ஏத்த வல்லார் துதிக்க வல்லவர்கள்; திரிதலால் சஞ்சரிப்பதால்; தரணிதானே பூமியானது; தவமுடைத்து பாக்கியம் பெற்றது