PT 3.2.6

கிளிகளும் வேதவொலி செய்யும் சித்திரகூடம்

1163 நெய்வாயழலம்புதுரந்து முந்நீர்
துணியப்பணிகொண்டுஅணியார்ந்து * இலங்கு
மையார்மணிவண்ணனைஎண்ணி நுந்தம்
மனத்தேஇருத்தும்படிவாழவல்லீர்! *
அவ்வாய்இளமங்கையர் பேசவும்தான்
அருமாமறையந்தணர்சிந்தைபுக *
செவ்வாய்க்கிளிநான்மறைபாடு தில்லைத்
திருச்சித்ரகூடம்சென்றுசேர்மின்களே.
PT.3.2.6
1163 nĕy vāy azhal ampu turantu * munnīr
tuṇiyap paṇikŏṇṭu aṇi ārntu * ilaṅku
mai ār maṇivaṇṇaṉai ĕṇṇi * num-tam
maṉatte iruttumpaṭi vāzhavallīr **
av vāy il̤a maṅkaiyar pecavum * tāṉ
aru mā maṟai antaṇar cintai puka *
cĕv vāyk kil̤i nāṉmaṟai pāṭu * tillait
tiruccitrakūṭam cĕṉṟu cermiṉkal̤e-6 **

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1163. O devotees, if you want to live thinking only of the dark-colored lord shining like a jewel, who as Rāma shot his sharp arrows at the ocean and built a bridge to go to Lankā, just go to beautiful Thillai Chitrakudam where Vediyars recite the Vedās that they know so well and young girls listen to their recitation and sing after them while parrots hear the girls and chant with them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெய் வாய் கூரிய அக்நி போன்ற ஒளியுள்ள; அழல் அம்பு அம்பை பிரயோகித்து; துரந்து முந்நீர் கடலை வற்றசெய்து; துணியப் பணி கொண்டு அணை கட்டின; அணி ஆர்ந்து இலங்கு ஆபரணங்கள் நிறைந்த; மை ஆர் மணி வண்ணனை கருத்த நிறமுடையவனை; எண்ணி நும் தம் உங்கள் மனதில் நினைத்து; மனத்தே இருத்தும்படி அந்த பெருமானைப் பற்ற; வாழவல்லீர்! விரும்பும் அன்பர்களே!; அவ் வாய் அந்த இடத்தில்; இள மங்கையர் சிறு பெண்கள்; பேசவும் தான் தங்கள் தந்தையர் வேதம் ஓதக் கேட்டு; அரு மா அருமையான பெரிய; மறை வேத வாக்கியங்களை சொல்ல; செவ்வாய்க் அதைக் கேட்டு சிவந்த; கிளி வாயையுடைய கிளிகள்; அந்தணர் சிந்தை புக அந்தணர் சிந்தையில் புகும்படி; நான்மறை பாடு நான்கு வேதங்களையும் பாடுகிற; தில்லைத் திருச்சித்ரகூடம் தில்லைத் திருச்சித்ரகூடம்; சென்று சேர்மின்களே சென்று சேருங்கள்
ney sharp; vāy mouth; azhal having fire like radiance; ambu arrow; thurandhu shot; munnīr thuṇiya making the ocean become dry; paṇi koṇdu one who built the bridge (on that ocean); aṇi by ornaments; ārndhu being complete; ilangum shining; mai ār very dark; maṇivaṇṇanai one who has beautiful form which resembles that of a precious stone; eṇṇi meditate upon; nundham your; manaththĕ in the heart; iruththum padi to have him reside eternally; vāzha valleer oh you who desire to live!; avvāy there; il̤a mangaiyar young girls (as they have heard the recitals of their fathers); aru mā maṛai the great vĕdham, the meaning of which is very difficult to understand; pĕsavum as they recite (along with them); sevvāyk kil̤i parrots which have reddish mouth; andhaṇar sindhai puga to enter the hearts of brāhmaṇas; nālmaṛai the four vĕdhams; pādu singing; thillaith thiruchchiththirakūdam thillaith thiruchchiththirakūdam; senṛu sĕrmingal̤ go and reach.