39

Thiru Pārthan Palli

திருப்பார்த்தன்பள்ளி

Thiru Pārthan Palli

Thiru Nāngur

ஸ்ரீ தாமரைநாயகீ ஸமேத ஸ்ரீ தாமரையாள்கேள்வன் ஸ்வாமிநே நமஹ

Thayar: Sri Thāmarai Nāyaki
Moolavar: Sri Thāmaraiyāl Kelvan
Utsavar: Sri Pārthasārathy
Vimaanam: Nārāyana
Pushkarani: Sanga Saras (Gangā Theertham)
Thirukolam: Nindra (Standing)
Direction: West
Mandalam: Chozha Nādu
Area: Seerkaazhi
State: TamilNadu
Sampradayam: Thenkalai
Timings: 8:00 a.m. to 1:00 p.m. 3:00 p.m. to 8:00 p.m. (Please take the archaga from their home for darshan.)
Search Keyword: Parthanpalli
Mangalāsāsanam: Thirumangai Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 4.8.1

1318 கவளயானைக்கொம்பொசித்த கண்ணனென்றும் * காமருசீர்க்
குவளைமேகமன்னமேனிகொண்டகோன் என்னானை யென்றும் *
தவளமாடநீடுநாங்கைத் தாமரையாள்கேள்வனென்றும் *
பவளவாயாள்என்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே. (2)
1318 ## கவள யானைக் கொம்பு ஒசித்த *
கண்ணன் என்றும் காமரு சீர்க் *
குவளை மேகம் அன்ன மேனி *
கொண்ட கோன் என் ஆனை என்றும் **
தவள மாடம் நீடு நாங்கைத் *
தாமரையாள் கேள்வன் என்றும் *
பவள வாயாள் என் மடந்தை *
பார்த்தன்பள்ளி பாடுவாளே-1
1318. ##
kavaLayāNnaik kombosiththa * kaNNanenRum kāmarucheer *
kuvaLaimEgam annamEni * kondakOn ennānaiyenRum *
thavaLamāda needun^āngaith * thāmaraiyāL kELvanenRum *
pavaLavāyāL eNnmadanthai * pārththaNnpaLLipāduvāLE (4.8.1)

Ragam

தன்யாசி

Thalam

அட

Bhavam

Mother

Simple Translation

1318. My daughter says, “He is Kannan, the king whose body has the color of a dark cloud or a kuvalai flower, who broke the tusks of the elephant that eats balls of rice and he stays in Nāngai where tall palaces are studded with pearls. ” My innocent daughter's mouth, as precious as coral, sings the praises of his Pārthanpalli temple where he abides with Lakshmi, his beloved wife.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பவள பவழம்போற் சிவந்த; வாயாள் அதரத்தையுடைய; என் மடந்தை என் பெண்; கவள கவளம் கவளமாக; யானை உண்ணும் யானையின்; கொம்பு ஒசித்த கொம்பை முறித்த; கண்ணன் என்றும் கண்ணன் என்றும்; காமரு சீர் ஆசைப்படத் தகுந்த அழகையுடைய; குவளை கருநெய்தற்பூ போன்றும்; மேகம் அன்ன மேகம் போன்றும்; மேனி கொண்ட திருமேனியையுடைய; கோன் ஸ்வாமியென்றும்; என் ஆனை என்றும் என்னுடைய யானை என்றும்; தவள வெண்மையான; மாடம் மாடமாளிகைகளினால்; நீடு உயர்ந்திருக்கிற; நாங்கை திருநாங்கூரில் வாழும்; தாமரையாள் கேள்வன் லக்ஷ்மீநாதன் என்றும்; பார்த்தன் பார்த்தன்பள்ளி; பள்ளி யென்னும் ஸ்தலத்தை; பாடுவாளே பாடுவாளே
pavaLam beautiful like coral; vAyAL having lips; en madandhai my daughter; kavaLam which can eat a lot; yAnai kuvalayApIdam-s; kombu tusks; osiththa who broke; kaNNan enRum saying -krishNa-; kAmaru desirable; sIr having beauty; kuvaLai anna matching karuneydhal [blue Indian water-lily] flower; mEgam anna matching cloud; mEni form; koNda accepted; kOn being the lord; en Anai enRum saying -my strong elephant- (one who is having such activities); thavaLam whitish; mAdam houses-; nIdu being tall; nAngai eternally residing in thirunAngUr; thAmaraiyAL kELvan beloved the consort of periya pirAttiyAr; enRum blabbering in this manner; (further) ; pArththan paLLi dhivyadhESam named pArththan paLLi; pAduvAL she sings.

PT 4.8.2

1319 கஞ்சன்விட்டவெஞ்சினத்த களிறடர்த்தகாளையென்றும் *
வஞ்சமேவிவந்தபேயின் உயிரையுண்டமாயனென்றும் *
செஞ்சொலாளர்நீடுநாங்கைத் தேவதேவனென்றென்றோதி *
பஞ்சியன்னமெல்லடியாள் பார்த்தன்பள்ளிபாடுவாளே.
1319 கஞ்சன் விட்ட வெம் சினத்த *
களிறு அடர்த்த காளை என்றும் *
வஞ்சம் மேவி வந்த பேயின் *
உயிரை உண்ட மாயன் என்றும் **
செஞ்சொலாளர் நீடு நாங்கைத் *
தேவ-தேவன் என்று என்று ஓதி *
பஞ்சி அன்ன மெல் அடியாள் *
பார்த்தன்பள்ளி பாடுவாளே-2
1319
kaNYchanvitta veNYchinaththa * kaLiRadarththa kāLaiyenRum *
vaNYchamEvi vanthapEyiNn * uyiraiyuNda māyaNnenRum *
chencholāLar needun^āngaith * thEvathEvan eNnReNnROthi *
paNYchiyanna melladiyāL * pārththaNnpaLLipāduvāLE (4.8.2)

Ragam

தன்யாசி

Thalam

அட

Bhavam

Mother

Simple Translation

1319. My daughter sings his praise and says, “Strong as a bull, he defeated the elephant Kuvalayābeedam sent by Kamsan, and he, the Māyan, killed the devil Putanā when she came to cheat him taking the form of a mother. He, the lord of the gods, stays in ancient Nāngai where Vediyars live, skilled in the sastras. ” My daughter with feet as soft as cotton sings the praise of his Pārthanpalli temple.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பஞ்சி அன்ன பஞ்சுபோன்று; மெல் மென்மையான; அடியாள் பாதங்களையுடைய என்மகள்; கஞ்சன் விட்ட கம்ஸனால் ஏவப்பட்ட; வெம் சினத்த கோபமுடைய குவலயாபீட; களிறு அடர்த்த யானையை அடக்கிய; காளை என்றும் காளை என்றும்; வஞ்சம் மேவி வஞ்சனையுடன்; வந்த பேயின் வந்த பூதனையின்; உயிரை உண்ட உயிரை பரித்த; மாயன் என்றும் மாயன் என்றும்; செஞ்சொலாளர் செம்மையான சொற்களைக் கற்ற; நீடு நாங்கை திருநாங்கூரிலிருக்கும்; தேவ தேவன் தேவாதி தேவன் என்று; என்று என்று ஓதி பலகாலம் சொல்லிக்கொண்டும்; பார்த்தன் பார்த்தன்பள்ளி யென்னும்; பள்ளி ஸ்தலத்தை; பாடுவாளே பாடுவாளே
panji anna like cotton; mel soft; adiyAL this girl, parakAla nAyaki who is having divine feet; kanjan by kamsa; vitta sent by; vem cruel; sinaththa having anger; kaLiRu kuvalayApIdam; adarththa killed; kALai enRum as youth; vanjam with mischief; mEvi fixed (having such mind); vandha approached; pEyin pUthanA-s; uyirai life; uNda consumed (finished); mAyan enRum as the amazing person; sem beautiful; sol ALar brAhmaNas who have the truthful words; nIdu eternally inhabited; nAngai mercifully residing in thirunAngUr; dhEva dhEvan enRu as dhEvAdhi dhEvan; enRu Odhi repeatedly saying in this manner; pArththan paLLi pAduvALE sings about the dhivyadhESam named pArththan paLLi

PT 4.8.3

1320 அண்டர்கோன்என்னானையென்றும் ஆயர்மாதர்கொங்கைபுல்கு
செண்டனென்றும் * நான்மறைகள்தேடியோடும் செல்வனென்றும் *
வண்டுலவுபொழில்கொள்நாங்கை மன்னுமாயனென்றென்றோதி *
பண்டுபோலன்றுஎன்மடந்தை பார்த்தன்பள்ளிபாடுவாளே.
1320 அண்டர்-கோன் என் ஆனை என்றும் *
ஆயர் மாதர் கொங்கை புல்கு
செண்டன் என்றும் * நான்மறைகள்
தேடி ஓடும் * செல்வன் என்றும் **
வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை *
மன்னும் மாயன் என்று என்று ஓதி * -
பண்டுபோல் அன்று-என் மடந்தை *
பார்த்தன்பள்ளி பாடுவாளே-3
1320
aNdar_kOn ennānaiYenRum * āyarmāthar Kongaipulgu sendanenRum *
nānmaRaigaL thEdiYOdum * selvanenRum *
vandulavu pozhilkoLn^āngai * mannumāyaNn enRenROthi *
paNdupOlanRu enmadanthai * pārththaNnpaLLipāduvāLE (4.8.3)

Ragam

தன்யாசி

Thalam

அட

Bhavam

Mother

Simple Translation

1320. My daughter says, “The lord of Indra, the king of the gods. the dear one, the everlasting Māyan, who is sought always by the four Vedās, stays in Thirumāllai where bees swarm in the groves. embracing naughtily the breasts of the cowherd girls. ” She is not as before and she has changed and sings and praises his Pārthanpalli temple.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் மடந்தை என் பெண்; அண்டர் பிரம்மாண்டத்திலுள்ள; கோன் எல்லோருக்கும் ஸ்வாமி என்றும்; என் எனக்கு; ஆனை என்றும் ஆனை போன்றவன் என்றும்; ஆயர் மாதர் இடைப்பெண்களுடன்; கொங்கை புல்கு மார்புகளை அணையும்; செண்டன் என்றும் மலர்ச் செண்டே என்றும்; நான் மறைகள் நான்கு வேதங்களுக்குள்ளும் உன்னை; தேடி ஓடும் தேடிக்கொண்டு ஓடும்; செல்வன் என்றும் செல்வனே! என்றும்; வண்டு உலாவு வண்டுகள் உலவும்; பொழில் கொள் சோலைகளையுடைய; நாங்கை திருநாங்கூரிலிருக்கும்; மன்னும் மாயன் மாயனான தேவன் என்று பலகாலம்; என்று என்று ஓதி சொல்லிக்கொண்டும்; பண்டுபோல் அன்று முன்போல்; பார்த்தன் பார்த்தன்பள்ளி; பள்ளி யென்னும் ஸ்தலத்தை; பாடுவாளே பாடுவாளே
en madandhai my daughter; aNdar kOn being the controller of the residents of the universe; en Anai enRum as one who is having acts of an enjoyable elephant for me; Ayar mAdhar cowherd girls-; kongai with bosoms; pulgum embracing; seNdan enRum as one who is having flower bouquet; nAn maRaigaL four vEdhams; thEdi analysed; Odum and chasing; selvan enRum as one who is having wealth; vaNdu ulavu beetles are roaming; pozhil koL having gardens; nAngai in thirunAngUr; mannu eternally residing; mAyan enRu as amazing person; enRu Odhi saying repeatedly; paNdu pOl anRu unlike previously; pArththan paLLi pAduvALE sings about the dhivyadhESam named pArththan paLLi

PT 4.8.4

1321 கொல்லையானாள்பரிசழிந்தாள் கோல்வளையார்தம் முகப்பே *
மல்லைமுந்நீர்தட்டிலங்கை கட்டழித்தமாயனென்றும் *
செல்வம்மல்குமறையோர்நாங்கைத் தேவதேவனென்றென்றோதி *
பல்வளையாள்என்மடந்தை பார்த்தன்பள்ளிபாடுவாளே.
1321 கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள் * -
கோல் வளையார்-தம் முகப்பே *
மல்லை முந்நீர் தட்டு இலங்கை *
கட்டு அழித்த மாயன் என்றும் **
செல்வம் மல்கு மறையோர் நாங்கைத் *
தேவ-தேவன் என்று என்று ஓதி *
பல் வளையாள் என் மடந்தை *
பார்த்தன்பள்ளி பாடுவாளே-4
1321
kollaiyānāL parisazhinthāL * kOlvaLaiyār thammugappE *
mallaimun^n^eer thattilangai * kattazhiththa māyanenRum *
selvammalgu maRaiyOrn^āngai * thEvathEvaNn enRenROthi *
palvaLaiyāL eNnmadanthai * pārththaNnpaLLipāduvāLE (4.8.4)

Ragam

தன்யாசி

Thalam

அட

Bhavam

Mother

Simple Translation

1321. My daughter’s bangles are loose and she is weak. She says, “The Māyan who destroyed the forts of Lankā surrounded by the ocean stays in ancient Nāngai where rich Vediyars live, skilled in the sastras. ” She, ornamented with many bangles, sings and praises his Pārthanpalli temple.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பல் வளையால் பல வளைகளை அணிந்திருக்கும்; என் மடந்தை என் பெண்; கோல் வளையார் அழகிய வளைகளையுடைய; தம் முகப்பே பெண்களுக்கெதிரில்; கொல்லை ஆனாள் வரம்பு இல்லாமல் தனியே; பரிசு நாணத்தை விட்டு; அழிந்தாள் வெளியே புறப்பட்டாள்; மல்லை செல்வம் மிக்க; முந்நீர் தட்டு கடலை அடைத்து; இலங்கை இலங்கையை; கட்டு அழித்த த்வம்ஸம் பண்ணின; மாயன் என்றும் மாயன் என்றும்; செல்வம் மல்கு செல்வம் நிறைந்த; மறையோர் வைதிகர்கள் வாழும்; நாங்கை திருநாங்கூரிலிருக்கும்; தேவ தேவன் தேவாதி தேவன் என்றும்; என்று என்று ஓதி சொல்லிக்கொண்டு பலகாலம்; பார்த்தன் பார்த்தன்பள்ளி யென்னும்; பள்ளி கோவிலை; பாடுவாளே பாடுவாளே
pal vaLaiyAL having many bangles; en madandhai my daughter; kOl beautiful; vaLaiyAr tham girls who are wearing bangles; mugappE in front of; kollai AnAL crossed the limit (she went out alone); parisu azhindhAL she became devoid of shyness etc, which are important identities of a woman; mallai abundant; mun ancient; nIr ocean having water; thattu built a bridge; ilangai lankA; kattu azhiththa made it lose its structure; mAyan enRum as the amazing person; selvam wealth; malgum present in abundance; maRaiyOr best of the brAhmaNas-; nAngai mercifully residing in thirunAngUr; dhEva dhEvan enRu as dhEvAdhi dhEvan; enRu Odhi repeatedly saying in this manner; pArththan paLLi pAduvALE sings about the dhivyadhESam named pArththan paLLi

PT 4.8.5

1322 அரக்கராவிமாளஅன்று ஆழ்கடல்சூழிலங்கைசெற்ற *
குரக்கரசனென்றும் கோலவில்லியென்றும் * மாமதியை
நெருக்குமாடநீடுநாங்கை நின்மலன்தானென்றென்றோதி *
பரக்கழிந்தாள்என்மடந்தை பார்த்தன்பள்ளிபாடுவாளே.
1322 அரக்கர் ஆவி மாள அன்று *
ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற *
குரக்கரசன் என்றும் * கோல
வில்லி என்றும் ** மா மதியை
நெருக்கும் மாடம் நீடு நாங்கை *
நின்மலன்-தான் என்று என்று ஓதி *
பரக்கழிந்தாள் என் மடந்தை *
பார்த்தன்பள்ளி பாடுவாளே-5
1322
arakkar āvimāLa anRu * āzhkadalchoozh ilangaiseRRa *
kurakkarasaNnenRum * kOlavilliyenRum *
māmathiyai_nerukkumāda needun^āngai * ninmalaNnthāNn eNnRenROthi *
parakkazhinthāL eNnmadanthai * pārththanpaLLipāduvāLE (4.8.5)

Ragam

தன்யாசி

Thalam

அட

Bhavam

Mother

Simple Translation

1322. My daughter says, “The faultless one became the king of the monkeys, went to Lankā surrounded by the deep ocean and destroyed the Rākshasas with his heroic bow. He stays in ancient Nāngai filled with abundant tall palaces that touch the shining moon. ” She only sings and praises his Pārthanpalli temple, but the people of the village gossip about my innocent girl. .

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் மடந்தை என் பெண்; அன்று முன்பொரு சமயம்; அரக்கர் ஆவி மாள அரக்கர்கள் அழிய; ஆழ்கடல் சூழ் ஆழ்கடலால் சூழ்ந்த; இலங்கை இலங்கையை; செற்ற அழித்த; குரக்கரசன் வாநர வீரர்களுக்கு அரசன்; என்றும் என்றும்; கோல வில்லி அழகிய வில்லையுடையவன்; என்றும் என்றும்; மா மதியை சந்திரனை; நெருக்கும் திரியவொட்டாமல்; மாடம் மாடமாளிகைகள்; நீடு ஓங்கியிருக்கும்; நாங்கை திருநாங்கூரிலிருப்பவன்; நின்மலன் தான் புனிதமானவன்; என்று என்று என்று பலகாலம்; ஓதி சொல்லிக்கொண்டு; பரக்கழிந்தாள் பெரும்பழிக்கு இடமானவளாய்; பார்த்தன் பார்த்தன்பள்ளி யென்னும்; பள்ளி கோவிலை; பாடுவாளே பாடுவாளே
en madandhai my daughter; anRu when rAvaNa came to fight; arakkar demons-; Avi lives; mALa to be destroyed; Azh deep; kadal by ocean; sUzh surrounded; ilangai lankA; seRRa destroyed; kurakku for monkeys; arasan enRum as the lord; kOlam beautiful; villi enRum as the one who holds the bow; mAmadhiyai beautiful moon; nerukkum blocking the movement; mAdam by the mansions; nIdu being tall; nAngai mercifully present in thirunAngUr; ninmalan enRu very pure natured one, as he does not have any expectation; enRu Odhi repeatedly saying in this manner; parakku azhindhAL having lost her femininity; pArththan paLLi pAduvALE sings about the dhivyadhESam named pArththan paLLi

PT 4.8.6

1323 ஞாலமுற்றும்உண்டுமிழ்ந்த நாதனென்றும் * நானிலம்சூழ்
வேலையன்னகோலமேனி வண்ணனென்றும் * மேலெழுந்து
சேலுகளும்வயல்கொள்நாங்கைத் தேவதேவனென்றென்றோதி *
பாலின்நல்லமென்மொழியாள் பார்த்தன்பள்ளிபாடுவாளே.
1323 ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த *
நாதன் என்றும் நானிலம் சூழ் *
வேலை அன்ன கோல மேனி *
வண்ணன் என்றும் ** மேல் எழுந்து
சேல் உகளும் வயல் கொள் நாங்கைத் *
தேவ-தேவன் என்று என்று ஓதி *
பாலின் நல்ல மென்-மொழியாள் *
பார்த்தன்பள்ளி பாடுவாளே-6
1323
NYAlamuRRum undumizhintha * nāthanenRum nānilamchoozh *
vElaiyanna kOlamEni * vaNNanenRum *
mElezhunthu sElugaLum vayalkoLn^āngaith * thEvathEvaNn enRenROthi *
pālinn^alla menmozhiyāL * pārththanpaLLipāduvāLE (4.8.6)

Ragam

தன்யாசி

Thalam

அட

Bhavam

Mother

Simple Translation

1323. My daughter says, “The god of the gods with the beautiful color of the dark ocean who swallowed all the worlds and spat them out stays in Nāngai surrounded by fields where fish frolic. ” Her speech is as sweet as milk as she sings and praises the Pārthanpalli temple.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாலின் நல்ல பாலைக்காட்டிலும் மதுரமாய்; மென் மென்மையாகப்; மொழியாள் பேசும் என் பெண்ணானவள்; ஞாலம் முற்றும் உலகம் முழுவதையும்; உண்டு உண்டு வயற்றில் வைத்து; உமிழ்ந்த பின் உமிழ்ந்த; நாதன் என்றும் நாதன் என்றும்; நானிலம் நால் வகைப்பட்ட பூமியைச்; சூழ் சுற்றியிருக்கும்; வேலை அன்ன கடல்போன்ற; கோல மேனி அழகிய திருமேனியை; வண்ணன் என்றும் உடையவன் என்றும்; மேல் எழுந்து மீன்கள்; சேல் உகளும் துள்ளி விளையாடும்; வயல் கொள் வயல்களையுடைய; நாங்கை திருநாங்கூரிலிருக்கும்; தேவ தேவன் தேவாதி தேவன் என்று பலகாலம்; என்று என்று ஓதி சொல்லிக்கொண்டு; பார்த்தன் பார்த்தன்பள்ளி யென்னும்; பள்ளி கோவிலை; பாடுவாளே பாடுவாளே
pAlil more than milk; nalla being sweet; mel soft; mozhiyAL this girl, who is having speech; gyAlam muRRum whole earth; uNdu mercifully consumed (during deluge); umizhndha let out (during creation); nAdhan enRum saying one who is the lord; nAl nilam earth which is made of four types of lands; sUzh surrounding; vElai anna matching the ocean; kOlam beautiful; mEni having complexion; vaNNan enRum saying one who is having form; sEl sEl fish; mEl ezhundhu rising up; ugaLum jumping; vayal koL having fertile fields; nAngai mercifully residing in thirunAngUr; dhEva dhEvan enRu as dhEvAdhi dhEvan; enRu Odhi repeatedly saying in this manner; pArththan paLLi pAduvALE sings about the dhivyadhESam named pArththan paLLi

PT 4.8.7

1324 நாடிஎன்தன்உள்ளம்கொண்ட நாதனென்றும் * நான்மறைகள்
தேடியென்றும்காணமாட்டாச் செல்வனென்றும் * சிறைகொள்வண்டு
சேடுலவுபொழில்கொள்நாங்கைத் தேவதேவனென்றென்றோதி *
பாடகம்சேர்மெல்லடியாள் பார்த்தன்பள்ளிபாடுவாளே.
1324 நாடி என்-தன் உள்ளம் கொண்ட *
நாதன் என்றும் * நான்மறைகள்
தேடி என்றும் காண மாட்டாச் *
செல்வன் என்றும் ** சிறை கொள் வண்டு
சேடு உலவு பொழில் கொள்
நாங்கைத் * தேவ-தேவன் என்று என்று ஓதி *
பாடகம் சேர் மெல்லடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே-7
1324
nādi_enthaNn uLLam_konda * nāthanenRum * nānmaRaigaL-
thEdi_enRum kāNamāttāch * chelvanenRum *
chiRaikoLvandu sEdulavu pozhilkoLn^āngaith * thEvathEvaNn enRenROthi *
pādagamsEr melladiyāL * pārththanpaLLipāduvāLE (4.8.7)

Ragam

தன்யாசி

Thalam

அட

Bhavam

Mother

Simple Translation

1324. My daughter says, “The precious god of the gods cannot be found even by the Vedās that search for him, but he came and entered my heart. He stays in Nāngai where many bees with wings always swarm in the groves. ” Her soft feet are ornamented with pādahams as she sings and praises the Pārthanpalli temple.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாடகம் சேர் பாதச்சிலம்பு அணிந்த; மெல் மிருதுவான; அடியாள் அடிகளையுடைய என் பெண்; நாடி என் தன் தேடி கொண்டு வந்து என்; உள்ளம் மனதை இருப்பிடமாக்; கொண்ட கொண்ட; நாதன் என்றும் நாதன் என்றும்; நான் மறைகள் நான்கு வேதங்களை; தேடி ஆராய்ந்து பார்த்து; காண மாட்டா ஒருநாளும் காண முடியாத; செல்வன் என்றும் செல்வன் என்றும்; சிறை கொள் சிறகுளையுடைய; வண்டு வண்டுகள்; சேடு உலவு திரள்திரளாக உலாவும்; பொழில் சோலைகளையுடைய; கொள் நாங்கை திருநாங்கூரிலிருக்கும்; தேவ தேவன் தேவாதி தேவன் என்று; என்று என்று ஓதி சொல்லிக்கொண்டு பலகாலம்; பார்த்தன் பார்த்தன்பள்ளி யென்னும்; பள்ளி கோவிலை; பாடுவாளே பாடுவாளே
pAdagam the ornament decorating the foot; sEr fitting well; mel tender; adiyAL my daughter having divine feet; nAdi seeking; enRan uLLam my mind; koNda mesmerised; nAdhan enRum as -the lord-; nAnmaRaigaL vEdhams which are categorized into four; enRum always; thEdi analysed; kANa mAttA to be unable to see; selvan enRum as -SrImAn-; siRai koL having nice wings; vaNdu beetles; sEdu swarm; ulavu roaming; pozhil koL having gardens; nAngai mercifully residing in thirunAngUr; dhEva dhEvan enRu as dhEvAdhi dhEvan; enRu Odhi repeatedly saying in this manner; pArththan paLLi pAduvALE sings about the dhivyadhESam named pArththan paLLi

PT 4.8.8

1325 உலகமேத்தும்ஒருவனென்றும் ஒண்சுடரோடுஉம்பரெய்தா *
நிலவும்ஆழிப்படையனென்றும் நேசனென்றும் * தென்திசைக்குத்
திலதமன்னமறையோர்நாங்கைத் தேவதேவனென்றென்றோதி *
பலருமேசஎன்மடந்தை பார்த்தன்பள்ளிபாடுவாளே.
1325 உலகம் ஏத்தும் ஒருவன் என்றும் *
ஒண் சுடரோடு உம்பர் எய்தா *
நிலவும் ஆழிப் படையன் என்றும் *
நேசன் என்றும் ** தென் திசைக்குத்
திலதம் அன்ன மறையோர் நாங்கைத் *
தேவ-தேவன் என்று என்று ஓதி *
பலரும் ஏச என் மடந்தை *
பார்த்தன்பள்ளி பாடுவாளே-8
1325
ulagamEththum oruvanenRum * oNchudarOdu umbareythā *
nilavum_āzhip padaiyanenRum * nEsanenRum *
then_thisaikkuth thilathamanna maRaiyOrn^āngaith * thEvathEvaNn enRenROthi *
palarum Esa enmadanthai * pārththaNnpaLLipāduvāLE (4.8.8)

Ragam

தன்யாசி

Thalam

அட

Bhavam

Mother

Simple Translation

1325. My daughter says, “The matchless lord who is praised and loved by the whole world carries a shining discus and cannot be approached even by the bright moon, the sun or the gods in the sky. He stays in Nāngai that is like a thilakam of the southern land, where Vediyars skilled in the Vedās live. ” She sings and praises his Pārthanpalli temple and people gossip about my innocent daughter.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் மடந்தை என் பெண்; உலகம் உலகமெல்லாம்; ஏத்தும் கொண்டாடும்படி; ஒருவன் என்றும் உள்ள ஒருவன் என்றும்; ஒண் சுடரோடு சந்தரஸூர்யர்களாலும்; உம்பர் மற்றுமுள்ள தேவர்களாலும்; எய்தா அருகில் போகமுடியாதபடி; நிலவும் ஆழி பிரகாசிக்கும் சக்கரத்தை; படையன் என்றும் ஆயுதமாக உடையன் என்றும்; நேசன் என்றும் அன்புடையவன் என்றும்; தென் திசைக்கு தெற்குத் திசையில்; திலதம் அன்ன திலகம் போன்றிருக்கும்; மறையோர் வைதிகர்கள் வாழும்; நாங்கை திருநாங்கூரிலிருக்கும்; தேவ தேவன் தேவாதி தேவன் என்று; என்று என்று ஓதி சொல்லிக்கொண்டு பலகாலம்; பலரும் ஏச எல்லாரும் பழிக்கும்படியாக; பார்த்தன் பார்த்தன்பள்ளி யென்னும்; பள்ளி கோவிலை; பாடுவாளே பாடுவாளே
en madandhai my daughter; ulagam the whole world; Eththum qualified to be praised; oruvan enRum as -the distinguished one-; oL beautiful; sudarOdu with moon and sun; umbar by dhEvathAs; eydhA unable to be approached; nilavum shining; Azhi thiruvAzhi (sudharSana chakra); padaiyan enRum as -the one who has divine weapon-; nEsan enRum as -the one who has love towards his devotees-; then thisaikku for southern direction; thiladham anna maRaiyOr brAhmaNas who are like thilakam (chief, like the symbol on the forehead), their; nAngai mercifully residing in thirunAngUr; dhEva dhEvan enRu as dhEvAdhi dhEvan; enRu Odhi repeatedly saying in this manner; palarum everyone; Esa to accuse her; pArththan paLLi pAduvALE sings about the dhivyadhESam named pArththan paLLi

PT 4.8.9

1326 கண்ணனென்றும் வானவர்கள்காதலித்துமலர்கள்தூவும் *
எண்ணனென்றும் இன்பனென்றும்ஏழுலகுக்காதிஎன்றும் *
திண்ணமாடநீடுநாங்கைத் தேவதேவனென்றென்றோதி *
பண்ணினன்னமென்மொழியாள் பார்த்தன்பள்ளிபாடுவாளே.
1326 கண்ணன் என்றும் வானவர்கள் *
காதலித்து மலர்கள் தூவும் *
எண்ணன் என்றும் இன்பன் என்றும் *
ஏழ் உலகுக்கு ஆதி என்றும் **
திண்ண மாடம் நீடு நாங்கைத் *
தேவ-தேவன் என்று என்று ஓதி *
பண்ணின் அன்ன மென்-மொழியாள் *
பார்த்தன்பள்ளி பாடுவாளே-9
1326
kaNNanenRum vānavargaL * kāthaliththu malargaLthoovum *
eNNanenRum inbanenRum * Ezhulugukku āthiyenRum *
thiNNamāda needun^āngaith * thEvathEvaNn enRenROthi *
paNNinanna menMozhiyāL * pārththaNnpaLLipāduvāLE (4.8.9)

Ragam

தன்யாசி

Thalam

அட

Bhavam

Mother

Simple Translation

1326. My daughter says, “Kannan, is the joy of the gods and the ancient one of all the seven worlds. All the gods sprinkle flowers on him, loving and worshiping him in their hearts. He, the lord of the gods, stays in Nāngai that is filled with tall mighty palaces. ” She speaks with soft words as sweet as music and sings and praises his Pārthanpalli temple.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பண்ணின் அன்ன இசையோடு பண்ணோடு ஒத்த; மென் மிருதுவான; மொழியாள் பேச்சை உடைய என் பெண்; கண்ணன் என்றும் கண்ணன் என்றும்; வானவர்கள் காதலித்து தேவர்கள் பக்தியோடு; மலர்கள் மலர்கள்; தூவும் ஸமர்ப்பிக்கும் படியாக; எண்ணன் அவர்களுடய எண்ணத்தில்; என்றும் இருப்பவன் என்றும்; இன்பன் என்றும் இன்பம் அளிப்பவனென்றும்; ஏழ் உலகுக்கு எல்லா உலகங்களுக்கும்; ஆதி என்றும் காரணபூதன் என்றும்; திண்ண மாடம் திடமான மாடமாளிகைகள்; நீடு உயர்ந்திருக்கும்; நாங்கை திருநாங்கூரிலிருக்கும்; தேவ தேவன் தேவாதி தேவன் என்று; என்று என்று ஓதி சொல்லிக்கொண்டு பலகாலம்; பார்த்தன் பார்த்தன்பள்ளி யென்னும்; பள்ளி கோவிலை; பாடுவாளே பாடுவாளே
paN anna like a song; mel soft; mozhiyAL this girl who is having speech; kaNNan enRum as -krishNa-; vAnavargaL dhEvathAs; kAdhaliththu having love; malargaL flowers; thUvum to sprinkle; eNNan enRum as -the one who resides in their thoughts-; inban enRum one who gives joy; Ezh ulagukku for all the seven worlds; Adhi enRum as -the cause-; thiNNam firm; mAdam having mansions; nIdu nAngai mercifully residing in thirunAngUr; dhEva dhEvan enRu as dhEvAdhi dhEvan; enRu Odhi repeatedly saying in this manner; pArththan paLLi pAduvALE sings about the dhivyadhESam named pArththan paLLi

PT 4.8.10

1327 பாருள்நல்லமறையோர்நாங்கைப் பார்த்தன்பள்ளிச்செங்கண்மாலை *
வார்கொள்நல்லமுலைமடவாள்பாடலைத் தாய்மொழிந்தமாற்றம் *
கூர்கொள்நல்லவேல்கலியன் கூறுதமிழ்பத்தும்வல்லார் *
ஏர்கொள்நல்லவைகுந்தத்துள் இன்பம்நாளும் எய்துவாரே. (2)
1327 ## பாருள் நல்ல மறையோர் நாங்கைப் *
பார்த்தன்பள்ளிச் செங் கண் மாலை *
வார் கொள் நல்ல முலை மடவாள்
பாடலைத் * தாய் மொழிந்த மாற்றம் **
கூர் கொள் நல்ல வேல் கலியன் *
கூறு தமிழ் பத்தும் வல்லார் *
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள் *
இன்பம் நாளும் எய்துவாரே-10
1327. ##
pāruLn^alla maRaiyOrn^āngaip * pārththanpaLLiChengaNmālai *
vārKoLn^alla mulaimadavāLpādalai * thāymozhinthamāRRam *
koor_koLn^alla vElkaliyan * kooRuthamizh paththumvallār *
Er_koLn^alla vaikunthaththuL * inbamn^āLum eythuvārE (4.8.10)

Ragam

தன்யாசி

Thalam

அட

Bhavam

Mother

Simple Translation

1327. Kaliyan, the poet with a sharp spear, composed ten Tamil pāsurams describing how a mother spoke of the love of her daughter for the god of the Parthānpalli temple where good Vediyars live, learned in the four Vedās and praised by the world. If devotees learn and recite these ten pāsurams well they will go to divine Vaikundam and live happily.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாருள் நல்ல உலகில் நல்ல; மறையோர் வைதிகர்கள் வாழும்; நாங்கை திருநாங்கூரில்; பார்த்தன் பார்த்தன்; பள்ளி பள்ளியிலிருக்கும்; செங்கண் செந்தாமரைக்; மாலை கண்ணனைக் குறித்து; வார் கொள் கச்சணிந்த அழகிய; நல்ல முலை மார்பகங்களையுடைய; மடவாள பெண் பாடின; பாடலைத் தாய் பாடலைத் தாயானவள்; மொழிந்த மாற்றம் சொன்ன வார்த்தையாக; கூர் கொள் கூர்மையான நல்ல; நல்ல வேல் வேற்படையையுடைய; கலியன் திருமங்கையாழ்வார்; கூறு தமிழ் அருளிச்செய்த; பத்தும் இத்தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும்; வல்லார் ஓத வல்லார்கள்; ஏர் கொள் மிகச்சிறந்த; நல்ல வைகுந்தத்துள் திருநாட்டிலே; நாளும் ஒவ்வொரு நாளும்; இன்பம் இன்பம்; எய்துவாரே அனுபவிக்கப்பெருவார்
pAruL on earth; nalla distinguished; maRaiyOr best among brAhmaNas are residing; nAngai in thirunAngUr; pArththan paLLi one who is mercifully residing in the dhivyadhESam named pArththan paLLi; sem kaN having reddish eyes (due to motherly love); mAlai on sarvESvaran who is having great love towards his devotees; vAr koL being covered by a cloth; nalla distinguished; mulai having bosoms; madavAL the girl (sang); pAdalai divine words; thAy her mother; mozhindha spoke; mARRam the way; kUr koL sharp; nalla best; vEl having spear as the weapon; kaliyan thirumangai AzhwAr; kURum mercifully explained; thamizh in thamizh; paththum these ten pAsurams; vallAr those who can recite; Er koL beautiful; vaigundhaththu in SrIvaikuNtam; nALum everyday; inbam eydhuvAr will be joyful.