PT 3.2.5

பரசுராமனாக அவதரித்தவனே கோவிந்தராஜன்

1162 கோமங்கவங்கக்கடல்வையம்உய்யக்
குலமன்னரங்கம்மழுவில்துணிய *
தாம்அங்கமருள்படைதொட்ட வென்றித்
தவமாமுனியைத்தமக்காக்ககிற்பீர்! *
பூமங்கைதங்கிப்புலமங்கைமன்னிப்
புகழ்மங்கைஎங்கும்திகழ * புகழ்சேர்
சேமம்கொள்பைம்பூம்பொழில்சூழ்ந்த தில்லைத்
திருச்சித்ரகூடம்சென்றுசேர்மின்களே.
PT.3.2.5
1162 ko maṅka vaṅkak kaṭal vaiyam uyyak *
kula maṉṉar aṅkam mazhuvil tuṇiya *
tām aṅku amarul̤ paṭai tŏṭṭa vĕṉṟit *
tava mā muṉiyait tamakku ākkakiṟpīr **
pū-maṅkai taṅkip pula-maṅkai maṉṉip *
pukazh-maṅkai ĕṅkum tikazha * pukazh cer
cemam kŏl̤ paim pūm pŏzhil cūzhnta * tillait
tiruccitrakūṭam cĕṉṟu cermiṉkal̤e-5 **

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1162. O devotees, if you want to reach the lord who came as the sage ParasuRāman carrying an axe and fought with many kings to save this world encircled by the seas, just go to famous Thillai Chitrakudam surrounded with blooming groves where he stays with the earth goddess and Lakshmi as the goddess of fame shines everywhere.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோ மங்க க்ஷத்ரியர்கள் அழியவும்; வங்கக் கடல் கடலால் சூழப்பட்ட; வையம் உய்ய உலகதிலுள்ளோர் உய்யவும்; குல மன்னர் அங்கம் குல மன்னர்களின் சரீரம்; மழுவில் துணிய மழுவாலே அழியவும்; தாம் அங்கு தாமே அப்போது; அமருள் போர்க்களத்திலே புகுந்து; படை தொட்ட ஆயுதம் எடுத்த; வென்றி வெற்றி வீரனும்; தவ மா தபஸ்வியுமான; முனியை பரசுராமனாக அவதரித்த; தமக்கு பெருமானை பற்ற; ஆக்ககிற்பீர்! விரும்பும் அன்பர்களே!; புல மங்கை மன்னி ஸ்ரீதேவி வலப்புறமும்; பூ மங்கை தங்கி பூதேவி இடப்புறமும்; புகழ் மங்கை புகழ் மங்கை; எங்கும் எங்கும் வியாபித்து விளங்க; திகழ புகழ் சேர் புகழோடு கூடிய; சேமம் கொள் அரணையுமுடைய; பைம் பூம் பரந்து பூத்த; பொழில் சூழ்ந்த சோலைகளால் சூழ்ந்த; தில்லைத் திருச்சித்ரகூடம் தில்லைத் திருச்சித்ரகூடம்; சென்று சேர்மின்களே சென்று சேருங்கள்
kings; manga to be destroyed; vangam boats (filled); kadal surrounded by ocean; vaiyam those residents of earth; uyya to be liberated; kula mannar kings-; angam body; mazhu by the axe; thuṇiya to sever; thām himself; angu occurred at that time; amarul̤ entering the battle; padai thotta took up arms; venṛi one who has victory; thavam went to perform penance subsequently; māmuniyai ṣrī paraṣurāmāzhwān, the great sage; ākkagiṛpīr you who desire to own him!; pū mangai periya pirāttiyār; thangi residing (on his divine chest); pula mangai ṣrī bhūmip pirātti; manni remaining firmly (on his left side) (due to that); pugazh fame; mangai woman; engum everywhere; thigazha shining radiantly; pugazh sĕr having fame; sĕmam kol̤ having protection; paim pūm pozhil sūzhndha surrounded by vast, blossomed garden; thillaith thiruchchiththirakūdam thillaith thiruchchiththirakūdam; senṛu sĕrmingal̤ go and reach.