PMT 10.3

சீதைக்காகச் சிலையிறுத்தவன் சித்திரகூடத்தான்

743 செவ்வரிநற்கருநெடுங்கண்சீதைக்காகிச்
சினவிடையோன்சிலையிறுத்து மழுவாளேந்தி *
வெவ்வரிநற்சிலைவாங்கிவென்றிகொண்டு
வேல்வேந்தர்பகைதடிந்தவீரன்தன்னை *
தெவ்வரஞ்சநெடும்புரிசையுயர்ந்தபாங்கர்த்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
எவ்வரிவெஞ்சிலைத் தடக்கையிராமன்தன்னை
இறைஞ்சுவாரிணையடியேயிறைஞ்சினேனே.
743 cĕvvari naṟkaru nĕṭuṅkaṇ cītaikku ākic * ciṉaviṭaiyoṉ cilai iṟuttu mazhuvāl̤ enti *
vĕvvari naṟcilai vāṅki vĕṉṟi kŏṇṭu * velventar pakai taṭinta vīraṉ taṉṉai **
tĕvvar añcu nĕṭum puricai uyarnta pāṅkart * tillai nakart tiruccitrakūṭan taṉṉul̤ *
ĕvvari vĕñcilait taṭakkai irāmaṉ taṉṉai * iṟaiñcuvār iṇaiyaṭiye iṟaiñciṉeṉe. (3)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

743. To marry Sita whose long dark lovely eyes were lined with red, the heroic Rāma who conquered kings with sharp spears, broke the bow of Shivā, the angry bull rider carrying a mazhu weapon. He stays in divine Thiruchitrakudam in Thillai surrounded by tall walls. I worship the feet of the worshipers of Rāma whose cruel bow conquers his mighty enemies.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செவ்வரி நற் சிவந்த ரேகை படர்ந்த அழகிய; கருநெடும் கருமையான நீண்ட; கண் கண்களை உடைய; சீதைக்கு ஆகி சீதையை மணம் புரிந்திட; சின கோபத்தையுடைய; விடையோன் ரிஷபவாகனபிரானின்; சிலை இறுத்து வில்லை முறித்து; மழுவாள் ஏந்தி கோடரியை ஏந்திய; பரசுராமனுடைய பரசுராமனுடைய; வெவ்வரி நற் அச்சமூட்டும் சிறந்த; சிலை வாங்கி வில்லை வாங்கி; வென்றி கொண்டு வென்றுவிட்டு; வேல் வேந்தர் வேல் ஏந்திய வேந்தர்; பகை தடிந்த பகையைத் தீர்த்த; வீரன் தன்னை வீரனை; தெவ்வர் அஞ்சு எதிரிகள் அஞ்சும்படியான; நெடும் புரிசை உயர்ந்த மதில்களையும்; உயர்ந்த திடமான; பாங்கர் பண்ணைகளையுமுடைய; தில்லை நகர் தில்லை நகர்; திருச்சித்ரகூடந் தன்னுள் திருச்சித்ரகூடத்தில்; எவ்வரி வெஞ் சிலைத் அச்சப்படுத்தும் வில்லை; தடக்கை விசாலமான கையில் வைத்துள்ள; இராமன் தன்னை இராமபிரானை; இறைஞ்சுவார் வணங்குகிறவர்களுடைய; இணையடியே அடிகளை; இறைஞ்சினேனே வணங்கினேன்