PT 3.2.9

பாவம் நீங்கச் சித்திரகூடம் செல்லுங்கள்

1166 செருநீலவேற்கண்மடவார்திறத்துச்
சினத்தோடுநின்றுமனத்தால்வளர்க்கும் *
அருநீலபாவம்அகலப் புகழ்சேர்
அமரர்க்கும்எய்தாத அண்டத்துஇருப்பீர்! *
பெருநீர்நிவாவுந்திமுத்தங்கொணர்ந்து
எங்கும்வித்தும்வயலுள்கயல்பாய்ந்துஉகள *
திருநீலம்நின்றுதிகழ்கின்ற தில்லைத்
திருச்சித்ரகூடம்சென்றுசேர்மின்களே.
PT.3.2.9
1166 cĕru nīla vel kaṇ maṭavārtiṟattuc *
ciṉattoṭu niṉṟu maṉattāl val̤arkkum *
aru nīla pāvam akalap pukazh cer *
amararkkum ĕytāta aṇṭattu iruppīr **
pĕru nīr nivā unti muttam kŏṇarntu * ĕṅkum
vittum vayalul̤ kayal pāyntu ukal̤a *
tiru nīlam niṉṟu tikazhkiṉṟa * tillait
tiruccitrakūṭam cĕṉṟu cermiṉkal̤e-9 **

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1166. O devotees, if you want to remove the karmā that you have collected because of your passion for women with dark eyes that are like spears for fighting, and want to reach the famous world that is above even the world of the gods, just go to shining Thillai Chitrakudam where kayal fish frolic in the seeded fields, beautiful neelam flowers bloom everywhere and the Vellāru river flows with abundant water and brings pearls.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செரு நீல நீல நிறமுள்ள; வேல் கண் வேல் போன்ற கண்களையுடைய; மடவார் திறத்து பெண்களை அடைய முடியாமல் தடுக்கும்; சினத்தோடு நின்று எதிரியை மிகுந்த கோபத்தொடு; மனத்தால் மனதில்; வளர்க்கும் வளரும்; அரு நீல இடையூராயிருக்கும்; பாவம் அகல பாபங்கள் போகும்படி; புகழ் புகழை அடைய; சேர் விரும்பும் அன்பர்களே!; அமரர்க்கும் தேவர்களுக்கும்; எய்தாத துர்லபமான பரமபதத்தை; அண்டத்து அடைய விரும்பும்; இருப்பீர்! அன்பர்களே!; பெரு நீர் மிக்க நீரையுடைய; நிவா உந்தி ‘நிவா’ என்னும் வெள்ளாறு; முத்தம் முத்துக்களைக்; கொண்ர்ந்து எங்கும் கொண்டுவந்து தள்ளி; வித்தும் வயலுள் விதைக்கும் வயல்களிலெல்லாம்; கயல் பாய்ந்து உகள கயல் மீன்கள் குதித்து துள்ளவும்; திரு நீலம் அழகிய நெய்தல்மலர்கள் எங்கும்; நின்று திகழ்கின்ற நிறைந்து திகழும்; தில்லைத் திருச்சித்ரகூடம் தில்லைத் திருச்சித்ரகூடம்; சென்று சேர்மின்களே சென்று சேருங்கள்
seru tool for war; vĕl sharp like spear; neelam cool like neydhal flower; kaṇ having beautiful eyes; madavār thiṛaththu towards women who have humility (towards those who stop the enjoyment of such women); sinaththŏdu with anger; ninṛu remained; manaththāl desire in heart; val̤arkkum increasing; aru unable to eliminate; neelam lowly; pāvam sin; agala to go; pugazh sĕr having fame; amararkkum for brahmā et al; eydhādha difficult to reach; aṇdaththu in paramapadham; iruppīr oh you who desire to remain!; peru nīr ḥaving abundant water; nivā river named vel̤l̤āṛu; muththam koṇarndhu bringing pearls; undhi pushed; viththum planting; vayal ul̤ engum in every fertile field; kayal kayal fish; pāyndhu ugal̤a as they jump; thiruneelam beautiful neydhal flower; ninṛu spreading everywhere; thigazhginṛa shining; thillaith thiruchchiththirakūdam thillaith thiruchchiththirakūdam; senṛu sĕrmingal̤ go and reach.