41

Thiru Aheendrapuram

திருவஹீந்த்ரபுரம்

Thiru Aheendrapuram

Aayindhai

ஸ்ரீ வைகுண்ட நாயகீ (ஹேமாம்புஜவல்லி தாயார்) ஸமேத ஸ்ரீ தெய்வநாயகாய நமஹ

Thayar: Sri Hemāmbuja Valli Thāyār (Vaikunda Nāyaki)
Moolavar: Sri Deivanāyakan
Utsavar: Sri Moovarāgiya Oruvan, Devanādhan
Vimaanam: Chandhra, Suthasathva
Pushkarani: Garudanadhi, Chandra, Sesha Theertham
Thirukolam: Nindra (Standing)
Direction: East
Mandalam: Nadu Nādu
Area: Cuddalore
State: TamilNadu
Aagamam: Pāncharāthram
Sampradayam: Vadakalai
Search Keyword: Thiruvayindirapuram
Mangalāsāsanam: Thirumangai Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 3.1.1

1148 இருந்தண்மாநிலம்ஏனமதாய்
வளைமருப்பினில் அகத்தொடுக்கி *
கருந்தண்மாகடல்கண்துயின்றவனிடம்
கமலநன்மலர்த்தேறல்
அருந்தி * இன்னிசைமுரன்றெழும்அளிகுலம்பொதுளி
அம்பொழிலூடே *
செருந்திநாண்மலர்சென்றணைந்துஉழிதரு
திருவயிந்திரபுரமே. (2)
1148 ## இருந் தண் மா நிலம் ஏனம்-அது ஆய் *
வளை மருப்பினில் அகத்து ஒடுக்கி *
கருந் தண் மா கடல் கண் துயின்றவன் இடம்- *
கமல நல் மலர்த் தேறல்
அருந்தி ** இன் இசை முரன்று எழும் அளி குலம்
பொதுளி * அம் பொழிலூடே *
செருந்தி நாள் மலர் சென்று அணைந்து உழிதரு *
திருவயிந்திரபுரமே-1 **
1148. ##
irunNdhaN mānNilam Enamadhāy * vaLaimaruppinil agatthodukki *
karunNdhaN mākadal kaN thuyinRavanidam * kamalanNanmalarth thERalarunNdhi *
innisai muranRezhum aLikulambodhuLi * am pozhiloodE *
serunNdhi nNāNmalar senRaNainNdhu uzhitharu * thiruvayinNdhirapuramE. (2) 3.1.1

Ragam

செஞ்சுருட்டி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1148. The god who rests on the dark ocean on Adisesha took the form of a boar went to the underworld and brought up the cool earth goddess on his curving tusk, embracing her. He stays in everlasting Thiruvayindirapuram where bees drink honey from lotus flowers, sing sweet music and go to fresh cherundi flowers, embracing them and flying around in the beautiful grove.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இருந் தண் குளிர்ந்த; மா நிலம் பெரிய பூமியை பிரளய காலத்தில்; ஏனம் அது ஆய் வராஹமாய் வந்து; வளை வளைந்த; மருப்பினில் அகத்து கொம்பினிடத்தில்; ஒடுக்கி அடக்கி; கருந் தண் கருத்த குளிர்ந்த; மா கடல் பெரும் கடலில்; கண் துயின்றவன் இடம் துயின்றவன் இருக்குமிடம்; அம் பொழில் ஊடே அழகிய சோலைகளினுள்ளே; கமல நல் மலர்த் நல்ல தாமரைப்பூவின்; தேறல் அருந்தி தேனைக் குடித்து; இன் இசை முரன்று இன்னிசை செய்யும்; எழும் அளி குலம் வண்டுகளின் கூட்டங்கள்; பொதுளி திரண்டு; செருந்தி நாள் புன்னை மரத்தின்; மலர் சென்று மலர்களை; அணைந்து உழி தரு அணைந்து ஸஞ்சரிக்கும்; திருவயிந்திரபுரமே திருவஹீந்த்ரபுரமாம்
irum thaN very cool; mA nilam vast earth (while deluge had consumed it); Enam adhAy in the form of varAha [wild boar]; vaLai maruppu agaththinil on the bent tusk; odukki secured (then); karum thaN mA kadal in the great ocean which is black and cool; kaN thuyinRavan for the one who performed yOga nidhrA; idam the abode; kamalam lotus-; nal beautiful; malar in the flower; thERal honey; arundhi drank; in isai beautiful tune; muranRu sang; ezhum joyfully dance; aLi kulam swarms of beetles; podhuLi gathered; am beautiful; pozhil UdE in the middle of the garden; serundhi serundhi tree-s; nAL malar in the freshly blossomed flower; senRu aNaindhu went and reached; uzhi tharu roaming; thiruvayindhirapuramE is the dhivyadhESam known as thiruvahindhrapuram

PT 3.1.2

1149 மின்னும்ஆழியங்கையவன்
செய்யவள்உறைதருதிருமார்பன் *
பன்னுநான்மறைப்பலபொருளாகிய
பரனிடம், வரைச்சாரல் *
பின்னும்மாதவிப்பந்தலில்
பெடைவரப்பிணியவிழ்கமலத்து *
தென்னவென்றுவண்டுஇன்னிசைமுரல்தரு
திருவயிந்திரபுரமே.
1149 மின்னும் ஆழி அங்கையவன் * செய்யவள்
உறை தரு திரு மார்பன் *
பன்னு நான்மறைப் பல் பொருள் ஆகிய *
பரன் இடம்-வரைச் சாரல் **
பின்னும் மாதவிப் பந்தலில் பெடை வரப் *
பிணி அவிழ் கமலத்து *
தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு *
திருவயிந்திரபுரமே-2 **
1149
minnum āzhiyaNGkaiyavan * seyyavaL uRaitharu thirumārban *
pannunNānmaRaip palaporuLāgiya * paranidam varaicchāral *
pinnum mādhavip panNdhalil pedaivarap * piNiyavizh kamalatthu *
thennavenRu vaNdu innisai muraltharu * thiruvayinNdhirapuramE. 3.1.2

Ragam

செஞ்சுருட்டி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1149. The highest lord, the meaning of the four Vedās, who carries a shining discus in his hand and embraces beautiful Lakshmi on his chest stays in Thiruvayindirapuram where madhavi vines grow on the mountain slopes and female bees fly around blooming lotus buds swarming and singing with the sound “tena tena. ”

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மின்னும் ஆழி மின்னும் சக்கரத்தை; அங்கையவன் அழகிய கையிலுடையவன்; செய்யவள் மஹாலக்ஷ்மி; உறை தரு இருக்குமிடமான; திரு மார்பன் மார்பையுடையவன்; பன்னு நான்மறை வேதங்களில்; பல் சொல்லப்பட்ட பலவகைப்; பொருள் ஆகிய பொருள்களும் தானேயான; பரன் இடம் பரமன் இருக்குமிடம்; வரைச்சாரல் மலைச் சாரலில் நெருங்கி இருக்கும்; பின்னும் மாதவிப் பந்தலில் குருக்கத்திப் பந்தலில்; பெடை வர தம்மிடம் வந்து சேர்வதற்காக; பிணி அவிழ் மலரும் தாமரையில் ஆண்வண்டு; கமலத்து காத்துக் கொண்டு; தென்ன என்று வண்டு தென்னா தெனாவென்று; இன்னிசை முரல்தரு இனிய இசைகளை பாடும்; திருவயிந்திரபுரமே திருவயிந்திரபுரமே
minnum shining; Azhi divine chakra; am beautiful; kaiyavan having in divine hand; seyyavaL periya pirAttiyAr; uRai tharu eternally residing; thirumArvan one who has the divine chest; nAnmaRai by vEdhams which are of four categories; pannu identified; pal poruL many entities; Agiya having as his prakAram (form); paran for greater than all; idam abode; varaich chAral in mountain slope; pinnum present densely; mAdhavip pandhalil in the mAdhavi creeper shed; vaNdu beetles; pedai with their female counter-parts; vara to arrive; piNi avizh blossoming; kamalaththu (entering) in the lotus; thenna enRu saying -thennA! thenA!- (music); in isai mural tharu humming sweet songs; thiruvayindhirapuramE thiruvahindhrapuram.

PT 3.1.3

1150 வையமேழுஉண்டுஆலிலை
வைகியமாயவன் * அடியவர்க்கு
மெய்யனாகியதெய்வநாயகனிடம்
மெய்தகுவரைச்சாரல் *
மொய்கொள்மாதவிசண்பகம்முயங்கிய
முல்லையங்கொடியாட *
செய்யதாமரைச்செழும்பணைதிகழ்தரு
திருவயிந்திரபுரமே.
1150 வையம் ஏழும் உண்டு ஆல் இலை வைகிய
மாயவன் * அடியவர்க்கு
மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம்- *
மெய்தகு வரைச் சாரல் **
மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய *
முல்லை அம் கொடி ஆட *
செய்ய தாமரைச் செழும் பணை திகழ்தரு *
திருவயிந்திரபுரமே-3 *
1150
vaiyamEzhum uNdālilai * vaigiyamāyavan *
adiyavarkku meyyaNnāgiya dheyvanNāyaganidam * meythaguvaraicchāral *
moygoL mādhavi saNbagam muyangkiya * mullaiyankodiyāda *
seyyathāmaraich chezhumbaNai thigazhtharu * thiruvayinNdhirapuramE. 3.1.3

Ragam

செஞ்சுருட்டி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1150. Māyavan, the divine lord, always true to his devotees, who swallowed all the seven worlds and lay on a banyan leaf as a baby stays in shining Thiruvayindirapuram where on the slopes of the hills madhavi vines embrace senbaga plants, mullai creepers dance in the wind, red lotuses bloom and palm trees flourish.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வையம் ஏழும் ஏழு உலகங்களையும்; உண்டு உண்டு; ஆலிலை ஆலிலையில்; வைகிய மாயவன் பொழுது போக்கின மாயவன்; அடியவர்க்கு அடியவர்க்கு; மெய்யன் ஆகிய தன்னை காட்டுமவனான; தெய்வ நாயகனிடம் தெய்வநாயகன் இருக்குமிடம்; மெய்தகு அவன் சரீரம் போல்; வரைச் சாரல் கருத்த மலைச் சாரலில்; மொய் கொள் நெருங்கியிருக்கும்; மாதவி குறுக்கத்திச் செடிகளோடும்; சண்பகம் செண்பக; முயங்கிய மரங்களோடும் தழுவிய; முல்லை அம் அழகிய முல்லைக்; கொடி ஆட கொடிகள் ஆட; செய்ய தாமரை செந்தாமரைபூக்கள்; செழும் செழித்து வளர்கின்ற; பணை நீர் நிலங்களிலே; திகழ்தரு ஒளிவீசும்; திருவயிந்திரபுரமே திருவயிந்திரபுரமே
vaiyam Ezhum the seven lower level worlds; uNdu consumed; Al ilai on a banyan leaf; vaigiya spent his time; mAyavan one who has amazing ability; adiyavarkku for those who fully serve him; meyyan Agiya one who reveals himself fully; dheyvanAyagan for dheyvanAyagan (lord of lords); idam abode is; mey thagu matching emperumAn-s tender, divine form; varaich chAral in the mountain slope; moy koL dense; mAdhavi kurukkaththi; seNbagam champaka flower; muyangiya embraced; mullai in forest land; am beautiful; kodi jasmine creeper; Ada as it sways (by that wind); sezhu rich; paNai in water bodies; seyya thAmarai reddish lotus (blossom); thigazh tharu shining; thiruvayindhrapuramE thiruvahindhrapuram.

PT 3.1.4

1151 மாறுகொண்டுடன்றெதிர்ந்தவல்லவுணன்தன்
மார்பகம்இருபிளவா *
கூறுகொண்டுஅவன்குலமகற்கு
இன்னருள்கொடுத்தவனிடம் * மிடைந்து
சாறுகொண்டமென்கரும்பிளங்கழை
தகைவிசும்புறமணிநீழல் *
சேறுகொண்டதண்பழனமதெழில்திகழ்
திருவயிந்திரபுரமே.
1151 மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன்-தன் *
மார்பு-அகம் இரு பிளவா *
கூறு கொண்டு அவன் குலமகற்கு * இன் அருள்
கொடுத்தவன் இடம் ** மிடைந்து
சாறு கொண்ட மென் கரும்பு இளங் கழை தகை *
விசும்பு உற மணி நீழல் *
சேறு கொண்ட தண் பழனம்-அது எழில் திகழ் *
திருவயிந்திரபுரமே-4 **
1151
māRukoNdu udaRedhirnNdha vallavuNan_than * mārbagam irupiLavā *
kooRukoNdu_avan kulamagaRku * innaruL kodutthavaNnidam *
midainNdhu sāRukoNda men_karumbiLaNG_ kazhaithagai visumbuRa * maNinNeezhal *
sERukoNda thaN pazhanama dhezhilthigazh * thiruvayinNdhirapuramE. 3.1.4

Ragam

செஞ்சுருட்டி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1151. Our god who split open the chest of his enemy the strong Asuran Hiranyan and gave his divine grace to his son Prahladan, stays in famous Thiruvayindirapuram where flourishing cool wet fields have abundant water and mud and the soft juicy sugarcane plants growing there give cool shade and touch the sky.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாறு கொண்டு கோபித்துக் கொண்டு; உடன்று எதிர்த்துப் போரிட; எதிர்ந்த வல் வந்த வலிய; அவுணன் தன் அரக்கன் இரணியனது; மார்பு அகம் மார்பு; இரு பிளவா இரு பிளவாகும்படி; கூறு கொண்டு கூறு செய்து; அவன் அவன்; குலமகற்கு குலமகனான ப்ரஹ்லாதனுக்கு; இன் அருள் இன் அருள் புரிந்த; கொடுத்தவன் இடம் பெருமான் இருக்குமிடம்; மிடைந்து நெருங்கி வளரும்; சாறு கொண்ட சாறு பெருகும்; மென் கரும்பு மெல்லிய கரும்பினுடைய; இளங் கழை தகை இளங்குருத்தின் நுனிகளானவை; விசும்பு உற ஆகாசத்தை நோக்கி வளர்ந்திருப்பதனால்; மணி நீழல் அழகிய நிழலையுடையதும்; சேறு கொண்ட தண் சேற்றையுடைய குளிர்ந்த; பழனம் அது நீர்நிலங்களின்; எழில் திகழ் அழகுடையதுமான; திருவயிந்திரபுரமே திருவயிந்திரபுரமே
mARu koNdu Considering -I am an enemy-; udanRu being angry; edhirndha one who came opposing; val very strong; avuNan than the rAkshasa, hiraNya-s; mArvagam chest; iru piLavA to become two pieces; kURu koNdu split him; avan kula magaRku for prahlAdhAzhwAn who is his son; in aruL koduththavan for the one who showered his good mercy; idam abode; midaindhu being close to each other; sARu koNda as the juice is flowing; mel tender; karumbu sugarcane-s; iLangazhai the edge of the sprout; visumbu the sky; uRa as it reaches; thagai stopped by (that sky) (that sugarcane-s); maNi nIzhal having beautiful shade; sERu koNda having mud (created by the sugarcane juice); thaN cool; pazhanamadhu fertile fields-; ezhil beauty; thigazh shining; thiruvayindhrapuramE thiruvahindhrapuram.

PT 3.1.5

1152 ஆங்குமாவலிவேள்வியில்இரந்துசென்று
அகலிடமளந்து * ஆயர்
பூங்கொடிக்குஇனவிடைபொருதவனிடம்
பொன்மலர்திகழ் * வேங்கை
கோங்குசெண்பகக்கொம்பினில்
குதிகொடுகுரக்கினம்இரைத்தோடி *
தேன்கலந்தண்பலங்கனிநுகர்த்தரு
திருவயிந்திரபுரமே.
1152 ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று *
அகல் இடம் அளந்து * ஆயர்
பூங் கொடிக்கு இன விடை பொருதவன் இடம் *
-பொன் மலர் திகழ் ** வேங்கை
கோங்கு செண்பகக் கொம்பினில் * குதிகொடு
குரக்கினம் இரைத்து ஓடி *
தேன் கலந்த தண் பலங்கனி நுகர்தரு *
திருவயிந்திரபுரமே-5 **
1152
āngku māvalivELviyil iranNdhusenRu * agalidam aLanNdhu *
Ayar poongkodikku inavidai porudhavanidam * ponmalar thigazh *
vEngkaikOngku seNbagak kombinil * kudhikodu kurakkinam iraitthOdi *
thEn_kalandha thaNpalangani nNugar_tharu * thiruvayinNdhirapuramE. 3.1.5

Ragam

செஞ்சுருட்டி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1152. Our lord who went to the sacrifice of Mahabali, asked for three feet of land and measured the wide earth and the sky with his feet, and fought seven bulls to marry Nappinnai, the lovely vine-like daughter of a cowherd stays in Thiruvayindirapuram where monkeys searching for food, jump from one branch to an another on vengai, kongu and shenbaga trees blooming with golden flowers and eat sweet jack fruits that taste as if they were mixed with honey.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாவலி வேள்வியில் மஹாபலியின் யாகத்தில்; இரந்து சென்று யாசித்துப்பெற்ற; ஆங்கு அகல் பரந்த பூமியை; இடம் அளந்து அங்கேயே அளந்தவனும்; ஆயர் இடைப்பெண்ணான; பூங் கொடிக்கு நப்பின்னைக்காக; இன விடை ஏழு ரிஷபங்களையும்; பொருதவன் அடக்கினவனுமான; இடம் பெருமான் இருக்குமிடம்; குரக்கினம் குரங்குகளின் கூட்டமானது; பொன் பொன்னிறமான; மலர் திகழ் மலர்கள் இருக்கும்; வேங்கை வேங்கை; கோங்கு கோங்கு; செண்பகக் செண்பகம் ஆகிய; கொம்பினில் மரங்களின் கொம்புகளில்; குதிகொடு குதித்துக் கொண்டும்; இரைத்து ஓடி அங்குமிங்கும் ஓடிக்கொண்டும்; தேன் கலந்த தண் தேன் கலந்த குளிர்ந்த; பலங்கனி நுகர்தரு பலாப் பழங்களை உண்டு மகிழும்; திருவயிந்திரபுரமே திருவயிந்திரபுரமே
mAvali mahAbali-s; vELviyil in sacrificial arena; senRu reached; irandhu begged (for three feet of land); Angu there itself; agal idam vast earth; aLandhu measured and accepted; Ayar cowherds-; pUm kodikku for nappinnaip pirAtti who is like a blossomed creeper; ina vidai collection of the seven bulls; porudhavan for the one who fought and destroyed; idam abode is; kurakkinam troop of monkeys; pon malar like golden flower; thigazh shining; vEngaik kOngu seNbagam trees such as vEngai, kOngu, sheNbagam; kombinil on the branches; kudhikodu jumping; iraiththu with great noise; Odi came running; thEn kalandha with abundant honey; thaN beautiful; palam kani jackfruit; nugartharu eating; thiruvayindhirapuramE thiruvahindhrapuram

PT 3.1.6

1153 கூனுலாவியமடந்தைதன்கொடுஞ்சொலின்திறத்து
இளங்கொடியோடும் *
கானுலாவியகருமுகில்திருநிறத்தவனிடம்
கவினாரும் *
வானு லாவியமதிதவழ்மால்வரை
மாமதிள்புடைசூழ *
தேனுலாவியசெழும்பொழில்தழுவிய
திருவயிந்திரபுரமே.
1153 கூன் உலாவிய மடந்தை-தன் * கொடுஞ் சொலின்
திறத்து இளங் கொடியோடும் *
கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன்
இடம் * கவின் ஆரும் **
வான் உலாவிய மதி தவழ் மால் வரை *
மா மதிள் புடை சூழ *
தேன் உலாவிய செழும் பொழில் தழுவிய *
திருவயிந்திரபுரமே-6 **
1153
goonulāviya madanNdhaithan * koduNYcholin thiRatthu_ iLaNGkodiyOdum *
kānulāviya karumugil thirunNiRaththavanidam * kavinārum *
vānulāviya madhithavazh mālvarai * māmadhiL pudaisoozha *
thEnulāviya sezhumbozhil thazhuviya * thiruvayinNdhirapuramE. 3.1.6

Ragam

செஞ்சுருட்டி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1153. The dark cloud-colored lord who went to the forest as Rāma with his young vine-like wife Sita because his stepmother Kaikeyi listened to her maid, the hunch-backed Manthara, and asked Rāma to go to the forest stays in Thiruvayindirapuram surrounded with large walls and high mountains over which the moon floats as the flourishing groves drip with honey.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கூன் உலாவிய கூனுடைய; மடந்தை தன் மந்தரையின்; கொடுஞ் சொலின் கடும் சொற்களால்; இளங் கொடியோடும் இளங் கொடி போன்றஸீதையுடன்; கான் உலாவிய காட்டுக்குச் சென்ற; கரு முகில் காளமேகம் போன்ற; திரு வடிவழகையுடைய; நிறத்தவன் இடம் பெருமான் இருக்குமிடம்; கவின் ஆரும் அழகிய; வான் உலாவிய ஆகாசத்தில் சஞ்சரிக்கின்ற; மதி தவழ் சந்திரன் தவழும்படி உயர்ந்த; மால் வரை பெரிய மலையும்; மா மதிள் பெரிய மதிள்களும்; புடை சூழ சூழ்ந்த; தேன் உலாவிய வண்டுகள் உலாவும்; செழும் பொழில் அழகிய சோலைகளால்; தழுவிய சூழ்ந்த; திருவயிந்திரபுரமே திருவயிந்திரபுரமே
kUn ulAviya madandhai than hump-backed woman-s; kodum solin thiRaththu for the harsh words; iLam kodiyOdum pirAtti and he; kAn in the forest; ulAviya one who mercifully went; karu mugil like a dark cloud; thiruniRaththavan for the one who has beautiful form; idam abode is; kavin beauty; Arum present abundantly; vAn in the sky; ulAviya roaming; madhi chandhra (moon); thavazh to float; mAl varai tall mountains; mA madhiL huge forts; pudai sUzha surrounding in the sides; thEn ulAviya beetles roaming; sezhum pozhil with beautiful fertile fields; thazhuviya surrounded; thiruvayindhirapuramE thiruvahindhrapuram

PT 3.1.7

1154 மின்னின்நுண்ணிடைமடக்கொடிகாரணம்
விலங்கலின்மிசைஇலங்கை
மன்னன் * நீண்முடிபொடிசெய்தமைந்தனதிடம்
மணிவரைநீழல் *
அன்னமாமலரரவிந்தத் தமளியில்
பெடையொடும்இனிதமர *
செந்நெலார்க்கவரிக்குலைவீசு தண்
திருவயிந்திரபுரமே.
1154 மின்னின் நுண் இடை மடக் கொடி காரணம் *
விலங்கலின்மிசை இலங்கை
மன்னன் * நீள் முடி பொடிசெய்த மைந்தனது
இடம் * மணி வரை நீழல் **
அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில் *
பெடையொடும் இனிது அமர *
செந்நெல் ஆர் கவரிக் குலை வீசு * தண்
திருவயிந்திரபுரமே-7 **
1154
minninnNuNNidai madakkodi kāraNam * vilangkalin_misai ilangkaimannan *
nNeeNmudi podiseydha mainNdhanadhidam * maNivarainNeezhal *
annamāmalar aravinNdhaththamaLiyil * pedaiyodum inidhamara *
senNnNelār kavarikkulaiveesu * thaNthiruvayinNdhirapuramE. 3.1.7

Ragam

செஞ்சுருட்டி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1154. Our lord who, as Rāma, fought and destroyed the ten crowns of the king of Lankā to bring back his beautiful vine-like Sita with a waist as thin as lightning stays in cool Thiruvayindirapuram where a male swan with his mate sits sweetly on a lovely bed of lotuses under the shadow of a shining mountain and the fine paddy plants fan them.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மின்னின் மின்னல் போன்ற; நுண் இடை நுண்ணிய இடயுடைய; மடக்கொடி மடப்பத்தையுடைய கொடி போன்ற; காரணம் ஸீதைக்காக; விலங்கலின் ஸுவேல மலையின்; மிசை மீது அமைக்கப்பட்ட; இலங்கை மன்னன் இலங்கைக்கு மன்னன் ராவணனின்; நீள் முடி முடிகள் பத்தையும்; பொடி செய்த பொடி செய்த; மைந்தனது இடம் பெருமானுக்கு இருப்பிடம்; மணி வரை அழகிய ரத்தின மலையின்; நீழல் நிழலிலே; அன்னம் அன்னங்கள்; மா மலர் பெரிய தாமரைப் பூ; அரவிந்தத்து அமளியில் படுக்கையில்; பெடையொடும் தங்கள் பெடைகளுடன்; இனிது அமர இன்பம் நுகர்ந்து பொருந்தி வாழ்வதற்குத் தகுந்த; செந்நெல் ஆர் கவரி செந்நெல் நிறைந்த; குலை வீசு தண் குலைகள் சாமரம் போல் வீசும்; திருவயிந்திரபுரமே திருவயிந்திரபுரமே
minnil like lightning; nuN slender; idai waist; madam and having humility; kodi kAraNam for the creeper like pirAtti; vilangalin misai built on the suvElA mountain; ilangai for lankA; mannan the king, rAvaNa-s; nIL mudi ten tall crowns/heads; podi seydha turned to dust; maindhanadhu strong one-s; idam abode is; maNi varai gem mountain-s; nIzhal in the shade; annam swans; mA big; aravindha malar lotus flower; amaLiyil on the bed; pedaiyodum with their female counterparts; inidhu sweetly; amara to resting; sennel Ar kulai the crop filled with red paddy; kavari vIsu like fanning with whisk; thaN cool; thiruvayindhirapuramE thiruvahindhrapuram.

PT 3.1.8

1155 விரைகமழ்ந்தமென்கருங்குழல்காரணம்
வில்லிறுத்து அடல்மழைக்கு *
நிரைக லங்கிடவரைகுடையெடுத்தவன்
நிலவியஇடம், தடமார் *
வரைவளம்திகழ்மதகரிமருப்பொடு
மலைவளரகிலுந்தி *
திரைகொணர்ந்தணைசெழுநதிவயல்புகு
திருவயிந்திரபுரமே.
1155 விரை கமழ்ந்த மென் கருங் குழல் காரணம் *
வில் இறுத்து * அடல் மழைக்கு
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் *
நிலவிய இடம்-தடம் ஆர் **
வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு *
மலை வளர் அகில் உந்தி *
திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு *
திருவயிந்திரபுரமே-8 **
1155
virai kamazhnNdhamen karungkuzhal kāraNam * villiRutthu * adalmazhaikku-
nNirai kalangkidavarai kudaiyedutthavan * nNilaviya_idam thadamār *
varaivaLanNdhigazh madhakari maruppodu * malaivaLaragilunNdhi *
thiraikoNarnNdhaNai sezhunNadhi vayalpugu * thiruvayinNdhirapuramE. 3.1.8

Ragam

செஞ்சுருட்டி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1155. Our lord who, as Rāma, broke the bow to marry Sita with soft, fragrant dark hair, and carried Govardhanā mountain as an umbrella to stop the terrible storm and save the frightened cows and the cowherds stays in Thiruvayindirapuram where the flourishing river with its rolling waves brings the ivory of rutting elephants from the high mountains along with the fragrance of akil plants and deposits them all in the paddy fields.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விரை கமழ்ந்த மணம் கமழும்; மென் மென்மையான; கருங் குழல் கருத்த கூந்தலையுடைய; காரணம் ஸீதைக்காக; வில் இறுத்து வில்லை முறித்தவனும்; அடல் மழைக்கு நிரை பெருமழைக்கு பசுக்களின்; கலங்கிட துன்பத்தை நீக்க; வரை குடை மலையைக் குடையாக; எடுத்தவன் எடுத்தவனுமான; நிலவிய இடம் பெருமான் இருக்குமிடம்; தடம் ஆர் வளம் தடாகங்கள் நிறைந்த; வரை மலைகளுக்கு; திகழ் அழகு செய்து நிற்கும்; மத கரி மதயானைகளின்; மருப்பொடு தந்தங்களையும்; மலை வளர் மலைகளில் வளரும்; அகில் உந்தி அகில் மரத்தையும் தள்ளிக்கொண்டு; திரை வந்து அலைகள்; கொணர்ந்து அணை கொண்டு சேர்க்கும்; செழு நதி வளம் மிக்க நதி; வயல் புகு வயகளில் பாயும்; திருவயிந்திரபுரமே திருவயிந்திரபுரமே
virai nice fragrance; kamazhndha spreading; mel tender; karum kuzhal kAraNam for pirAtti who has dark hair; vil bow; iRuththu broke; adal battle ready; mazhaikku for the rain; nirai cattle; kalangida as they suffer; varai gOvardhana mountain; kudai as umbrella; eduththavan one who lifted and protected; nilaviya eternally residing; idam abode is; thadam ponds; Ar filled; varai for hills; vaLam being decoration; thigazh shining; madha kari intoxicated elephant-s; maruppodu tusk; malai vaLar growing in mountain; agil agil tree (a fragrant tree); undhi pushing; thirai wave; koNarndhu bringing; aNai reaching; sezhunadhi beautiful river; vayal in fertile fields; pugu flowing; thiruvayindhirapuramE thiruvahindhrapuram

PT 3.1.9

1156 வேல்கொள்கைத்தலத்துஅரசர்வெம்போரினில்
விசயனுக்காய், மணித்தேர் *
கோல்கொள்கைத்தலத்துஎந்தைபெம்மானிடம்
குலவுதண்வரைச்சாரல் *
கால்கொள்கண்கொடிக்கையெழக்
கமுகிளம்பாளைகள்கமழ்சாரல் *
சேல்கள்பாய்தருசெழுநதிவயல்புகு
திருவயிந்திரபுரமே.
1156 வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில் *
விசயனுக்கு ஆய் * மணித் தேர்
கோல் கொள் கைத் தலத்து எந்தை பெம்மான் இடம்- *
குலவு தண் வரைச் சாரல் **
கால் கொள் கண் கொடிக் கைஎழக் * கமுகு இளம்
பாளைகள் கமழ் சாரல் *
சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு *
திருவயிந்திரபுரமே-9 **
1156
vElkoLkaitthalaththu arasarvembOrinil * visayanukkāy *
maNitthEr kOlkoL kaitthalaththu enNdhaipemmānidam * kulavuthaN varaicchāral *
kālgoL kaNkodik kaiyezhak * kamugiLam pāLaigaL kamazhsāral *
sElgaLpāytharu sezhunNadhi vayalpugu * thiruvayinNdhirapuramE. 3.1.9

Ragam

செஞ்சுருட்டி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1156. Our father who drove the chariot for Arjunā in the cruel Bhārathā war and killed the Kauravās with strong spears in their hands stays in Thiruvayindirapuram where on the cool slopes of the hills betel leaves grow abundantly and the young kamugu trees with branches spread their fragrance while fish frolic in the flourishing rivers that flow to the fields.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கைத் தலத்து கையிலே; வேல் கொள் வேலாயுதம் உடைய; அரசர் வெம் துர்யோதனாதிகளின்; போரினில் கடும் பாரத யுத்தத்தில்; விசயனுக்கு ஆய் அர்ஜூனனுடைய; மணித்தேர் அழகிய தேர் முன்; கைத் தலத்து கையில்; கோல் கொள் கோல்பிடித்து நின்ற; எந்தை பெம்மான் இடம் எம்பெருமானுக்கு இருப்பிடம்; குலவு தண் கொண்டாடத்தக்க; வரைச் சாரல் குளிர்ந்த மலைச்சாரலில்; கால் கொள் வெற்றிலைக் கொடிகள் மிகுதியாக; கண் கொடி கைஎழ வளரப் பெற்றதும்; கமுகு பாக்கு மரங்களின்; இளம் பாளைகள் இளங்குருத்துகள்; கமழ் மணம் வீசும்; சாரல் சுற்றுப்புறம் உடையதும்; சேல்கள் மீன்கள்; பாய்தரு துள்ளி விளையாடுகிற; செழு நதி அழகிய ஆறானது; வயல் புகு வயல்களிலே பெருகப் பெற்றதுமான; திருவயிந்திரபுரமே திருவயிந்திரபுரமே
kaiththalaththu in the hand; vEl koL having spear; arasar dhuryOdhana et al, their; vem fearsome; pOrinil in mahAbhAratha battle; visayanukku Ay being exclusively favourable towards arjuna (his); maNith thEr in the front portion of the beautiful chariot; kOl stick; kaiththalaththu in the hand; koL held and stood; endhai lord of my clan; pemmAn for sarvESvaran; idam abode is; kulavu praised by everyone; thaN cool; varaich chAral on the surroundings of the mountain; kAl pole on which the creeper spreads; kaN koL growing in every branch; kodi creeper; kai ezha to nurture; kamugu areca trees; iLam pALaigaL young swathes; kamazh spreading fragrance; sAral having surroundings; sElgaL sEl fish; pAy tharu jumping; sezhu nadhi beautiful river; vayal pugu flowing into the fertile field; thiruvayindhirapuramE thiruvahindhrapuram

PT 3.1.10

1157 மூவராகிய ஒருவனை
மூவுலகுண்டுஉமிழ்ந்துஅளந்தானை *
தேவர்தானவர்சென்றுசென்றிறைஞ்சத்
தண்திருவயிந்திரபுரத்து *
மேவுசோதியை வேல்வலவன்
கலிகன்றிவிரித்துரைத்த *
பாவுதண்தமிழ்பத்திவைபாடிடப்
பாவங்கள்பயிலாவே. (2)
1157 ## மூவர் ஆகிய ஒருவனை * மூவுலகு
உண்டு உமிழ்ந்து அளந்தானை *
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்சத் * தண்
திருவயிந்திரபுரத்து **
மேவு சோதியை வேல் வலவன் * கலி
கன்றி விரித்து உரைத்த *
பாவு தண் தமிழ்ப் பத்து இவை பாடிடப் *
பாவங்கள் பயிலாவே-10 **
1157. ##
moovarāgiya oruvanai * moovulaguNdumizhnNdhu aLanNdhānai *
thEvar thānavar senRusenRu iRaiNYcha * thaNthiruvayinNdhirapuratthu *
mEvu sOdhiyai vElvalavaNn * kalikanRi viritthuraittha *
pāvuthaNdamizh patthivaipādidap * pāvangkaL payilāvE. (2) 3.1.10

Ragam

செஞ்சுருட்டி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1157. Kaliyan who carries a strong spear composed ten beautiful Tamil pāsurams praising the god of the gods in Thiruvayindirapuram where the gods of the sky and the Asurans go to worship him. He measured the earth and the sky with his two feet at Mahabali's sacrifice. If devotees sing these ten beautiful Tamil pāsurams, the results of their bad karmā will disappear.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மூவர் ஆகிய தானொருவனே; ஒருவனை மும்மூர்த்தியாக; மூவுலகு பிரளயகாலத்தில் மூன்று உலகங்களையும்; உண்டு உமிழ்ந்து உண்டு உமிழ்ந்து காத்து; அளந்தானை அளந்தவனும்; தேவர் தானவர் சென்று தேவர் அசுரர்கள்; சென்று இறைஞ்ச பலவாறாக துதிக்க; தண் குளிர்ந்த; திருவயிந்திரபுரத்து திருவயிந்திரபுரத்தில்; மேவு சோதிமயமான; சோதியை பெருமானைக் குறித்து; வேல் வலவன் கலி கன்றி திருமங்கை மன்னன்; விரித்து உரைத்த விரிவாக அருளிச்செய்த; பாவு தண் தமிழ் பரந்த அழகிய; இவை பத்து பாடிட பத்துப் பாசுரங்களையும் பாடிட; பாவங்கள் பயிலாவே பாவங்கள் சேராது
mUvar Agiya Having the forms of brahmA, vishNu and rudhra; oruvanai being matchless; mU ulagu three worlds; uNdu consumed; umizhndhu letting them out; aLandhAnai (retrieving from mahAbali) one who measured and accepted; dhEvar dhEvathAs; dhAnavar asuras; senRu senRu repeatedly go; iRainju to surrender; thaN invigorating; thiruvayindhirapuraththu in thiruvahindhrapuram; mEvu eternally residing; sOdhiyai on the radiant one; vEl valavan one who can defeat the enemies with his spear; kali kanRi thirumangai AzhwAr; viriththu elaborately; uraiththa mercifully explained; pAvu vast; thaN beautiful; thamizh thamizh language; ivai paththu these ten pAsurams; pAdida as one sings; pAvangaL sins; payilA will not remain.