கோவர்த்தன உத்தரணாதி அதி மானுஷ சேஷ்டிதங்களை செய்தவனே இங்கு உள்ளான் என்று எப்படி அறிந்தீர் என்று கேட்க ஸ்ரீ யபதி என்று இடையர்கள் அறிந்தார்கள் -ஆயர் புத்ரன் அல்லன் அரும் தெய்வம் -அன்றோ ப்ரேமம் உள்ளாருக்கு அவன் தன்னை மறைத்துக் கொண்டாலும் அறிவார்கள் போல் நீங்களும் அறியலாம் என்கிறார்
பேய் மகள் கொங்கை நஞ்சுண்ட பிள்ளை பரிசு இது வென்றால் மா நில மா மகள் மாதர் கேள்வன் இவன் என்றும்