Chapter 17

She praises the Divyadesams where the god stays and worships him - (தாமரைமேல்)

எம்பெருமான் தங்கியிருக்கும் திவ்ய தேசங்களை அவள் புகழ்ந்து வணங்குகிறாள்
Verses: 2772 to 2790
Grammar: Kaliveṇpā / கலிவெண்பா
Recital benefits: I will surely ride on a horse made of palm leaves.
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PTM 17.60

2772 தாமரைமேல்
மின்னிடையாள்நாயகனை விண்ணகருள்பொன்மலையை *
பொன்னிமணிகொழிக்கும் பூங்குடந்தைப்போர் விடையை *
தென்னன்குறுங்குடியுள் செம்பவளக்குன்றினை *
மன்னியதண் சேறை வள்ளலை * -
2772 தாமரைமேல்
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை *
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை *
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை *
மன்னிய தண் சேறை வள்ளலை 62
2772 tāmaraimel
miṉ iṭaiyāl̤ nāyakaṉai viṇ nakarul̤ pŏṉ malaiyai *
pŏṉṉi maṇi kŏzhikkum pūṅ kuṭantaip por viṭaiyai *
tĕṉṉaṉ kuṟuṅkuṭiyul̤ cĕm paval̤ak kuṉṟiṉai *
maṉṉiya taṇ ceṟai val̤l̤alai 62

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2772. “He, the beloved of the goddess with a lighting-like waist, fights in the war like a bull. He stays on the golden mountain of Thiruvinnagar and he is the god of the flourishing Kudandai where the Ponni river brings jewel and leaves them on its banks. Majestic as a red coral hill, he is the god of Thirukkkurungudi in the Pandiyan country. He is the generous god of Thiruthancherai. (62)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
தாமரைமேல் தாமரைப்பூவில் பிறந்தவளும்; மின் மின்னல் போன்ற; இடையாள் இடையுடையளுமான; நாயகனை பிராட்டிக்கு நாயகனும்; விண் நகருள் திருவிண்ணகரில்; பொன் பொன்; மலையை மலை போல் இருப்பவனும்; பொன்னி காவேரி நதி; மணி ரத்னங்களைக் கொண்டு; கொழிக்கும் தள்ளுமிடமான; பூங் குடந்தை அழகிய திருக்குடந்தையில்; போர் விடையை காளை போன்ற செருக்குடையவனும்; தென்னன் தென் திசையிலுள்ள; குறுங்குடியுள் திருக்குறுங்குடியிலே; செம்பவள சிவந்த பவழ; குன்றினை மலைபோல் இருப்பவனும்; மன்னிய தண் சேறை குளிர்ந்த திருச்சேறையில்; வள்ளலை இருக்கும் வள்ளலும்
thāmarai mĕl min idaiyāl̤ nāyaganai the consort of pirātti who was born on a lotus and who has a waist similar to lightning.; viṇṇagarul̤ ponmalaiyai one who is shining like a golden mountain at thiruviṇṇagar.; ponni maṇi kozhikkum pūngudandhai pŏrvidaiyai one who is reclining like a bull which has got tired after waging a war, at thirukkudandhai, where the river kāviri brings precious gems; then nan kuṛungudiyul̤ sembaval̤am kunṛinai one who is shining like a reddish coral like mountain at thirukkuṛungudi which is a distinguished divine abode in the southern direction; thaṇ sĕṛai manniya val̤l̤alai the supremely generous entity who has fittingly taken residence in the cool thiruchchĕṛai.

PTM 17.61

2773 மாமலர்மேல் அன்னம்துயிலும் அணிநீர்வயலாலி *
என்னுடையவின்னமுதை எவ்வுள் பெருமலையை *
கன்னிமதிள்சூழ் கணமங்கைக்கற்பகத்தை *
மின்னையிருசுடரை வெள்ளறையுள்கல்லறைமேற்
பொன்னை * மரதகத்தைப் புட்குழியெம்போரேற்றை *
மன்னுமரங்கத்துஎம்மாமணியை * -
2773 மா மலர்மேல் அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி *
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை *
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை *
மின்னை, இரு சுடரை, வெள்ளறையுள் கல் அறைமேல்
பொன்னை * மரதகத்தை புட்குழி எம் போர் ஏற்றை *
மன்னும் அரங்கத்து எம் மா மணியை * 63
2773 mā malarmel aṉṉam tuyilum aṇi nīr vayal āli *
ĕṉṉuṭaiya iṉ amutai ĕvvul̤ pĕru malaiyai *
kaṉṉi matil̤ cūzh kaṇamaṅkaik kaṟpakattai *
miṉṉai, iru cuṭarai, vĕl̤l̤aṟaiyul̤ kal aṟaimel
pŏṉṉai * maratakattai puṭkuzhi ĕm por eṟṟai *
maṉṉum araṅkattu ĕm mā maṇiyai * 63

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2773. my sweet nectar and the god of Thiruvayalāli (Thiruvāli) surrounded with beautiful water where swans sleep. Strong as a mountain, he is the god of Thiruyevvul, and generous as the karpagam tree, and the god of Thirukkannamangai surrounded with strong forts. He is lightning, the bright sun and moon and the god of Thiruvellarai. As precious as gold, he is the god of Thirukkallarai. Gold and emerald, a fighting bull, he is the god of Thiruputkuzhi. He, the god of everlasting Srirangam shines like a precious diamond. (63)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
மா மலர் மேல் சிறந்த தாமரைப் பூக்களின் மேல்; அன்னம் துயிலும் அன்னப்பறவைகள் உறங்கும்; அணி நீர் அழகிய நீர் நிறைந்த; வயல் வயல்களை உடைய; ஆலி திருவாலியில் இருக்கும்; என்னுடைய என்னுடைய; இன் அமுதை இனிய அமுதம் போன்றவனும்; எவ்வுள் பெரு திருவெவ்வுளுரில் பெரிய; மலையை மலை போன்றவனும்; கன்னி மதிள் சூழ் மதில்களாலே சூழப்பட்ட; கணமங்கை திருக்கண்ணமங்கையில்; கற்பகத்தை கற்பக விருக்ஷம் போல் இருப்பவனும்; மின்னை மின்னலைஒத்த ஒளியுள்ளவனாயிருப்பவனும்; இரு சூரிய சந்திரன் போன்ற ஒளியுள்ள; சுடரை சக்கரத்தை உடையவனும்; வெள்ளறையுள் திருவெள்ளறையில்; கல் அறைமேல் கருங்கல் மயமான ஸந்நிதியில்; பொன்னை பொன் போன்ற ஒளியுடனும்; மரதகத்தை மரகத பச்சை போன்ற வடிவுடன் இருப்பவனும்; புட்குழி திருப்புட் குழியிலே இருக்கும்; எம் போர் ஏற்றை போர் வேந்தன் போன்றவனும்; அரங்கத்து திருவரங்கத்தில்; மன்னும் இருப்பவனான எம்பெருமான்; எம் மா நீலமணிபோன்று; மணியை விளங்குகிறவனை
māmalar mĕl annam thuyilum swans sleeping on distinguished lotus flowers; aṇi nīr vayal āli thiruvāli, the divine abode, which has (agricultural) fields, full of water; ennudaiya innamudhai the supreme enjoyer, who is giving me dharṣan (for me to worship); evvul̤ perumalaiyai one who is reclining at thiruvevvul̤ (present day thiruval̤l̤ūr) as if a huge mountain were reclining; kanni madhil̤ sūzh kaṇamangai kaṛpagaththai one who is dwelling mercifully like a kalpaka vruksham (wish-fulfilling divine tree) at thirukkaṇṇamangai which is surrounded by newly built compound wall; minnai one who has periya pirātti (ṣrī mahālakshmi) who is resplendent like lightning; iru sudarai divine disc and divine conch which appear like sūrya (sun) and chandhra (moon); vel̤l̤aṛaiyul̤ at thiruvel̤l̤aṛai; kal aṛai mĕl inside the sannidhi (sanctum sanctorum) made of stones; ponnai shining like gold; maradhagaththai having a greenish form matching emerald; putkuzhi em pŏr ĕṝai dwelling in [the divine abode of] thirupputkuzhi, as my lord and as a bull ready to wage a war; arangaththu mannum residing permanently at thiruvarangam; em māmaṇiyai one who we can handle, like a blue gem

PTM 17.62

2774 வல்லவாழ்ப்
பின்னைமணாளனைப் பேரில்பிறப்பிலியை * (2)
தொன்னீர்க்கடல்கிடந்த தோளாமணிச்சுடரை *
என்மனத்துமாலை இடவெந்தையீசனை *
மன்னுங்கடல்மல்லை மாயவனை * -
2774 வல்லவாழ்ப்
பின்னை மணாளனைப் பேரில் பிறப்பிலியை *
தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை *
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை *
மன்னும் கடல்மல்லை மாயவனை * 64
2774 vallavāzhp
piṉṉai maṇāl̤aṉaip peril piṟappiliyai *
tŏl nīrk kaṭal kiṭanta tol̤ā maṇic cuṭarai *
ĕṉ maṉattu mālai iṭavĕntai īcaṉai *
maṉṉum kaṭalmallai māyavaṉai * 64

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2774. He, the beloved of Lakshmi, stays in Thiruvallavāzh. Never born, he is the god of Thirupper (Koiladi). He lies on Adisesha on the ancient ocean, He is a faultless shining jewel and he stays in my mind always. He is the lord of Thiruvidaventhai, the Māyavan, the god of Thirukkadalmallai, (64) worshipped by the gods in the sky

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
வல்ல வாழ் திருவல்லவாழில் இருக்கும்; பின்னை மணாளனை நப்பின்னையின் நாதனை; பிறப்பிலியை பிறப்பில்லாத எம்பெருமான்; பேரில் திருப்பேர் நகரில் உள்ளவனை; தொல் நீர் என்றும் அழியாத நீரையுடைய; கடல் கிடந்த கடலிலே கிடந்த பெருமானை; தோளா மணி துளைவிடாத ரத்னம் போன்ற; சுடரை ஒளியுள்ளவனை; என் மனத்து என் மனத்திலிருக்கும்; மாலை திருமாலை; இடவெந்தை திருவிடவெந்தையில்; ஈசனை இருக்கும் ஈசனை; கடல்மல்லை திருக்கடல்மல்லையிலே; மன்னும் இருக்கும்; மாயவனை மாயவனை
vallavāzh one who has taken residence at thiruvallavāzh; pinnai maṇāl̤anai being the consort of nappinnai pirātti (nīl̤ā dhĕvi); pĕril piṛappu iliyai dwelling at thiruppĕrnagar, being ready forever [to protect his followers]; thol nīr kadal kidandha one who reclined on the ocean during the time of great deluge; thŏl̤ā maṇi sudarai being the radiance of gem which has not been pierced; en manaththu mālai one who has deep love for me and who never leaves my mind; idavendhai īsanai supreme being who has taken residence at thiruvidavendhai; kadal mallai mannum māyavanai the amaśing entity who has taken permanent residence at thirukkadanmallai (present day mahābalipuram)

PTM 17.63

2775 வானவர்தம் சென்னிமணிச்சுடரைத் தண்கால் திறல்வலியை *
தன்னைப்பிறரறியாத் தத்துவத்தைமுத்தினை *
அன்னத்தைமீனை அரியைஅருமறையை *
முன்னிவ்வுலகுண்டமூர்த்தியை * -
2775 வானவர் தம் சென்னி மணிச் சுடரைத் தண்கால் திறல் வலியை *
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை *
அன்னத்தை மீனை அரியை அரு மறையை *
முன் இவ் உலகு உண்ட மூர்த்தியை * 65
2775 vāṉavar tam cĕṉṉi maṇic cuṭarait taṇkāl tiṟal valiyai *
taṉṉaip piṟar aṟiyāt tattuvattai muttiṉai *
aṉṉattai mīṉai ariyai aru maṟaiyai *
muṉ iv ulaku uṇṭa mūrttiyai * 65

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2775. He is the strong god of Thiruthangāl, the essence known by no one, a pearl. He took the form of a swan, fish, man-lion and he is the divine Vedās whose meaning no one knows. He swallowed all the worlds in ancient times. (65)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
வானவர் தம் நித்யசூரிகளுடைய; சென்னி மணி திருமுடிச் சுட்டியாக; சுடரை விளங்குபவனை; தண் கால் திருத்தண்காலில் இருக்கும்; திறல் வலியை மஹா பலசாலியை; தன்னை பிறர் அறியாத தன்னை பிறர் அறியாத; தத்துவத்தை தத்துவத்தை; முத்தினை முத்தைப் போன்றவனை; அன்னத்தை மீனை அன்னமாய் மீனாய்; அரியை நரசிம்மனாக அவதரித்த; அருமறையை வேதப் பொருளானவனை; முன் இவ் உலகு உண்ட மூன்று உலகங்களையும் உண்ட; மூர்த்தியை மூர்த்தியை
vānavar tham senni maṇi sudarai one who is radiant as the prime jewel for nithyasūris; thaṇkāl thiṛalvaliyai the hugely powerful entity who has taken residence at thiruththaṇkāl; thannai piṛar aṛiyā thaththuvaththai one whose nature cannot be known by others (who are not under the shadow of his divine mercy); muththinai one who is like a pearl; annaththai one who incarnated as a swan; mīnai one who incarnated as a fish; ariyai one who incarnated as hayagrīva (horse face, human body); arumaṛaiyai one who has the vĕdhas (sacred texts) as his form; mun i ulagu uṇda mūrththiyai in an earlier time, as the lord, keeping all these worlds in his divine stomach and looking after them

PTM 17.64

2776 கோவலூர் மன்னுமிடைகழி யெம்மாயவனை *
பேயலறப் பின்னும்முலையுண்டபிள்ளையை *
2776 கோவலூர் மன்னும் இடைகழி எம் மாயவனை *
பேய் அலறப் பின்னும் முலை உண்ட பிள்ளையை * 66
2776 kovalūr maṉṉum iṭaikazhi ĕm māyavaṉai *
pey alaṟap piṉṉum mulai uṇṭa pil̤l̤aiyai * 66

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

2776. He is the god of everlasting Thirukkovalur who drank the milk from Putanā as she screamed, (66)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
கோவலூர் திருக்கோவலூரில்; மன்னும் இடை கழி இடை கழியில் இருக்கும்; எம் மாயவனை எம் மாயவனை; பேய் அலறப்பின்னும் பேய் போல் கதறும்படியாக; முலை உண்ட பூதனையின் விஷப்பாலைப் பருகின; பிள்ளையை பிள்ளையை
kŏvalūr thirukkŏvalūr; idai kazhi mannum em māyavanai as our thirumāl (emperumān) who has taken permanent residence in the corridor [of mrigaṇdu maharishi’s hermitage] at thirukkŏvalūr; pĕy alaṛa mulai uṇda pil̤l̤aiyai as an infant who ate [from] the bosom of the demon pūthana such that she cried out in pain

PTM 17.65

2777 அள்ளல்வாய் அன்னமிரைதேர் அழுந்தூரெழுஞ்சுடரை *
தெந்தில்லைச் சித்திரகூடத்துஎன் செல்வனை * -
2777 அள்ளல்வாய் அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை *
தென் தில்லைச் சித்திரகூடத்து என் செல்வனை * 67
2777 al̤l̤alvāy aṉṉam irai ter azhuntūr ĕzhum cuṭarai *
tĕṉ tillaic cittirakūṭattu ĕṉ cĕlvaṉai * 67

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2777. the shining god of Thiruvazhundur where swans look for food in the wet mud. He, my dear lord, stays in south Thillai Chitrakudam, (67)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
அள்ளல் வாய் சேற்று நிலங்களில்; அன்னம் இரை அன்னப் பறவை இரை தேடும்; தேர் அழுந்தூர் தேர் அழுந்தூரில்; எழும் சுடரை இருக்கும் ஜோதியை; தென் தில்லை தென் திசையிலுள்ள; சித்திரகூடத்து தில்லைத் திருச்சித்திரக்கூடத்தில்; என் செல்வனை இருக்கும் என் செல்வனை
al̤l̤al vāy in marshy places; irai thĕr azhundhūr at thiruvazhundhūr, to seek prey; ezhum sudarai as an effulgent lamp; then thillaich chiththirakūdaththu en selvanai the wealthy entity (who has taken residence) at thillai chiththira kūtam, which is in the southern direction

PTM 17.66

2778 மின்னிமழைதவழும் வேங்கடத்துஎம்வித்தகனை * (2)
மன்னனை மாலிருஞ்சோலைமணாளனை *
கொல்நவிலும் ஆழிப்படையானை * -
2778 மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை *
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை *
கொல் நவிலும் ஆழிப் படையானை * 68
2778 miṉṉi mazhai tavazhum veṅkaṭattu ĕm vittakaṉai *
maṉṉaṉai māliruñcolai maṇāl̤aṉai *
kŏl navilum āzhip paṭaiyāṉai * 68

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2778. the clever god of Thiruvenkatam where clouds move with lightning. He, a king and the beloved of Lakshmi, stays in Thirumālirunjolai carrying a discus that kills his enemies. (68)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
மின்னி மழை ஒளிமயமாக சிகரங்களில்; தவழும் வேங்கடத்து திருவேங்கடத்தில் ஸஞ்சரிக்கும்; எம் வித்தகனை எம் வித்தகனை; மன்னனை எம்பெருமானை; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையிலுள்ள; மணாளனை மணாளனை; கொல் நவிலும் ஆழி கூரிய சக்கரத்தை; படையானை ஆயுதமாக உடையவனை
mazhai clouds; minni shining brightly; thavazhum coming to, gently; thiruvĕngadam at thiruvĕngadamalai (one who has taken residence); em viththaganai one who has amaśing qualities and activities, for us; mannanai as the supreme lord; mālirunjŏlai maṇāl̤anai as the bridegroom who has taken residence at thirumālirunjŏlai; kol navilum āzhi padaiyānai one who has as his weapon, the divine disc which is capable of annihilating enemies

PTM 17.67

2779 கோட்டியூர் அன்னவுருவினரியை * திருமெய்யத்து
இன்னமுதவெள்ளத்தை இந்தளூரந்தணனை *
மன்னுமதிள்கச்சி வேளுக்கையாளரியை *
மன்னியபாடகத்து எம்மைந்தனை * -
2779 கோட்டியூர் அன்ன உருவின் அரியை * திருமெய்யத்து
இன் அமுதவெள்ளத்தை இந்தளூர் அந்தணனை *
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை *
மன்னிய பாடகத்து எம் மைந்தனை * 69
2779 koṭṭiyūr aṉṉa uruviṉ ariyai * tirumĕyyattu
iṉ amutavĕl̤l̤attai intal̤ūr antaṇaṉai *
maṉṉu matil̤ kacci vel̤ukkai āl̤ ariyai *
maṉṉiya pāṭakattu ĕm maintaṉai * 69

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2779. He has the form of a man-lion in Thirukkottiyur, a flood of sweet nectar and the god of Thirumeyyam, the good Andanan of Thiruvindalur, the man-lion of Thiruvelukkai in Thirukkachi surrounded with strong forts. He is the young god of Thiruppādagam, (69)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
கோட்டியூர் திருக்கோட்டியூரில்; அன்ன உருவில் விலக்ஷணமாக இருக்கும்; அரியை நரசிம்ம மூர்த்தியை; திருமெய்யத்து திருமெய்யத்திலிருக்கும்; இன் அமுத இனிய அமுத; வெள்ளத்தை வெள்ளத்தை; இந்தளூர் திருவிந்தளூரிலிருக்கும்; அந்தணனை அந்தணனை; மன்னு அழகிய; மதிள் மதிள்களையுடைய; கச்சி காஞ்சீபுரத்தில்; வேளுக்கை திருவேளுக்கை என்னும் இடத்திலிருக்கும்; ஆள் அரியை நரசிம்ம மூர்த்தியை; பாடகத்து திருப்பாடகத்தில்; மன்னிய வாஸம் செய்யும்; எம் மைந்தனை எம் மைந்தனை
kŏttiyūr at thirukkŏttiyūr; anna uruvil ariyai as narasimhamūrththy (emperumān’s divine form with lion face and human body) who has such (distinguished) divine form; thiru meyyaththu in thirumeyyam; in amudham vel̤l̤aththai being greatly enjoyable as a sweet ocean of nectar; indhal̤ūr at thiruvindhal̤ūr; andhaṇanai being supremely merciful; kachchi in the town of kānchīpuram; vĕl̤ukkai āl̤ariyai as narasimha in the divine abode of thiruvĕl̤ukkai; pādagaththu manniya em maindhanai as our youthful entity at thiruppādagam where he has taken permanent residence

PTM 17.68

2780 வெஃகாவில் *
உன்னியயோகத்துறக்கத்தை * ஊரகத்துள்
அன்னவனை அட்டபுயகரத்தெம்மானேற்றை *
என்னைமனங்கவர்ந்தஈசனை * -
வானவர்தம் முன்னவனை
2780 வெஃகாவில்
உன்னிய யோகத்து உறக்கத்தை * ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை *
என்னை மனம் கவர்ந்த ஈசனை *
வானவர் தம் முன்னவனை 70
2780 vĕḵkāvil
uṉṉiya yokattu uṟakkattai * ūrakattul̤
aṉṉavaṉai aṭṭa puyakarattu ĕmmāṉ eṟṟai *
ĕṉṉai maṉam kavarnta īcaṉai *
vāṉavar tam muṉṉavaṉai 70

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2780. the god of Thiruvekkā sunk in deep yoga. He is the god of Thiruvuragam, the strong bull of Thiruvattapuyaharam and the Esan, the lord of lords, who stays in my heart. (70)"

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
வெஃகாவில் திருவெஃகாவிலிருக்கும்; உன்னிய யோகத்து யோக; உறக்கத்தை நித்திரையில் இருப்பவனை; ஊரகத்துள் அன்னவனை திருவூரகத்தில் இருப்பவனை; அட்ட புயகரத்து அட்டபுயகர தலத்திலுள்ள; எம்மான் ஏற்றை எம்பெருமானை; என்னை மனம் என் மனம்; கவர்ந்த ஈசனை கவர்ந்த ஈசனை; வானவர் தம் நித்யஸூரிகளின்; முன்னவனை தலைவனை
vehkāvil at thiruvehkā; unniya yŏgaththu uṛakkaththai one who is sleeping in yŏga [body and mind joined together] while being fully aware; ūragaththul̤ annavanai being very distinguished in thiruvūragam [a divine abode in kānchīpuram]; atta buya karaththu emmān ĕṝai being our lord at [the divine abode] attabuyakaram; ennai manam kavarndha īsanai the entity complete [in all aspects] who stole my heart; vānavar tham munnavanai being the leader of celestial entities

PTM 17.69

2781 மூழிக்களத்துவிளக்கினை *
அன்னவனை ஆதனூராண்டாளக்குமையனை *
நென்னலையின்றினை நாளையை * - நீர்மலைமேல் முன்னவனை
2781 மூழிக்களத்து விளக்கினை *
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை *
நென்னலை இன்றினை நாளையை * நீர்மலைமேல் முன்னவனை 71
2781 mūzhikkal̤attu vil̤akkiṉai *
aṉṉavaṉai ātaṉūr āṇṭu al̤akkum aiyaṉai *
nĕṉṉalai iṉṟiṉai nāl̤aiyai * nīrmalaimel muṉṉavaṉai 71

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2782. He, the god of the gods, is the light of Thirumuzhikkalam and the god of Thiruvādanur (ādanoor) giving food to all. He is past, present and future, (71) the god of Thiruneermalai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
மூழிக்களத்து திருமூழிக்களத்திலிருக்கும்; விளக்கினை விளக்கைப் போன்றவனை; அன்னவனை இப்படிப்பட்டவன் என்று சொல்ல முடியாதவனை; ஆதனூர் திரு ஆதனூரில்; ஆண்டு அளக்கும் சகல காலங்களுக்கும்; ஐயனை நிர்வாஹனனான ஐயனை; நென்னலை இன்றினை நேற்று இன்று; நாளையை நாளை என்னும் முக்காலத்துக்கும் தலைவனான; நீர் மலை மேல் முன்னவனை திருநீர்மலையில் இருப்பவனை
mūzhikkal̤aththu vil̤akkinai one who is shining at thirumūzhikkal̤am [a divine abode in kĕral̤a]; annavanai one who cannot be defined that he is like this; ādhanūr at thiruvādhanūr; āṇdu al̤akkum aiyanai one who controls passing of time; nennalai inṛinai nāl̤aiyai one who is the controller of yesterday, today and tomorrow; nīrmalai mĕl munnavanai one who has taken residence at thirunīrmalai

PTM 17.70

2782 மன்னும்மறைநான்குமானானை * புல்லாணித்
தென்னன்தமிழை வடமொழியை *
நாங்கூரில் மன்னுமணிமாடக் கோயில்மணாளனை *
நல்நீர்த்தலைச்சங்கநாண்மதியை * - நான்வணங்கும்
கண்ணனைக் கண்ணபுரத்தானை * தென்னறையூர்
மன்னுமணிமாடக் கோயில்மணாளனை *
2782 மன்னும் மறை நான்கும் ஆனானை * புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை *
நாங்கூரில் மன்னு மணிமாடக்கோயில் மணாளனை *
நல் நீர்த் தலைச்சங்க நாண்மதியை * நான் வணங்கும்
கண்ணனைக் கண்ணபுரத்தானை * தென் நறையூர்
மன்னு மணிமாடக்கோயில் மணாளனை * 72
2782 maṉṉum maṟai nāṉkum āṉāṉai * pullāṇit
tĕṉṉaṉ tamizhai vaṭamŏzhiyai *
nāṅkūril maṉṉu maṇimāṭakkoyil maṇāl̤aṉai *
nal nīrt talaiccaṅka nānmatiyai * nāṉ vaṇaṅkum
kaṇṇaṉaik kaṇṇapurattāṉai * tĕṉ naṟaiyūr
maṉṉu maṇimāṭakkoyil maṇāl̤aṉai * 72

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2783. He is the four everlasting Vedās. He is Tamizh Vedā flourishing in Thiruppullāni in the Pandiyan country and he is Sanskrit Vedā. He is the beloved of Lakshmi and shines like the moon, the god of Manimādakkoyil in Nāgai, and the god of Thalaichangam surrounded by the ocean. (72) I worship the god Kannan, the lord of Thirukkannapuram and of Manimādakkoyil in southern Thirunaraiyur. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
மறை நான்கும் நான்கு வேதங்களுமாக; மன்னும் ஆனானை ஆனவனை; புல்லாணித் திருப்புல்லாணியிலிருக்கும்; தென்னன் தமிழை தமிழ் வேதங்களுக்கும்; வடமொழியை சமஸ்க்ருத வேதங்களுக்கும் நிர்வாஹனனை; நாங்கூரில் திருநாங்கூரின்; மன்னும் மணிமாடக்கோயில் மணிமாடக் கோயிலில்; மணாளனை இருக்கும் மணாளனை; நல் நீர் நீர்வளம் உள்ள; தலைச் சங்க திருத்தலைச்சங்காட்டில்; நாள் மதியை முழு மதியைப்போல் விளங்கும்; நான் வணங்கும் நான் வணங்கும்; கண்ணனை கண்ணனை
maṛai nāngum ānānai having the form of four vĕdhas; pullāṇi one who has taken residence at thiruppullāṇi; thennan thamizhai vadamozhiyai one who is described by both thamizh and samaskrutha languages; nāngūr at thirunāngūr; maṇimādak kŏyil mannu maṇāl̤anai standing forever at maṇimādakkŏyil (divine abode in thanjāvūr) as a bridegroom; nal nīr thalaichchanga nāṇmadhiyai as the nāṇmadhiyapperumāl̤ at thalaichchangādu which is surrounded by good water; nān vaṇangum kaṇṇanai as kaṇṇan (krishṇa) who ī worship; kaṇṇapuraththānai one who is dwelling at thirukkaṇṇapuram; then naṛaiyūr maṇi mādak kŏyil mannu maṇāl̤anai one who has taken residence as a bridegroom in the famous thiruraṛaiyūr maṇi mādak kŏyil

PTM 17.71

2783 கல்நவில்தோள்காளையைக் கண்டாங்குக்கைதொழுது *
என்னிலைமையெல்லாம் அறிவித்தால்எம்பெருமான் *
தன்னருளுமாகமும் தாரானேல் * -
2783 கல் நவில் தோள் காளையைக் கண்டு ஆங்குக் கைதொழுது *
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான் *
தன் அருளும் ஆகமும் தாரானேல் * 73
2783 kal navil tol̤ kāl̤aiyaik kaṇṭu āṅkuk kaitŏzhutu *
ĕṉ nilaimai ĕllām aṟivittāl ĕm pĕrumāṉ *
taṉ arul̤um ākamum tārāṉel * 73

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2784. She says, “He is as strong as a bull with arms like mountains. I will go and see him, folding my hands and worshiping him. I will tell him how I feel, if my dear lord does not give his grace holding me close to his chest, (73)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
கண்ண புரத்தானை திருக்கண்ணபுரத்தானை; தென் நறையூர் தெற்கில் திருநறையூரிலிருக்கும்; மன்னும் மணி மாட மணிமாடம் என்ற; கோயில் கோயிலில்; மணாளனை இருக்கும் மணாளனை; கல் நவில் மலை போன்ற; தோள் காளையை தோள்களையுடைய பெருமானை; கண்டு கண்டு; ஆங்குக் கைதொழுது அங்கு வாழ்த்தி வணங்கி; என் நிலைமை எல்லாம் என் நிலைமை எல்லாம்; அறிவித்தால் விண்ணப்பம் செய்து கொண்டால்; எம் பெருமான் எம் பெருமான் அதைக் கேட்டு; தன் அருளும் தன் திருவருளையும்; ஆகமும் தன் மார்பையும்; தாரானேல் தரவில்லை என்றால்
kal navil thŏl̤ kāl̤aiyai one who is a youth with his shoulders similar to a mountain; āngu kaṇdu kai thozhudhu seeing him at that thirunaṛaiyūr and worshipping him; en nilaimai ellām aṛiviththāl if ī appeal to him, stating my dispositions ..; emperumān that perumān [supreme entity]; than arul̤um āgamum thārānĕl if he does not grant me his divine grace and his divine chest

PTM 17.72

2784 தன்னைநான் மின்னிடையார்சேரியிலும் வேதியர்கள்வாழ்விடத்தும் *
தன்னடியார்முன்பும் தரணிமுழுதாளும் *
கொல்நவிலும்வேல்வேந்தர்கூட்டத்தும்நாட்டகத்தும் *
தன்னிலைமையெல்லாம் அறிவிப்பன் * -
2784 தன்னை நான் மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும் *
தன் அடியார் முன்பும் தரணி முழுது ஆளும் *
கொல் நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும் *
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் * 74
2784 taṉṉai nāṉ miṉ iṭaiyār ceriyilum vetiyarkal̤ vāzhviṭattum *
taṉ aṭiyār muṉpum taraṇi muzhutu āl̤um *
kŏl navilum vel ventar kūṭṭattum nāṭṭakattum *
taṉ nilaimai ĕllām aṟivippaṉ * 74

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2785. I will go to the villages where girls with lightning-thin waists, Vediyars and sages live and tell the kings with spears that kill enemies in battles and all the crowds of people and the people who live in all countries about all the things he has done to me. ” (74).

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
தன்னை நான் அப்பெருமானை நான்; மின் இடையார் பெண்கள் உள்ள; சேரியிலும் இடங்களிலும்; வேதியர்கள்வாழும் வேதியர்கள் வாழும்; இடத்தும் இடங்களிலும்; தன் அடியார் அவனது பக்தர்கள்; முன்பும் முன்னிலையிலும்; தரணி முழுது ஆளும் பூ மண்டலம் முழுவதும் ஆளும்; கொல் நவிலும் வேல் பெரும் வேல் படைகளையுடைய; வேந்தர் கூட்டத்தும் அரசர்கள் கூட்டத்திலும்; நாட்டகத்தும் மற்றுமுள்ள தேசமெங்கும்; தன் நிலைமை என் நிலைமையையும்; எல்லாம் அவன் எனக்குச்செய்த துரோகத்தையும்; அறிவிப்பன் வெளிப்படுத்துவேன்
thannai that emperumān; nān ī (who know all his activities); min indaiyār sĕriyilum in the gatherings of women; vĕdhiyargal̤ vāzhvidaththum in the places where vaidhikas (those who follow vĕdhams) live; than adiyār munbum in the presence of emperumān’s followers; tharaṇi muzhudhāl̤um konnavilum vĕlvĕndhar kūttaththum in the courts of those kings who rule over the entire earthern region and who have cruel armies; nādu agaththum in all the other places; than nilaimai ellām aṛivippan ī will expose all his qualities

PTM 17.73

2785 தான்முனநாள்
மின்னிடையாய்ச்சியர்தம் சேரிக்களவிங்கண் *
துன்னுபடல்திறந்துபுக்கு * -
2785 தான் முன நாள்
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின்கண் *
துன்னு படல் திறந்து புக்கு * 75
2785 tāṉ muṉa nāl̤
miṉ iṭai āycciyar tam cerik kal̤aviṉkaṇ *
tuṉṉu paṭal tiṟantu pukku * 75

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2786

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
தான் முன நாள் முன்பொரு சமயம்; மின் மின்னலையொத்த; இடை நுண்ணிய இடையையுடைய; ஆய்ச்சியர் ஆய்ச்சியர்கள்; தம் சேரிக் களவின்கண் சேரியிலுள்ள அவர்களுடைய; துன்னு படல் குடிசைக் கதவுகளை; திறந்து புக்கு திறந்து கொண்டு உள்ளே புகுந்து; தயிர் வெண்ணெய் தயிர் வெண்ணெய்
munam nāl̤ in earlier time (during krishṇāvathāram); minnidai āychchiyar tham sĕri in the hamlet of cow-herd girls whose slender waists were like lightning; kal̤avin kaṇ in a cunning way; thunnu padal thiṛandhu by opening the gate woven with densely packed palm leaves; pukku entering

PTM 17.74

2786 தயிர்வெண்ணெய் தன்வயிறார விழுங்க *
கொழுங்கயல்கண் மன்னுமடவோர்கள் பற்றியோர்வான்கயிற்றால் *
பின்னுமுரலோடு கட்டுண்டபெற்றிமையும் *
அன்னதோர்பூதமாய் ஆயர்விழவின்கண் *
துன்னுசகடத்தால் புக்கபெருஞ்சோற்றை *
முன்னிருந்துமுற்றத்தான் துற்றியதெற்றெனவும் *
மன்னர்பெருஞ்சவையுள் வாழ்வேந்தர்தூதனாய் *
தன்னையிகழ்ந்துரைப்பத் தான்முனநாள்சென்றதுவும் *
மன்னுபறைகறங்க மங்கையர்தம்கண்களிப்ப *
கொன்னவிலுங்கூத்தனாய்ப் பெயர்த்துங்குடமாடி *
என்னிவன்? என்னப்படுகின்றஈடறவும் *
2786 தயிர் வெண்ணெய் தன் வயிறு ஆர விழுங்க *
கொழுங் கயல் கண் மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால் *
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும் *
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்கண் *
துன்னு சகடத்தால் புக்க பெருஞ் சோற்றை *
முன் இருந்து முற்றத் தான் துற்றிய தெற்றெனவும் *
மன்னர் பெருஞ் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய் *
தன்னை இகழ்ந்து உரைப்பத் தான் முன நாள் சென்றதுவும் *
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப *
கொல் நவிலும் கூத்தனாய்ப் பெயர்த்தும் குடம் ஆடி *
என் இவன்? என்னப்படுகின்ற ஈடறவும் * 76
2786 tayir vĕṇṇĕy taṉ vayiṟu āra vizhuṅka *
kŏzhuṅ kayal kaṇ maṉṉu maṭavorkal̤ paṟṟi or vāṉ kayiṟṟāl *
piṉṉum uraloṭu kaṭṭuṇṭa pĕṟṟimaiyum *
aṉṉatu or pūtamāy āyar vizhaviṉkaṇ *
tuṉṉu cakaṭattāl pukka pĕruñ coṟṟai *
muṉ iruntu muṟṟat tāṉ tuṟṟiya tĕṟṟĕṉavum *
maṉṉar pĕruñ cavaiyul̤ vāzh ventar tūtaṉāy *
taṉṉai ikazhntu uraippat tāṉ muṉa nāl̤ cĕṉṟatuvum *
maṉṉu paṟai kaṟaṅka maṅkaiyar tam kaṇ kal̤ippa *
kŏl navilum kūttaṉāyp pĕyarttum kuṭam āṭi *
ĕṉ ivaṉ? ĕṉṉappaṭukiṉṟa īṭaṟavum * 76

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2787. "She says, “When he went to the cowherd village, stole butter and yogurt churned and kept by beautiful fish-eyed cowherd women, and ate them and filled his stomach full, the women caught him and tied him to a mortar. When he took the form of a bhudam and ate all the food that the cowherds had kept for Indra, Indra grew angry, brought a storm, and the lord carried Govardhanā mountain as an umbrella and protected the cowherds and the cows from the storm. " "When Kannan went to Duriyodhana’s assembly for the Pāndavās as a messenger, he was disgraced by the Kauravās. He danced on a pot as drums were beaten and beautiful women saw looked on in enjoyment, exclaiming, ‘How could he dance so wonderfully?’"(76)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
தன் வயிறு ஆர விழுங்க தன் வயிறார விழுங்க; கொழுங் கயல் நல்ல கயல்மீன் போன்ற; கண் கண்களையுடைய; மன்னு அந்த; மடவோர்கள் பெண்கள்; பற்றி ஓர் அவனைப் பிடித்து; வான் கயிற்றால் ஒரு குறுங்கயிற்றால்; பின்னும் உரலோடு உரலோடு பிணைத்துக் கட்டிவிட; கட்டுண்ட கட்டுண்டவன்; பெற்றிமையும் தன்மை என்னே!; ஆயர் இடையர்கள்; விழவின் இந்திரனுக்குச் செய்த; கண் ஆராதனையில்; துன்னு பலபல; சகடத்தால் வண்டிகளில்; புக்க கொண்டு சேர்த்த; பெருஞ்சோற்றை பெருஞ் சோற்றை; அன்னது ஓர் வர்ணிக்க முடியாத ஒரு; பூதமாய் பெரும் பூதவடிவு கொண்டு; முன் இருந்து கண் முன்னேயிருந்தவற்றை; முற்ற துளிக்கூட மிச்சம் வைக்காதபடி; தான் துற்றிய தான் உட்கொண்ட; தெற்றெனவும் வெட்கக்கேடு தான் என்னே!; முன நாள் முன்பொரு சமயம்; வாழ்வேந்தர் பாண்டவர்களுக்கு; தூதனாய் தூதனாய்; தன்னை இகழ்ந்து கண்டவர்களும் இழிவாக; உரைப்ப பேசும்படி; மன்னர் துரியோதனாதி அரசர்களின்; பெருஞ் சவையுள் பெரும் சபையுள்; தான் சென்றதுவும் தான் சென்றதுவும் என்னே!; மங்கையர் தம் பெண்களின்; கண் களிப்ப கண்கள் களிக்கும்படி; மன்னு பறை அரையிலே கட்டிக்கொண்ட பறை; கறங்க ஒலிக்க; கொல் நவிலும் ஆணும் பெண்ணும் மகிழும்படி; கூத்தனாய் கூத்தாடுபவனாய்; பேர்த்தும் குடம் ஆடி மேலும் குடக்கூத்தாடி; என் இவன் இப்படியும் கூத்தாடுவான் ஒருவன் உண்டோ?; என்னப்படுகின்ற என்னும்படி; ஈடறவும் பெற்ற சீர்மைகேடு என்னே!
thayir veṇṇey curd and butter; than vayiṛu āra thān vizhunga as he gobbled these in order to fill up his stomach; kozhu kayal kaṇ eyes which are like carp (a fresh water fish); mannu madavŏral̤ women of the hamlet; paṝi catching him; ŏr vān kayiṝāl with a beautiful rope; uralŏdu (tied up) with the mortar; kattuṇda peṝimaiyum how great it was being tied down; āyar vizhavin kaṇ in the ārādhanai (worship) carried out by the herdspeople to indhira, the chief of celestial entities; thunnu sagadaththāl pukka peru sŏṝai the huge quantum of food carried by many carts; annadhu ŏr būdhamāy taking the form of a demon which cannot be spoken of in words; mun irundhu right in fornt of them; muṝa completely; thān he himself; thuṝiya eaten; theṝanavum what a shame!; munam nāl̤ during an earlier time; vāzhvĕndhar thūdhanāy as pāṇdava’s messenger; thannai igazhndhu uraippa to be spoken of despicably; mannar peru savaiyul̤ senṛadhum the way he went to the court of great kings (such as dhuriyŏdhanā et al); mangaiyar tham kaṇ kal̤ippa eyes of the (herd)ladies’ to rejoice; mannu paṛai kaṛanga the drum tied (to the waist) to sound; kol navilum kūththanāy carrying out the dance which kills (women); pĕrththum further; kudam ādi dancing with pots; en ivan ennappaduginṛa īdaṛavum getting ruined of character with people wondering “Will anyone dance like this?”

PTM 17.75

2787 தென்னிலங்கையாட்டி அரக்கர்குலப்பாவை *
மன்னனிராவணன்தன் நல்தங்கை * - வாளெயிற்றுத்
துன்னுசுடுசினத்துச் சூர்ப்பணகா சோர்வெய்தி *
பொன்னிறங்கொண்டு புலர்ந்தெழுந்தகாமத்தால் *
தன்னைநயந்தாளைத் தான்முனிந்து மூக்கரிந்து *
மன்னியதிண்ணெனவும்
2787 தென் இலங்கையாட்டி அரக்கர் குலப் பாவை *
மன்னன் இராவணன் தன் நல் தங்கை * வாள் எயிற்றுத்
துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகா சோர்வு எய்தி *
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால் *
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்து *
மன்னிய திண்ணெனவும் 77
2787 tĕṉ ilaṅkaiyāṭṭi arakkar kulap pāvai *
maṉṉaṉ irāvaṇaṉ taṉ nal taṅkai * vāl̤ ĕyiṟṟut
tuṉṉu cuṭu ciṉattuc cūrppaṇakā corvu ĕyti *
pŏṉ niṟam kŏṇṭu pularntu ĕzhunta kāmattāl *
taṉṉai nayantāl̤ait tāṉ muṉintu mūkku arintu *
maṉṉiya tiṇṇĕṉavum 77

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2788. "When Surpankaha, the princess of Lankā, Rāvana's sister, fell in love with Rāma, took the form of a beautiful woman and came to the forest and told Rāma that she loved him, Rāma was angry and cut off her nose. (77)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
தென் இலங்கையாட்டி தென்னிலங்கைக்கு அரசியும்; அரக்கர் குலப் பாவை அரக்கர் குலப் பாவையும்; மன்னன் இராவணன் ராவணனின் அன்புக்குரிய; தன் நல் தங்கை தங்கையானவளும்; வாள் எயிற்று வாள் போன்ற பற்களையுடையளும்; துன்னு எப்போதும்; சுடு சினத்து மிக்க கோபமுடையவளுமான; சூர்ப்பணகா சூர்ப்பணகை; புலர்ந்து எழுந்த மிகுந்த; காமத்தால் காம நோயால்; பொன் நிறம் கொண்டு நிறம் வெளுத்து; சோர்வு எய்தி பரவசப்பட்டு உடல் துவண்ட; தன்னை தன்னை இராமனை விரும்பிய; நயந்தாளை அந்த அரக்கியை; தான் முனிந்து அவன் சீற்றத்துடன்; மூக்கு அரிந்து மூக்கை அறுத்ததை; மன்னிய பெரிய வீரமெனெ; திண்ணெனவும் நினைத்துக் கொண்டிருப்பது என்னே!
then ilangaiyātti the queen of lankā in the south; arakkar kulapopāvai one who looked like an idol, born in the clan of demons; mannan irāvaṇan than nal thangai the affectionate sister of ḵing rāvaṇa; vāl̤ eyiṛu having teeth like a sword (being resplendent); thunnu sudu sinaththu having an anger which will singe; sūrppaṇakā called as sūrppaṇakā; pularndhu her body withered [lifeless]; ezhundha kāmaththāl due to the disease of lust which swelled; pon niram koṇdu her complexion became pale [lost its colour]; sŏrvu eydhi going into a trance; thannai nayandhāl̤ai that demonic woman who desired him; thān munindhu becoming fiery; mūkku arindhu cutting off her nose; manniya thiṇṇenavum how firm he became!

PTM 17.76

2788 வாய்த்தமலைபோலும் *
தன்னிகரொன்றில்லாத தாடகையை * மாமுனிக்காகத்
தென்னுலகமேற்றுவித்த திண்திறலும் *
2788 வாய்த்த மலை போலும் *
தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை * மா முனிக்காத்
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் * 78
2788 vāytta malai polum *
taṉ nikar ŏṉṟu illāta tāṭakaiyai * mā muṉikkāt
tĕṉ ulakam eṟṟuvitta tiṇ tiṟalum * 78

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2788. He also killed the mighty Thādagai when she came to fight with him. "(78)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
வாய்த்த மலை பெரியமலை போன்ற; போலும் உருவமுடையளும்; தன் நிகர் தனக்கு நிகர்; ஒன்று இல்லாத இல்லாதவளுமான; தாடகையை தாடகை என்பவளை; மா முனிக்கா விஸ்வாமித்ர முனிவருக்காக; தென் உலகம் ஏற்று வித்த யமலோகம் அடைவித்த; திண் திறலும் மிக்க பராக்ரமம் என்னே!
vāyththa malai pŏlum one who had the form similar to a mountain; than nigar onṛu illādha being incomparable; thātakaiyai a woman called as thātakā; māmunikkā for the sake of sage viṣvāmithra; then ulagam ĕṝuviththa so as to reach yamalŏkam (hell); thin thiṛalum what great strength

PTM 17.77

2789 மற்றிவைதான் (2)
உன்னியுலவாவுலகறிய ஊர்வன்நான் *
2789 மற்று இவைதான்
உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான் * 79
2789 maṟṟu ivaitāṉ
uṉṉi ulavā ulaku aṟiya ūrvaṉa nāṉ * 79

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2789. Thinking of all outworldly deeds and making them aware to the worldly people, I (Parakala Nayaki) (79)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
இவை தான் இப்படியாக உள்ள; மற்று மற்றும் பல செய்கைகளும்; உன்னி உலவா நினைத்துப் பார்க்க முடியாதவை; உலகு அவற்றை உலகத்தார்; அறிய அறியும்படி வெளிப்படுத்தி; நான் பரகால நாயகியான நான்
maṝu ivai thān various other activities which are similar to these; unni ulavā they cannot be thought of completely.; ulagu aṛiya announcing such activities so that people of the world would know; nān ī, parakāla nāyaki

PTM 17.78

2790 முன்னிமுளைத்தெழுந்து ஓங்கியொளிபரந்த *
மன்னியம்பூம் பெண்ணை மடல்.
2790 முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த *
மன்னிய பூம் பெண்ணை மடல் 80
2790 muṉṉi mul̤aittu ĕzhuntu oṅki ŏl̤i paranta *
maṉṉiya pūm pĕṇṇai maṭal 80

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2790. will write a letter, made of leaves, of a flourishing palm tree. ” (80)"

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
முன்னி முளைத்து முன் நின்று முளைத்தெழுந்து; எழுந்து ஓங்கி வளர்ந்து எழுந்த; ஓளி பரந்த மன்னிய பூம் ஒளி வீசும் அழகாக விளங்கும்; பெண்ணை மடல் பனைமடலைக் கொண்டு; ஊர்வன் மடலூரக்கடவேன்
munni standing up front; mul̤aiththu ezhundhu ŏngi ol̤i parandha manniya pū peṇṇai madal ī will engage with madal from beautiful, firm and splendorous palm leaf which has been taken from a well sprouted, high grown pam tree.