PTM 17.75

எனக்குத் திருமால் அருளாவிடில் அவனுடைய இரக்கமிலாச் செயல்களை யாவரிடமும் கூறி மடலூர்வேன்

2787 தென்னிலங்கையாட்டி அரக்கர்குலப்பாவை *
மன்னனிராவணன்தன் நல்தங்கை * - வாளெயிற்றுத்
துன்னுசுடுசினத்துச் சூர்ப்பணகா சோர்வெய்தி *
பொன்னிறங்கொண்டு புலர்ந்தெழுந்தகாமத்தால் *
தன்னைநயந்தாளைத் தான்முனிந்து மூக்கரிந்து *
மன்னியதிண்ணெனவும்
2787 tĕṉ ilaṅkaiyāṭṭi arakkar kulap pāvai *
maṉṉaṉ irāvaṇaṉ taṉ nal taṅkai * vāl̤ ĕyiṟṟut
tuṉṉu cuṭu ciṉattuc cūrppaṇakā corvu ĕyti *
pŏṉ niṟam kŏṇṭu pularntu ĕzhunta kāmattāl *
taṉṉai nayantāl̤ait tāṉ muṉintu mūkku arintu *
maṉṉiya tiṇṇĕṉavum 77

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2788. "When Surpankaha, the princess of Lankā, Rāvana's sister, fell in love with Rāma, took the form of a beautiful woman and came to the forest and told Rāma that she loved him, Rāma was angry and cut off her nose. (77)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தென் இலங்கையாட்டி தென்னிலங்கைக்கு அரசியும்; அரக்கர் குலப் பாவை அரக்கர் குலப் பாவையும்; மன்னன் இராவணன் ராவணனின் அன்புக்குரிய; தன் நல் தங்கை தங்கையானவளும்; வாள் எயிற்று வாள் போன்ற பற்களையுடையளும்; துன்னு எப்போதும்; சுடு சினத்து மிக்க கோபமுடையவளுமான; சூர்ப்பணகா சூர்ப்பணகை; புலர்ந்து எழுந்த மிகுந்த; காமத்தால் காம நோயால்; பொன் நிறம் கொண்டு நிறம் வெளுத்து; சோர்வு எய்தி பரவசப்பட்டு உடல் துவண்ட; தன்னை தன்னை இராமனை விரும்பிய; நயந்தாளை அந்த அரக்கியை; தான் முனிந்து அவன் சீற்றத்துடன்; மூக்கு அரிந்து மூக்கை அறுத்ததை; மன்னிய பெரிய வீரமெனெ; திண்ணெனவும் நினைத்துக் கொண்டிருப்பது என்னே!
then ilangaiyātti the queen of lankā in the south; arakkar kulapopāvai one who looked like an idol, born in the clan of demons; mannan irāvaṇan than nal thangai the affectionate sister of ḵing rāvaṇa; vāl̤ eyiṛu having teeth like a sword (being resplendent); thunnu sudu sinaththu having an anger which will singe; sūrppaṇakā called as sūrppaṇakā; pularndhu her body withered [lifeless]; ezhundha kāmaththāl due to the disease of lust which swelled; pon niram koṇdu her complexion became pale [lost its colour]; sŏrvu eydhi going into a trance; thannai nayandhāl̤ai that demonic woman who desired him; thān munindhu becoming fiery; mūkku arindhu cutting off her nose; manniya thiṇṇenavum how firm he became!