44

Ashtabhuyakaram

அஷ்டபுயகரம்

Ashtabhuyakaram

ஸ்ரீ அலர்மேல்மங்கை ஸமேத ஸ்ரீ ஆதிகேசவாய நமஹ

Thiru Ashtabhuja Karam is about a mile away from the Kanchi Varadaraja Perumal Sannidhi. In the 108 Divya Desams, this is the only one where the deity appears with eight hands, holding divine weapons.

In the four hands on the right, he holds the Sudarshana Chakra, a sword, a lotus flower, and an arrow. In the four hands on the left, he holds a conch,

+ Read more
திருஅஷ்டபுயகரம் காஞ்சி வரதராஜப் பெருமாள் சன்னதியிலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது. 108 திவ்யதேசங்களில், வேறு எந்த திவ்யதேசத்திலும் இல்லாதபடி இங்கு எம்பெருமான் 8 திருக்கரங்களுடன் திவ்ய ஆயுதங்கள் தாங்கி, சேவை சாதிக்கிறார்.

வலப்புறம் உள்ள 4 திருக்கரங்களில் சுதர்சன சக்கரம், + Read more
Thayar: Sri Alarmel Mangai, Padmāsani
Moolavar: Ādhi Kesava Perumāl, Chakradharar, Gajendra Varadhan
Utsavar: Aadhi Kesava Perumāl, Chakradharar, Gajendra Varadhan
Vimaanam: Kaganākkaruthi, VyOmākāra, Chakrākrudhi
Pushkarani: Gajendra
Thirukolam: Nindra (Standing)
Direction: West
Mandalam: Thondai Nādu
Area: Kanchipuram
State: TamilNadu
Aagamam: Pāncharāthram
Sampradayam: Thenkalai
Search Keyword: Attapuyaharam
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 2.8.1

1118 திரிபுரம்மூன்று எரித்தானும்
மற்றைமலர்மிசைமேல்அயனும்வியப்ப *
முரிதிரைமாகடல் போல்முழங்கி
மூவுலகும்முறையால்வணங்க *
எரியனகேசரவாளெயிற்றோடு
இரணியனாகம்இரண்டுகூறா *
அரியுருவாமிவரார்கொல்? என்ன
அட்டபுயகரத்தேனென்றாரே. (2)
1118 ## திரிபுரம் மூன்று எரித்தானும் * மற்றை
மலர்மிசைமேல் அயனும் வியப்ப *
முரி திரை மா கடல் போல் முழங்கி *
மூவுலகும் முறையால் வணங்க **
எரி அன கேசர வாள் எயிற்றோடு *
இரணியன் ஆகம் இரண்டு கூறா *
அரி உரு ஆம் இவர் ஆர்கொல்? என்ன- *
அட்டபுயகரத்தேன் என்றாரே-1 **
1118 ## tiripuram mūṉṟu ĕrittāṉum * maṟṟai
malarmicaimel ayaṉum viyappa *
muri tirai mā kaṭal pol muzhaṅki *
mūvulakum muṟaiyāl vaṇaṅka **
ĕri aṉa kecara vāl̤ ĕyiṟṟoṭu *
iraṇiyaṉ ākam iraṇṭu kūṟā *
ari uru ām ivar ārkŏl? ĕṉṉa- *
aṭṭapuyakaratteṉ ĕṉṟāre-1 **

Ragam

Darbhār / தர்பார்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1118. She asked her neighbors, “The sound of worship of the people in the three worlds was like the roaring waves of the ocean when he came as a man-lion with sharp teeth and red hair shining like fire and split open the chest of the Asuran Hiranyan while Shivā, burner of the three forts, and Nānmuhan on the lotus saw and worshiped him. Who is he? Tell me. ” They replied, “He told us he is from Attapuyaharam. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திரிபுரம் மூன்று எரித்தானும் திரிபுரம் எரித்த சிவனும்; மற்றை மலர்மிசை மேல் தாமரையில் பிறந்த; அயனும் வியப்ப பிரமனும் வியக்க; மூவுலகும் மூன்று லோகங்களிலும் உள்ளவர்களும்; முரி திரை அலைகளையுடைய; மா கடல் போல் பெரும் கடலைப்போல்; முழங்கி ஆரவாரத்துடன்; முறையால் வணங்க முறைபடி வணங்க; இரணியன் ஆகம் இரணியன் உடல்; இரண்டு கூறா இரண்டு கூறாகும்படி; எரிஅன கேசர நெருப்புப் போன்ற பிடரிமயிரையும்; வாள் எயிற்றோடு வாள் போன்ற பற்கள் உடைய; அரி உரு ஆம் இவர் நரசிம்ம உருவமுள்ள இப்பெரியவர்; ஆர்கொல்? என்ன யார் என்று நான் கேட்க அவர்; அட்டபுயகரத்தேன் நான் அட்டபுயகரத்தான்; என்றாரே உனக்காக வந்தேன் என்றாரே!
thiri flying (in the sky); mūnṛu puram three capital cities; eriththānum rudhra who burnt down; maṝai and; mĕl distinguished; malar misai ayanum brahmā who is born from the lotus in the divine navel [of bhagavān]; viyappa to become astonished; muri moving; thirai having waves; vast; kadalpŏl like ocean; muzhangi making tumultuous sound; mū ulagum residents of the three worlds; muṛaiyāl aptly; vaṇanga bow down at the divine feet; iraṇiyan hiraṇya-s; āgam body; iraṇdu kūṛā to become two pieces; eri a(n)na like fire; kĕsari mane; vāl̤ shining; eyiṝŏdu having canine teeth; ari uruvām in the form of narasimha; ivar ār kol? enna when asked -Who is he?-; attabuyagaraththĕn ī am the lord of thiruvattabuyagaram; enṛār mercifully said

PT 2.8.2

1119 வெந்திறல்வீரரில்வீரரொப்பார்
வேதமுரைத்துஇமையோர்வணங்கும் *
செந்தமிழ்பாடுவார்தாம்வணங்கும்
தேவரிவர்கொல்? தெரிக்கமாட்டேன் *
வந்துகுறளருவாய்நிமிர்ந்து
மாவலிவேள்வியில்மண்ணளந்த *
அந்தணர்போன்றுஇவரார்கொல்? என்ன
அட்டபுயகரத்தேனென்றாரே.
1119 வெம் திறல் வீரரில் வீரர் ஒப்பார் *
வேதம் உரைத்து இமையோர் வணங்கும் *
செந்தமிழ் பாடுவார்-தாம் வணங்கும் *
தேவர் இவர்கொல்? தெரிக்கமாட்டேன் **
வந்து குறள் உருவாய் நிமிர்ந்து *
மாவலி வேள்வியில் மண் அளந்த *
அந்தணர் போன்றிவர் ஆர்கொல்? என்ன- *
அட்டபுயகரத்தேன் என்றாரே-2 **
1119 vĕm tiṟal vīraril vīrar ŏppār *
vetam uraittu imaiyor vaṇaṅkum *
cĕntamizh pāṭuvār-tām vaṇaṅkum *
tevar ivarkŏl? tĕrikkamāṭṭeṉ **
vantu kuṟal̤ uruvāy nimirntu *
māvali vel̤viyil maṇ al̤anta *
antaṇar poṉṟivar ārkŏl? ĕṉṉa- *
aṭṭapuyakaratteṉ ĕṉṟāre-2 **

Ragam

Darbhār / தர்பார்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1119. She asked her neighbors, “Who is he? I do not know. Is he a strong heroic warrior? Do the gods in the sky recite Vedic hymns and worship him? Do the singers sing beautiful Tamil songs? Did he take the form of a dwarf at the sacrifice of Mahabali, grow to the sky and measure the earth? Who is he? Tell me. ” They replied, “He told us he is from Attapuyaharam. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இமையோர் வேதம் தேவர்கள் வேத அத்யாயனம்; உரைத்து வணங்கும் பண்ணி வந்து வணங்கும் மேன்மையும்; வெம் திறல் வீரரில் மிடுக்குடைய வீரரில் வீரமும்; வீரர் ஒப்பார் ஒப்பற்ற வீரரான ராமனைப்போன்றவரா?; செந்தமிழ் செந்தமிழ்; பாடுவார் தாம் பாடும் ஆழ்வார்கள்; வணங்கும் வணங்கும்; தேவர் இவர்கொல்? திருவேங்கடமுடையானா? இவர்; தெரிக்கமாட்டேன் யார் என்று தெரியவில்லையே; வந்து குறள் உருவாய் வாமனனாய் வந்து; நிமிர்ந்து மாவலி வளர்ந்து மாகாபலி; வேள்வியில் வேள்வியில்; மண் அளந்த உலகத்தை அளந்த சீலத்தையுடைய; அந்தணர் போன்றிவர் அந்தணர் போலிருக்கும் இவர்; ஆர்கொல்? என்ன யார்? என்று நான் கேட்க அவர்; அட்டபுயகரத்தேன் நான் அட்டபுயகரத்தான்; என்றாரே உனக்காக வந்தேன் என்றாரே!
imaiyŏr brahmā et al; vĕdham uraiththu reciting vĕdham and arriving; vaṇangum one who is surrendered upon; vem thiṛal having great strength; vīraril to have the brave men become impressed; vīrar oppār having greatness that is similar to that of the masculine ṣrī rāma, the son of emperor dhaṣaratha; sem thamizh beautiful thamizh; pāduvār thām mudhalāzhvārs who sing; vaṇangum surrender; dhĕvar having simplicity that is similar to that of thiruvĕngadamudaiyān;; ivar kol his identity; therikka māttĕn ī do not know;; māvali mahābali-s; vĕl̤viyil in the sacrificial arena; kuṛal̤ uruvāy vandhu coming with the vāmana-s form (when the water hit his divine hand); nimirndhu grew; maṇ earth; al̤andha one who measured and accepted; andhaṇar pŏnṛa one who resembles a brahmāchāri (celibate); ivar ār kol? enna when asked “Who is he?”; attabuyagaraththĕn ī am the lord of thiruvattabuyagaram; enṛār mercifully said

PT 2.8.3

1120 செம்பொனிலங்குவலங்கைவாளி
திண்சிலைதண்டொடுசங்கம்ஒள்வாள் *
உம்பரிருசுடராழியோடு
கேடகம்ஒண்மலர்பற்றிஎற்றே! *
வெம்புசினத்துஅடல்வேழம்வீழ
வெண்மருப்பொன்றுபறித்து * இருண்ட
அம்புதம்போன்றிவரார்கொல்? என்ன
அட்டபுயகரத்தேனென்றாரே.
1120 செம் பொன் இலங்கு வலங்கை வாளி *
திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள் *
உம்பர் இரு சுடர் ஆழியோடு *
கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே **
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ *
வெண் மருப்பு ஒன்று பறித்து * இருண்ட
அம்புதம் போன்றிவர் ஆர்கொல்? என்ன- *
அட்டபுயகரத்தேன் என்றாரே-3 **
1120 cĕm pŏṉ ilaṅku valaṅkai vāl̤i *
tiṇ cilai taṇṭŏṭu caṅkam ŏl̤ vāl̤ *
umpar iru cuṭar āzhiyoṭu *
keṭakam ŏṇ malar paṟṟi ĕṟṟe **
vĕmpu ciṉattu aṭal vezham vīzha *
vĕṇ maruppu ŏṉṟu paṟittu * iruṇṭa
amputam poṉṟivar ārkŏl? ĕṉṉa- *
aṭṭapuyakaratteṉ ĕṉṟāre-3 **

Ragam

Darbhār / தர்பார்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1120. She asked her neighbors, “He carries arrows that shine like pure gold, a strong bow, a club, a conch, the shining sword Nanthaham, a discus, a shield and flowers. He broke the white tusks of the strong angry elephant Kuvalayabeedam and killed it. Who is that dark cloud-colored one?” They replied, “He told us he is from Attapuyaharam. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வலங்கை இலங்கு வலது கையில் பிரகாசிக்கும்; செம் பொன் செம் பொன்னால் செய்யப்பட்ட; வாளி திண் பாணங்களையும் திடமான; சிலை வில்லையும்; தண்டொடு சங்கம் ஒள் வாள் கதை சங்கு வாள்; உம்பர் இரு சுடர் மிக உயர்ந்த பிரகாசமான; ஆழியோடு சக்கரமும்; கேடகம் கடகையும் ஆகியவைகளோடும்; ஒண் மலர் அழகிய மலர்களோடும்; பற்றி எற்றே! இருக்கும்; வெம்பு சினத்து அடல் மிக்க கோபமும் மிடுக்குமுடைய; வேழம் வீழ குவலயாபீடம் என்னும் யானை அழிய; வெண் மருப்பு வெளுத்த தந்தம்; ஒன்று பறித்து ஒன்றை முறித்த; இருண்ட அம்புதம் போன்று கருத்த மேகம் போன்ற இவர்; ஆர்கொல்? என்ன யார்? என்று நான் கேட்க அவர்; அட்டபுயகரத்தேன் நான் அட்டபுயகரத்தான்; என்றாரே உனக்காக வந்தேன் என்றாரே
valam kai in his divine right hand; ilangu shining; sem pon made of fresh gold; vāl̤i arrows; thiṇ strong; silai bow; thaṇdodu mace; sangam ṣrī pānchajanyam, the conch; ol̤ shining; vāl̤ divine dagger; umbar greater than (all other weapons); iru sudar having great radiance; āzhiyodu with the chakkaraththāzhvār (the disc); kĕdagam shield; ol̤ beautiful; malar flower; paṝi holding; eṝĕ wow!; vembu sinam great anger; adal strength; vĕzham kuvalayāpīdam, the elephant; vīzha to be killed; vel̤ maruppu onṛu a white tusk; paṛiththu broke; iruṇda being dark due to abundance of water; ambudham pŏnṛa like a cloud; ivar ār kol? enna when asked “Who is he?”; attabuyagaraththĕn ī am the lord of thiruvattabuyagaram; enṛār mercifully said

PT 2.8.4

1121 மஞ்சுயர்மாமணிக்குன்றம்ஏந்தி
மாமழைகாத்துஒருமாயவானை
அஞ்ச * அதன்மருப்பன்றுவாங்கும்
ஆயர்கொல்? மாயஅறியமாட்டேன் *
வெஞ்சுடராழியும்சங்கும்ஏந்தி
வேதமுன்ஓதுவர்நீதிவானத்து *
அஞ்சுடர்போன்றுஇவரார்கொல்? என்ன
அட்டபுயகரத்தேனென்றாரே.
1121 மஞ்சு உயர் மா மணிக் குன்றம் ஏந்தி *
மா மழை காத்து ஒரு மாய ஆனை
அஞ்ச * அதன் மருப்பு ஒன்று வாங்கும் *
ஆயர்கொல்? மாயம் அறியமாட்டேன் **
வெம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி *
வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து *
அம் சுடர் போன்றிவர் ஆர்கொல்? என்ன- *
அட்டபுயகரத்தேன் என்றாரே-4 **
1121 mañcu uyar mā maṇik kuṉṟam enti *
mā mazhai kāttu ŏru māya āṉai
añca * ataṉ maruppu ŏṉṟu vāṅkum *
āyarkŏl? māyam aṟiyamāṭṭeṉ **
vĕm cuṭar āzhiyum caṅkum enti *
vetam muṉ otuvar nīti vāṉattu *
am cuṭar poṉṟivar ārkŏl? ĕṉṉa- *
aṭṭapuyakaratteṉ ĕṉṟāre-4 **

Ragam

Darbhār / தர்பார்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1121. She asked her neighbors, “Our Mayavan carried Govardhanā mountain that shone like a precious jewel covered with clouds and saved the cows from the storm. Did he take the tusks of the elephant Kuvalayabeedam? I don’t know his māyam. He carries a shining discus and a conch and stays among the Vediyars like a beautiful light in the sky. Who is he?” They replied, “He said he is from Attapuyaharam. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மஞ்சு உயர் மேக மண்டலம் வரையில் உயர்ந்ததும்; மா மணி ரத்னமயமான; குன்றம் ஏந்தி கோவர்த்தன மலையைத் தூக்கி; மா மழை காத்து பெரும் மழையைக் காத்தவரும்; ஒரு மாய ஆனை ஒரு மாய யானை குவலயாபீடம்; அஞ்ச அதன் மருப்பு அஞ்ச அதன் கொம்பை; ஒன்று வாங்கும் முறித்தெறிந்தவரும்; ஆயர்கொல்? மாயம் ஆயர்குல கண்ணனோ?; அறியமாட்டேன் தெரியவில்லையே; வெம் சுடர் வெளுத்த பிரகாசமான; ஆழியும் சக்கரத்தையும்; சங்கும் ஏந்தி சங்கையும் ஏந்திக் கொண்டிருப்பவர் முன்; நீதி வானத்து தேவர்கள் முறை தவறாத; வேதம் வேதங்களை; முன் ஓதுவர் ஓதிக்கொண்டிருக்கும் பரமபதத்தில் இருக்கும்; அம் சுடர் போன்று இவர் பரஞ்சோதி போன்றவரான இவர்; ஆர்கொல்? என்ன யார்? என்று நான் கேட்க அவர்; அட்டபுயகரத்தேன் நான் அட்டபுயகரத்தான்; என்றாரே என்றார்
manju up to cloud range; uyar risen; māmaṇi having best gems; kunṛam gŏvardhana hill; ĕndhi lifted; māmazhai huge rain; kāththu stopped; oru matchless; māyam amaśing; ānai kuvalayāpīdam; anja to fear; adhan maruppu onṛu one of its tusks; vāngum broke; āyarkol is it krishṇa!; māyam amaśing acts; aṛiya māttĕn ī don-t know;; vem sudar having cruel radiance; āzhiyum thiruvāzhi āzhwān (chakkaraththāzhvār); sangum ṣrī pānchajanyam; ĕndhi holding; vĕdham mun ŏdhuvar spoke words which are similar to vĕdham;; nīdhi orderly; vānaththu eternally residing in paramapadham; anjudar pŏnṛa like the greatly radiant bhagavān; ivar ār kol? enna when asked “Who is he?”; attabuyagaraththĕn ī am the lord of thiruvattabuyagaram; enṛār mercifully said

PT 2.8.5

1122 கலைகளும்வேதமும்நீதிநூலும்
கற்பமும்சொற்பொருள்தானும் * மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்
நீர்மையினால்அருள்செய்து * நீண்ட
மலைகளும்மாமணியும் மலர்மேல்
மங்கையும்சங்கமும் தங்குகின்ற *
அலைகடல்போன்றுஇவரார்கொல்? என்ன
அட்டபுயகரத்தேனென்றாரே.
1122 கலைகளும் வேதமும் நீதி நூலும் *
கற்பமும் சொல் பொருள்-தானும் * மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் *
நீர்மையினால் அருள்செய்து ** நீண்ட
மலைகளும் மா மணியும் * மலர்மேல்
மங்கையும் சங்கமும் தங்குகின்ற *
அலை கடல் போன்றிவர் ஆர்கொல்? என்ன- *
அட்டபுயகரத்தேன் என்றாரே-5 **
1122 kalaikal̤um vetamum nīti nūlum *
kaṟpamum cŏl pŏrul̤-tāṉum * maṟṟai
nilaikal̤um vāṉavarkkum piṟarkkum *
nīrmaiyiṉāl arul̤cĕytu ** nīṇṭa
malaikal̤um mā maṇiyum * malarmel
maṅkaiyum caṅkamum taṅkukiṉṟa *
alai kaṭal poṉṟivar ārkŏl? ĕṉṉa- *
aṭṭapuyakaratteṉ ĕṉṟāre-5 **

Ragam

Darbhār / தர்பார்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1122. She asked her neighbors, “He gave the arts, the Vedās, the books on morals, the garbhasutras, grammar, philosophy and all other things to the gods in the sky and to the world. He has a strong mountain-like body and he is ornamented with precious jewels. Lakshmi on a lotus stays on his chest. Who is he with a conch in his hand?” They replied, “He said he is from Attapuyaharam. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கலைகளும் வேதமும் வேதமும் உபநிஷதங்களும்; நீதி நூலும் இதிகாசங்களும் புராணங்களும்; கற்பமும் சொல் கல்ப சூத்திரமும் வியாகரணமும்; பொருள் தானும் மீமாம்சையும்; மற்றை மற்றும்; நிலைகளும் அவரவர்க்கு உரிய ஸ்தானங்களையும்; நீர்மையினால் கிருபையினால்; வானவர்க்கும் தேவர்களுக்கும்; பிறர்க்கும் மனிதர்களுக்கும்; அருள் செய்து அளித்தவரும்; நீண்ட மலைகளும் பெரிய மலை போன்ற தோள்களும்; மா மணியும் சிறந்த கௌஸ்துபமணியும்; மலர் மேல் தாமரையில் பிறந்த; மங்கையும் மஹாலக்ஷ்மியும்; சங்கமும் தங்குகின்ற சங்கும் இருக்கும்; அலை கடல் போன்று அலை கடல் போன்றவருமான; இவர் ஆர்கொல்?என்ன இவர் யார்? என்று நான் கேட்க அவர்; அட்டபுயகரத்தேன் நான் அட்டபுயகரத்தான்; என்றாரே உனக்காக வந்தேன் என்றாரே
kalaigal̤um the second half of vĕdham (i.e. vĕdhāntham) and brahma sūthram; vĕdhamum the first half of vĕdham; nīdhi nūlum ithihāsam etc; kaṛpamum kalpa sūthram; sollum vyākaraṇam (grammar); porul̤um mīmāsā; maṝai further; nilaigal̤um the abodes (which are attained by those who follow these ṣāsthrams); nīrmaiyināl by the quality of being a lord; vānavarkkum for the dhĕvathās; piṛarkkum for the humans; arul̤ seydhu bestowed; nīṇda malaigal̤um divine shoulders which resemble huge mĕru mountain; māmaṇiyum ṣrī kausthuba jewel; malar mĕl mangaiyum periya pirāttiyār who has lotus flower as her birth place; sangamum ṣrī pānchajanyam; thanguginṛa eternally and firmly present; alai kadal pŏnṛa like an ocean with rising tides; ivar ār kol? enna when asked “Who is he?”; attabuyagaraththĕn ī am the lord of thiruvattabuyagaram; enṛār mercifully said

PT 2.8.6

1123 எங்ஙனும்நாம்இவர்வண்ணம்எண்ணில்
ஏதும்அறிகிலம், ஏந்திழையார் *
சங்கும்மனமும்நிறைவும்எல்லாம்
தம்மனவாகப்புகுந்து * தாமும்
பொங்குகருங்கடல்பூவைகாயா
போதவிழ்நீலம்புனைந்தமேகம் *
அங்ஙனம்போன்றுஇவரார்கொல்? என்ன
அட்டபுயகரத்தேனென்றாரே.
1123 எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் *
ஏதும் அறிகிலம் ஏந்திழையார் *
சங்கும் மனமும் நிறையும் எல்லாம் *
தம்மன ஆகப் புகுந்து ** தாமும்
பொங்கு கருங் கடல் பூவை காயா *
போது அவிழ் நீலம் புனைந்த மேகம் *
அங்ஙனம் போன்றிவர் ஆர்கொல்? என்ன- *
அட்டபுயகரத்தேன் என்றாரே-6 **
1123 ĕṅṅaṉum nām ivar vaṇṇam ĕṇṇil *
etum aṟikilam entizhaiyār *
caṅkum maṉamum niṟaiyum ĕllām *
tammaṉa ākap pukuntu ** tāmum
pŏṅku karuṅ kaṭal pūvai kāyā *
potu avizh nīlam puṉainta mekam *
aṅṅaṉam poṉṟivar ārkŏl? ĕṉṉa- *
aṭṭapuyakaratteṉ ĕṉṟāre-6 **

Ragam

Darbhār / தர்பார்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1123. She asked her neighbors, “I don’t know anything about him. He attracts the minds of girls and steals their chastity and enters their hearts. He makes their conch bangles loose. He has the color of the rising dark ocean, a puuvai bird, a kāyām flower, a blossoming neelam flower or thick clouds. Who is he?” They replied, “He said that he is from Attapuyaharam. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாம் இவர் வண்ணம் நாம் இவரைப் பற்றி; எங்ஙனும் எண்ணில் எவ்விதமாக அறியப் பார்த்தாலும்; ஏதும் அறிகிலம் ஒன்றும் அறிய முடியவில்லை; ஏந்திழையார் ஆபரணம் அணிந்திருக்கும் அபலைப் பெண்களின்; சங்கும் மனமும் வளைகளும் மனமும்; நிறையும் எல்லாம் அடக்கமுமாகிய எல்லாம்; தம்மன ஆக தம்முடையது என்று நினைத்து; புகுந்து தாமும் இங்கு வந்து சேர்ந்து; பொங்கு கருங்கடல் பொங்கும் கருங்கடல்; பூவை காயா பூவைப்பூ காயாம்பூ; போது அவிழ் நீலம் மலர்ந்த கருநெய்தல் பூ; புனைந்த மேகம் அழகிய மேகம் ஆகிய; அங்ஙனம் போன்றிவர் இவற்றைப் போலேயிருக்கிற இவர்; ஆர்கொல்? என்ன யார்? என்று நான் கேட்க அவர்; அட்டபுயகரத்தேன் நான் அட்டபுயகரத்தான்; என்றாரே உனக்காக வந்தேன் என்றாரே
nām we; ivar vaṇṇam his qualities/aspects; engan in any which way; eṇṇilum try to find out; ĕdhum even a little bit; aṛigilam unable to know;; ĕndhu decorated; izhaiyār helpless girls who are with ornaments, their; sangum bangle; manamum mind; niṛaivum humility; ellām all of these; tham manavāga considering to be his; pugundhu arrived and entered; pongu very tumultuous; karum dark; kadal ocean; pūvai leaved bilberry tree; kāyā another tree named kāyā, its flower; pŏdhu avizh blossoming at the right time; neelam another dark coloured flower named karuneydhal; punaindha spoken along with these; mĕgam cloud groups; anganam pŏnṛa one who resembles those; ivar ār kol? enna when asked “Who is he?”; attabuyagaraththĕn ī am the lord of thiruvattabuyagaram; enṛār mercifully said

PT 2.8.7

1124 முழுசிவண்டாடியதண்டுழாயின்
மொய்ம்மலர்க்கண்ணியும் * மேனியஞ்சாந்
திழிசியகோலம்இருந்தவாறும்
எங்ஙனம்சொல்லுகேன்? ஓவிநல்லார் *
எழுதியதாமரையன்னகண்ணும்
ஏந்தெழிலாகமும் தோளும்வாயும் *
அழகியதாம்இவரார்கொல்? என்ன
அட்டபுயகரத்தேனென்றாரே.
1124 முழுசி வண்டு ஆடிய தண் துழாயின் *
மொய்ம் மலர்க் கண்ணியும் மேனி * அம் சாந்து
இழுசிய கோலம் இருந்தவாறும் *
எங்ஙனம் சொல்லுகேன்? ஓவி நல்லார் **
எழுதிய தாமரை அன்ன கண்ணும் *
ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும் *
அழகியதாம் இவர் ஆர்கொல்? என்ன- *
அட்டபுயகரத்தேன் என்றாரே-7 **
1124 muzhuci vaṇṭu āṭiya taṇ tuzhāyiṉ *
mŏym malark kaṇṇiyum meṉi * am cāntu
izhuciya kolam iruntavāṟum *
ĕṅṅaṉam cŏllukeṉ? ovi nallār **
ĕzhutiya tāmarai aṉṉa kaṇṇum *
entu ĕzhil ākamum tol̤um vāyum *
azhakiyatām ivar ārkŏl? ĕṉṉa- *
aṭṭapuyakaratteṉ ĕṉṟāre-7 **

Ragam

Darbhār / தர்பார்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1124. She asked her neighbors, “How can I describe the beauty of the thulasi garland that adorns him, swarming with bees? His body is fragrant with sandal paste and his lotus eyes look like a picture painted by a master. He has a majestic chest and arms and a beautiful mouth. Who is this handsome one?” They said, “He said he is from Attapuyaharam. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டு வண்டுகள்; முழுசி ஆடிய முழுகி ஆடிய தேனிலே; தண் துழாயின் குளிர்ந்த திருத்துழாயினால்; மொய்ம் அடர்த்தியாக தொடுக்கப்பட்ட; மலர்க் கண்ணியும் பூமாலையும்; மேனி அம் சாந்து திருமேனியிலே அழகிய சந்தனமும்; இழுசிய கோலம் இருந்தவாறும் பூசப்பெற்ற கோலத்தை; எங்ஙனம் சொல்லுகேன்? என்னவென்று சொல்லுவேன்?; ஓவி நல்லார் சித்ரமெழுதுவதில் வல்லவர்கள்; எழுதிய தாமரை எழுதின தாமரை இதழ்; அன்ன கண்ணும் போன்ற கண்களும்; ஏந்து எழில் ஆகமும் மிக்க அழகையுடைய திருமார்வும்; தோளும் வாயும் தோளும் வாயும்; அழகியதாம் அழகியதாக அமையப்பெற்ற இவர்; இவர் ஆர்கொல்? என்ன யார்? என்று நான் கேட்க அவர்; அட்டபுயகரத்தேன் நான் அட்டபுயகரத்தான்; என்றாரே உனக்காக வந்தேன் என்றாரே
vaṇdu beetles; muzhusi being drowned (in honey); ādiya dancing with great joy; thaṇ cool; thuzhāyin thiruththuzhāy-s; moy densely strung; malark kaṇṇiyum the way in which the garland (was mercifully worn); mĕni on the divine form; am beautiful; sāndhu izhusiya decorated with sandalwood paste; kŏlam irundhavāṛum the way in which such decoration was; enganam how; sollugĕn am ī going to completely speak about it?; ŏvi in drawing; nallār experts; ezhudhiya drawn; thāmarai anna like a lotus petal; kaṇṇum divine eyes; ĕndhu ezhil having great radiance; āgamum divine chest; thŏl̤um divine shoulders; vāyum divine lips; azhagiyadhām are beautiful!; ivar ār kol? enna when asked “Who is he?”; attabuyagaraththĕn ī am the lord of thiruvattabuyagaram; enṛār mercifully said

PT 2.8.8

1125 மேவிஎப்பாலும்விண்ணோர்வணங்க
வேதமுரைப்பர்முந்நீர்மடந்தை
தேவி * அப்பால்அதிர்சங்கம்இப்பால்
சக்கரம்மற்றிவர்வண்ணம்எண்ணில் *
காவியொப்பார்கடலேயுமொப்பார்
கண்ணும்வடிவும்நெடியராய் * என்
ஆவியொப்பார்இவரார்கொல்? என்ன
அட்டபுயகரத்தேனென்றாரே.
1125 மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க *
வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை
தேவி * அப்பால் அதிர் சங்கம் இப்பால்
சக்கரம் * மற்று இவர் வண்ணம் எண்ணில் **
காவி ஒப்பார் கடலேயும் ஒப்பார் *
கண்ணும் வடிவும் நெடியர் ஆய் * என்
ஆவி ஒப்பார் இவர் ஆர்கொல்? என்ன- *
அட்டபுயகரத்தே என்றாரே-8 **
1125 mevi ĕppālum viṇṇor vaṇaṅka *
vetam uraippar munnīr maṭantai
tevi * appāl atir caṅkam ippāl
cakkaram * maṟṟu ivar vaṇṇam ĕṇṇil **
kāvi ŏppār kaṭaleyum ŏppār *
kaṇṇum vaṭivum nĕṭiyar āy * ĕṉ
āvi ŏppār ivar ārkŏl? ĕṉṉa- *
aṭṭapuyakaratte ĕṉṟāre-8 **

Ragam

Darbhār / தர்பார்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1125. She asked her neighbors, “He taught the Vedās to the sages while the gods, standing in all the directions, worshiped him. He, the beloved of the earth goddess, has the color of the ocean and carries a sounding conch and a discus in his hands. His eyes are like beautiful kāvi flowers. He is tall and he is like my life. Who is he?” They said, “He said he is from Attapuyaharam. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விண்ணோர் நித்யஸுரிகள்; எப்பாலும் மேவி வணங்க எல்லா திக்குகளிலும் வணங்கி; வேதம் உரைப்பர் வேதங்களை ஓதுபவர்; முந்நீர் மடந்தை கடலில் பிறந்த மஹலக்ஷ்மி இவருக்கு; தேவி பட்டமஹிஷியானவள்; அப்பால் அதிர் சங்கம் முழங்குகின்ற சங்கு இடதுபுறமும்; இப்பால் சக்கரம் சக்கரம் வலதுபுறமும்; மற்று இவர் மேலும் இவருடைய; வண்ணம் எண்ணில் நிறமோவெனில்; காவி ஒப்பார் கருநெய்தல் பூவின் நிறத்தை ஒத்திருக்கிறார்; கடலேயும் ஒப்பார் கடலையும் ஒத்திருக்கிறார்; கண்ணும் வடிவும் கண்களிலும் வடிவழகிலும்; நெடியர் ஆய் என் இப்படிப்பட்டவர் என்று அளவிட முடியாதவராய்; ஆவி ஒப்பார் இவர் என் உயிரை ஒத்திருக்கின்ற இவர்; ஆர்கொல்? என்ன யார்? என்று நான் கேட்க அவர்; அட்டபுயகரத்தேன் என்றாரே நான் அட்டபுயகரத்தான்; என்றாரே உனக்காக வந்தேன் என்றாரே
viṇṇŏr nithyasūris; eppālum in all directions; mĕvi remaining firmly; vaṇanga worshipped; vĕdham with vĕdhams; uraippar will praise;; munnīr born in thiruppāṛkadal (milk ocean); madandhai periya pirāttiyār; dhĕvi remains his crowned consort;; adhir tumultuous; sangam ṣrī pānchajanyāzhwān; appāl present in his left side;; sakkaram thiruvāzhiyāzhwān (chakra); ippāl present in his right side;; maṝu further; ivar his; vaṇṇam complexion; eṇṇil if we analysed and tried to speak about it; kāvi the colour of karuneydhal flower [blue īndian water-lily]; oppār matching; kadal the colour of ocean; oppār matching; kaṇṇum in the beauty of his divine eyes; vadivum in the beauty of his divine form; nediyarāy being immeasurable; en for me; āvi oppār is like my life;; ivar ār kol? enna when asked “Who is he?”; attabuyagaraththĕn ī am the lord of thiruvattabuyagaram; enṛār mercifully said

PT 2.8.9

1126 தஞ்சம்இவர்க்கென்வளையும்நில்லா
நெஞ்சமும்தம்மதேசிந்தித்தேற்கு *
வஞ்சிமருங்குல்நெருங்கநோக்கி
வாய்திறந்துஒன்றுபணித்ததுஉண்டு *
நஞ்சமுடைத்திவர்நோக்கும்நோக்கம்
நான்இவர்தம்மைஅறியமாட்டேன்
அஞ்சுவன்மற்றிவரார்கொல்? என்ன
அட்டபுயகரத்தேனென்றாரே.
1126 தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா *
நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு *
வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி *
வாய் திறந்து ஒன்று பணித்தது உண்டு **
நஞ்சம் உடைத்து இவர் நோக்கும் நோக்கம் *
நான் இவர்-தம்மை அறியமாட்டேன் *
அஞ்சுவன் மற்று இவர் ஆர்கொல்? என்ன- *
அட்டபுயகரத்தேன் என்றாரே-9 **
1126 tañcam ivarkku ĕṉ val̤aiyum nillā *
nĕñcamum tammate cintitteṟku *
vañci maruṅkul nĕruṅka nokki *
vāy tiṟantu ŏṉṟu paṇittatu uṇṭu **
nañcam uṭaittu ivar nokkum nokkam *
nāṉ ivar-tammai aṟiyamāṭṭeṉ *
añcuvaṉ maṟṟu ivar ārkŏl? ĕṉṉa- *
aṭṭapuyakaratteṉ ĕṉṟāre-9 **

Ragam

Darbhār / தர்பார்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1126. She asked her neighbors, “I belong to him and my bangles don’t stay on my hands. My heart doesn’t want to stay with me. Even my waist that is thin as a vine has opened its mouth and said that it belongs to him. His look kills me like poison. I don’t understand him and I am afraid of him. Who is he?” They said, “He said he is from Attapuyaharam. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் வளையும் என் வளையும்; தஞ்சம் இவர்க்கு நிச்சயமாக இவருக்காக; நில்லா என் கையில் நிற்பதில்லை; சிந்தித்தேற்கு சிந்தித்துப் பார்த்தால்; நெஞ்சமும் தம்மதே எனது மனமும் அவருடையதே; வஞ்சி மருங்குல் வஞ்சிக்கொடிபோன்ற என் இடையும்; நெருங்க நோக்கி துவளும்படியாக பார்த்து; வாய் திறந்து ஒன்று வாய் திறந்து ஒன்று; பணித்தது உண்டு சொன்னதும் உண்டு; இவர் நோக்கும் நோக்கம் இவர் பார்க்கிற பார்வையானது; நஞ்சம் உடைத்து விஷங்கலந்ததுபோலே கொடியது; நான் இவர் தம்மை நான் இவரை; அறியமாட்டேன் அறியமாட்டேன்; என்ன இவர் ஆர்கொல்? யார்? இவர் என்று கேட்க; அஞ்சுவன் மற்று நான் பயப்படுகின்றேன் தாமாகவே; அட்டபுயகரத்தேன் என்றாரே நான் அட்டபுயகரத்தான்; என்றாரே உனக்காக வந்தேன் என்றாரே
en my; val̤aiyum bangles; thanjam surely; ivarkku for him; nillā they are not staying (they are slipping); sindhiththĕṛku ī have analysed this, my; nenjamum heart; thammadhĕ is his;; vanji like a tender creeper named nīr vanji; marungul waist; nerunga to become weak; nŏkki saw; vāy thiṛandhu opening his divine mouth; paṇiththadhu mercifully spoke; onṛu uṇdu there was a very secretive meaning; nŏkkum nŏkkam his vision; nanjum udaiththu appears to be poisoned;; nān ī; ivar thammai him; aṛiya māttĕn unable to know;; maṝu further (as soon as ī saw him); anjuvan became fearful;; ivar ār kol? enna when asked “Who is he?”; attabuyagaraththĕn ī am the lord of thiruvattabuyagaram; enṛār mercifully said

PT 2.8.10

1127 மன்னவன்தொண்டையர்கோன்வணங்கும்
நீள்முடிமாலைவயிரமேகன் *
தன்வலிதன்புகழ்சூழ்ந்தகச்சி
அட்டபுயகரத்துஆதிதன்னை *
கன்னிநன்மாமதிள்மங்கைவேந்தன்
காமருசீர்க்கலிகன்றி * குன்றா
இன்னிசையால்சொன்னசெஞ்சொல்மாலை
ஏத்தவல்லார்க்குஇடம்வைகுந்தமே. (2)
1127 ## மன்னவன் தொண்டையர்-கோன் வணங்கும் *
நீள் முடி மாலை வயிரமேகன் *
தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி *
அட்டபுயகரத்து ஆதி-தன்னை **
கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன் *
காமரு சீர்க் கலிகன்றி * குன்றா
இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை *
ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே-10 **
1127 ## maṉṉavaṉ tŏṇṭaiyar-koṉ vaṇaṅkum *
nīl̤ muṭi mālai vayiramekaṉ *
taṉ vali taṉ pukazh cūzhnta kacci *
aṭṭapuyakarattu āti-taṉṉai **
kaṉṉi nal mā matil̤ maṅkai ventaṉ *
kāmaru cīrk kalikaṉṟi * kuṉṟā
iṉ icaiyāl cŏṉṉa cĕñcŏl mālai *
etta vallārkku iṭam vaikuntame-10 **

Ragam

Darbhār / தர்பார்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1127. Kaliyan, the chief of Thirumangai surrounded by strong beautiful walls praised by all composed with sweet music a garland of ten pāsurams on Nedumal adorned with long thulasi garlands, the god of Attapuyaharam worshiped by Vayiramehan, the famous king of Kacchi of the Thondai country. If devotees learn and recite these pāsurams, worshiping him, they will go to Vaikuntam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வயிரமேகன் மன்னவன் வயிரமேகனென்னும் அரசனான; தொண்டையர் கோன் தொண்டைமான் சக்ரவர்த்தியாலே; வணங்கும் வணங்கப் படும்; நீள்முடி மாலை நீண்டமுடியுடைய திருமாலை; தன் வலி தன் அந்த அரசனின் மிடுக்காலும்; புகழ் அவன் புகழாலும்; சூழ்ந்த கச்சி சூழ்ந்த காஞ்சிபுரியிலே; அட்டபுயகரத்து அட்டபுயகரத்திலிருக்கும்; ஆதி தன்னை பெருமானைக் குறித்து; கன்னி நல் மா மதிள் பெரிய மதிள்களையுடைய; மங்கை வேந்தன் திருமங்கைக்குத் தலைவரும்; காமரு சீர்க் நற்குணங்களையுடையவருமான; கலிகன்றி திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த; குன்றா இன் இசையால் இனிய இசையுடனே சொன்ன; செஞ்சொல் மாலை அழகிய இப்பாசுரங்களை; ஏத்த வல்லார்க்கு துதிக்க வல்லவர்களுக்கு; இடம் வைகுந்தமே இருப்பிடம் வைகுண்டமாகும்
vayiramĕgan ṇamed vayiramĕgan; mannavan king; thoṇdaiyarkŏn by thoṇdaimān chakravarthi; vaṇangum worshipped (due to that); nīl̤ mudi having tall crown; māl being sarvĕṣvaran; than that king-s; vali by strength; than pugazh by his fame; sūzhndha being abundant; kachchi in kānchīpuram city; attabuyagaraththu mercifully present in thiruvattabuyagaram; ādhi thannai on the cause of all; kanni indestructable by anyone; nal good; huge; madhil̤ surrounded by fort; mangai for thirumangai region; vĕndhan being the king; kāmaru liked by all; sīr having qualities; kali kanṛi thirumangai āzhvār; kunṛā faultless; in sweet; isaiyāl with music; sonna mercifully spoke; sem beautiful; sol mālai with this thirumozhi (decad) which has garland of words; ĕththa vallārkku for those who praise; idam abode; vaigundham paramapadham

MUT 99

2380 தொட்டபடையெட்டும் தோலாதவென்றியான் *
அட்டபுயகரத்தானஞ்ஞான்று * - குட்டத்துக்
கோள்முதலைதுஞ்சக் குறித்தெறிந்தசக்கரத்தான் *
தாள்முதலேநங்கட்குச்சார்வு. (2)
2380 ## தொட்ட படை எட்டும் * தோலாத வென்றியான் *
அட்டபுயகரத்தான் அஞ்ஞான்று ** - குட்டத்துக்
கோள் முதலை துஞ்ச * குறித்து எறிந்த சக்கரத்தான் *
தாள் முதலே நங்கட்குச் சார்வு -99
2380 ## tŏṭṭa paṭai ĕṭṭum * tolāta vĕṉṟiyāṉ *
aṭṭapuyakarattāṉ aññāṉṟu ** - kuṭṭattuk
kol̤ mutalai tuñca * kuṟittu ĕṟinta cakkarattāṉ *
tāl̤ mutale naṅkaṭkuc cārvu -99

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2380. Our refuge is the feet of the god of Attapuyaharam who fought and conquered all his enemies and killed the murderous crocodile with his discus when it caught the elephant Gajendra.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொட்ட ஏந்தின; படை எட்டும் எட்டு ஆயுதங்களாலும்; தோலாத தோல்வி அடையாமல்; வென்றியான் வெற்றி அடைபவனும்; அட்டபுயகரத்தான் திருஅட்டபுயகரத்தில்; அஞ்ஞான்று முன்பு இருப்பவனும்; குட்டத்து நீர்ப் பொய்கையில்; கோள் வலிமையுள்ள; முதலை துஞ்ச முதலை முடியும்படியாக; குறித்து எறிந்த குறி தவராமல் எறியப்பட்ட; சக்கரத்தான் சக்கரத்தையுடையவனுமான; தாள் முதலே பெருமானின் திருவடிகளே; நங்கட்குக் சார்வு நமக்கு தஞ்சமாகும்
thotta carrying in the hand; padai ettum the eight divine weapons; thŏlādha without losing; venṛiyān one who always wins; attabuyakaraththān one who dwells in the divine abode attabuyakaram in kānchīpuram; annānṛu once upon a time; kuttaththu in the water reservoir; kŏl̤ mudhalai thunja the powerful crocodile to be killed; kuṛiththu eṛindha chakkaraththān one who aimed the divine discus without losing the target, his; thāl̤ mudhalĕ nangatkuch chārvu divine feet alone are our refuge

PTM 17.68

2780 வெஃகாவில் *
உன்னியயோகத்துறக்கத்தை * ஊரகத்துள்
அன்னவனை அட்டபுயகரத்தெம்மானேற்றை *
என்னைமனங்கவர்ந்தஈசனை * -
வானவர்தம் முன்னவனை
2780 வெஃகாவில்
உன்னிய யோகத்து உறக்கத்தை * ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை *
என்னை மனம் கவர்ந்த ஈசனை *
வானவர் தம் முன்னவனை 70
2780 vĕḵkāvil
uṉṉiya yokattu uṟakkattai * ūrakattul̤
aṉṉavaṉai aṭṭa puyakarattu ĕmmāṉ eṟṟai *
ĕṉṉai maṉam kavarnta īcaṉai *
vāṉavar tam muṉṉavaṉai 70

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2780. the god of Thiruvekkā sunk in deep yoga. He is the god of Thiruvuragam, the strong bull of Thiruvattapuyaharam and the Esan, the lord of lords, who stays in my heart. (70)"

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெஃகாவில் திருவெஃகாவிலிருக்கும்; உன்னிய யோகத்து யோக; உறக்கத்தை நித்திரையில் இருப்பவனை; ஊரகத்துள் அன்னவனை திருவூரகத்தில் இருப்பவனை; அட்ட புயகரத்து அட்டபுயகர தலத்திலுள்ள; எம்மான் ஏற்றை எம்பெருமானை; என்னை மனம் என் மனம்; கவர்ந்த ஈசனை கவர்ந்த ஈசனை; வானவர் தம் நித்யஸூரிகளின்; முன்னவனை தலைவனை
vehkāvil at thiruvehkā; unniya yŏgaththu uṛakkaththai one who is sleeping in yŏga [body and mind joined together] while being fully aware; ūragaththul̤ annavanai being very distinguished in thiruvūragam [a divine abode in kānchīpuram]; atta buya karaththu emmān ĕṝai being our lord at [the divine abode] attabuyakaram; ennai manam kavarndha īsanai the entity complete [in all aspects] who stole my heart; vānavar tham munnavanai being the leader of celestial entities