PTM 16.57 2769 பொன் இயலும் வேள்விக்கண் புக்கு இருந்து போர் வேந்தர் மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் மன்னா தருக என்று வாய் திறப்ப 59
PTM 16.58 2770 மற்று அவனும் என்னால் தரப்பட்டது என்றலுமே * அத்துணைக்கண் மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த 60
PTM 16.59 2771 பொன் ஆர் கனை கழல் கால் ஏழ் உலகும் போய்க் கடந்து * அங்கு ஒன்றா அசுரர் துளங்கச் செல நீட்டி * மன் இவ் அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து * தன் உலகம் ஆக்குவித்த தாளானை * 61