PTM 17.74

எனக்குத் திருமால் அருளாவிடில் அவனுடைய இரக்கமிலாச் செயல்களை யாவரிடமும் கூறி மடலூர்வேன்

2786 தயிர்வெண்ணெய் தன்வயிறார விழுங்க *
கொழுங்கயல்கண் மன்னுமடவோர்கள் பற்றியோர்வான்கயிற்றால் *
பின்னுமுரலோடு கட்டுண்டபெற்றிமையும் *
அன்னதோர்பூதமாய் ஆயர்விழவின்கண் *
துன்னுசகடத்தால் புக்கபெருஞ்சோற்றை *
முன்னிருந்துமுற்றத்தான் துற்றியதெற்றெனவும் *
மன்னர்பெருஞ்சவையுள் வாழ்வேந்தர்தூதனாய் *
தன்னையிகழ்ந்துரைப்பத் தான்முனநாள்சென்றதுவும் *
மன்னுபறைகறங்க மங்கையர்தம்கண்களிப்ப *
கொன்னவிலுங்கூத்தனாய்ப் பெயர்த்துங்குடமாடி *
என்னிவன்? என்னப்படுகின்றஈடறவும் *
2786 tayir vĕṇṇĕy taṉ vayiṟu āra vizhuṅka *
kŏzhuṅ kayal kaṇ maṉṉu maṭavorkal̤ paṟṟi or vāṉ kayiṟṟāl *
piṉṉum uraloṭu kaṭṭuṇṭa pĕṟṟimaiyum *
aṉṉatu or pūtamāy āyar vizhaviṉkaṇ *
tuṉṉu cakaṭattāl pukka pĕruñ coṟṟai *
muṉ iruntu muṟṟat tāṉ tuṟṟiya tĕṟṟĕṉavum *
maṉṉar pĕruñ cavaiyul̤ vāzh ventar tūtaṉāy *
taṉṉai ikazhntu uraippat tāṉ muṉa nāl̤ cĕṉṟatuvum *
maṉṉu paṟai kaṟaṅka maṅkaiyar tam kaṇ kal̤ippa *
kŏl navilum kūttaṉāyp pĕyarttum kuṭam āṭi *
ĕṉ ivaṉ? ĕṉṉappaṭukiṉṟa īṭaṟavum * 76

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2787. "She says, “When he went to the cowherd village, stole butter and yogurt churned and kept by beautiful fish-eyed cowherd women, and ate them and filled his stomach full, the women caught him and tied him to a mortar. When he took the form of a bhudam and ate all the food that the cowherds had kept for Indra, Indra grew angry, brought a storm, and the lord carried Govardhanā mountain as an umbrella and protected the cowherds and the cows from the storm. " "When Kannan went to Duriyodhana’s assembly for the Pāndavās as a messenger, he was disgraced by the Kauravās. He danced on a pot as drums were beaten and beautiful women saw looked on in enjoyment, exclaiming, ‘How could he dance so wonderfully?’"(76)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தன் வயிறு ஆர விழுங்க தன் வயிறார விழுங்க; கொழுங் கயல் நல்ல கயல்மீன் போன்ற; கண் கண்களையுடைய; மன்னு அந்த; மடவோர்கள் பெண்கள்; பற்றி ஓர் அவனைப் பிடித்து; வான் கயிற்றால் ஒரு குறுங்கயிற்றால்; பின்னும் உரலோடு உரலோடு பிணைத்துக் கட்டிவிட; கட்டுண்ட கட்டுண்டவன்; பெற்றிமையும் தன்மை என்னே!; ஆயர் இடையர்கள்; விழவின் இந்திரனுக்குச் செய்த; கண் ஆராதனையில்; துன்னு பலபல; சகடத்தால் வண்டிகளில்; புக்க கொண்டு சேர்த்த; பெருஞ்சோற்றை பெருஞ் சோற்றை; அன்னது ஓர் வர்ணிக்க முடியாத ஒரு; பூதமாய் பெரும் பூதவடிவு கொண்டு; முன் இருந்து கண் முன்னேயிருந்தவற்றை; முற்ற துளிக்கூட மிச்சம் வைக்காதபடி; தான் துற்றிய தான் உட்கொண்ட; தெற்றெனவும் வெட்கக்கேடு தான் என்னே!; முன நாள் முன்பொரு சமயம்; வாழ்வேந்தர் பாண்டவர்களுக்கு; தூதனாய் தூதனாய்; தன்னை இகழ்ந்து கண்டவர்களும் இழிவாக; உரைப்ப பேசும்படி; மன்னர் துரியோதனாதி அரசர்களின்; பெருஞ் சவையுள் பெரும் சபையுள்; தான் சென்றதுவும் தான் சென்றதுவும் என்னே!; மங்கையர் தம் பெண்களின்; கண் களிப்ப கண்கள் களிக்கும்படி; மன்னு பறை அரையிலே கட்டிக்கொண்ட பறை; கறங்க ஒலிக்க; கொல் நவிலும் ஆணும் பெண்ணும் மகிழும்படி; கூத்தனாய் கூத்தாடுபவனாய்; பேர்த்தும் குடம் ஆடி மேலும் குடக்கூத்தாடி; என் இவன் இப்படியும் கூத்தாடுவான் ஒருவன் உண்டோ?; என்னப்படுகின்ற என்னும்படி; ஈடறவும் பெற்ற சீர்மைகேடு என்னே!
thayir veṇṇey curd and butter; than vayiṛu āra thān vizhunga as he gobbled these in order to fill up his stomach; kozhu kayal kaṇ eyes which are like carp (a fresh water fish); mannu madavŏral̤ women of the hamlet; paṝi catching him; ŏr vān kayiṝāl with a beautiful rope; uralŏdu (tied up) with the mortar; kattuṇda peṝimaiyum how great it was being tied down; āyar vizhavin kaṇ in the ārādhanai (worship) carried out by the herdspeople to indhira, the chief of celestial entities; thunnu sagadaththāl pukka peru sŏṝai the huge quantum of food carried by many carts; annadhu ŏr būdhamāy taking the form of a demon which cannot be spoken of in words; mun irundhu right in fornt of them; muṝa completely; thān he himself; thuṝiya eaten; theṝanavum what a shame!; munam nāl̤ during an earlier time; vāzhvĕndhar thūdhanāy as pāṇdava’s messenger; thannai igazhndhu uraippa to be spoken of despicably; mannar peru savaiyul̤ senṛadhum the way he went to the court of great kings (such as dhuriyŏdhanā et al); mangaiyar tham kaṇ kal̤ippa eyes of the (herd)ladies’ to rejoice; mannu paṛai kaṛanga the drum tied (to the waist) to sound; kol navilum kūththanāy carrying out the dance which kills (women); pĕrththum further; kudam ādi dancing with pots; en ivan ennappaduginṛa īdaṛavum getting ruined of character with people wondering “Will anyone dance like this?”