57

Thirupputkuzhi

திருப்புட்குழி

Thirupputkuzhi

ஸ்ரீ மரகதவல்லீ ஸமேத ஸ்ரீ விஜயராகவாய நமஹ

The sacred site known as Thirupul Kuli is located approximately 10 kilometers west of Kanchipuram and about 400 meters south of the village Pallu Chetti Chathiram. Pallu Chetti Chathiram is situated on the Chennai-Vellore road.

This place is called Thirupul Kuli because it commemorates the event where the bird Jatayu attained salvation and was given + Read more
திருப்புட்குழி என்னும் இந்த திருத்தலம் காஞ்சிக்கு மேற்கே சுமார் 10 கீ.மீ. தூரத்தில் உள்ள பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே சுமார் 400 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து வேலூர் சாலையில் பாலுச்செட்டிசத்திரம் உள்ளது.

ஜடாயுவாகிய பறவைக்கு மோக்ஷம் அளித்து ஈமக்கிரியை + Read more
Thayar: Sri Maragatha Valli Thāyār
Moolavar: Sri Vijaya Rāghava Perumāl
Utsavar: Sri Vijaya Rāghava Perumāl
Vimaanam: Vijayakodi (Veerakodi)
Pushkarani: Jadāyu
Thirukolam: Amarndha (Sitting)
Direction: West
Mandalam: Thondai Nādu
Area: Kanchipuram
State: TamilNadu
Sampradayam: Thenkalai
Search Keyword: Thiruputkuzhi
Mangalāsāsanam: Thirumangai Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 2.7.8

1115 அலங்கெழுதடக்கை ஆயன்வாயாம்பற்கு
அழியுமால்என்னுள்ளம்என்னும் *
புலங்கெழுபொருநீர்ப்புட்குழிபாடும்
போதுமோநீர்மலைக்கு? என்னும் *
குலங்கெழுகொல்லி கோமளவல்லி
கொடியிடைநெடுமழைக்கண்ணி *
இலங்கெழில்தோளிக்கு என்நினைந்திருந்தாய்?
இடவெந்தைஎந்தைபிரானே! (2)
1115 ## அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு * அழியுமால் என் உள்ளம் என்னும் *
புலம் கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் * போதுமோ நீர்மலைக்கு என்னும் **
குலம் கெழு கொல்லி கோமள வல்லி * கொடி இடை நெடு மழைக் கண்ணி *
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய்? * இடவெந்தை எந்தை பிரானே-8
1115. ##
`alangkezhu thadakkai āyanvāyāmbaRku * azhiyumāl ennuLLam!' ennum *
pulangkezhu porunNeerp putkuzhi pādum * `pOdhumO nNeermalaikku eNnnum *
kulangkezhu kolli kOmaLavallik * kodiyidai nNedumazhaik kaNNi *
ilangkezhil thOLikku ennNinainNdhirunNdhāy * idavenNdhai enNdhai pirānE! 2.7.8

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

1115. Her mother says, “My daughter says, ‘He has strong arms—I long for the love of that cowherd and my heart longs to taste his lips soft as pink water-lily flowers. I want to go to Thiruneermalai surrounded by flourishing fields where waterbirds sing in Thiruputkuzhi. ’ She is our beautiful daughter and lovely as the doll on கொல்லி mountain. She has a vine-like waist and her eyes shed tears like rain. What do you think you can do for her, O father, lord of Thiruvidaventhai?”

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அலம் கெழு கலப்பையுடைய; தடக்கை அழகிய பருத்த கைகளையுடைய கண்ணன்; ஆயன் வாய் தன் வாயில் வைத்து ஊதும்; ஆம்பற்கு புல்லாங்குழல் ஓசை கேட்டு; என் உள்ளம் அழியுமால் என் உள்ளம் உருகுகின்றது; என்னும் என்று கூறுகிறாள்; புலம் கெழு புலன்களைக் கவரும்; பொரு அலைகளோடு கூடின; நீர்ப் நீர்ப்பெருக்கையுடைய; புட்குழி திருப்புட்குழி பெருமான் விஷயமாக; பாடும் பாட்டு பாடுகிறாள்; நீர்மலைக்கு திருநீர்மலைக்கு; போதுமோ போவோமென்கிறாள்; குலங் கெழு கொல்லி கொல்லி மலையிலுள்ள; கோமள வல்லி அழகிய மென்மையான பாவை போல்; கொடி வஞ்சிக்கொடிபோன்ற; இடை இடையுடையவளும்; நெடு மழை பெரு மழை நீர் தாரைகள் போன்ற; கண்ணி கண்களை யுடையவளும்; இலங்கு எழில் அழகிய; தோளிக்கு தோள்களையுடையவளுமான இவள் விஷயத்தில்; இடவெந்தை திருவிடவெந்தையிலிருக்கும்; எந்தை பிரானே! எம்பெருமானே!; என் நினைந்து இருந்தாய்? என்ன செய்வதாக நினைக்கிறீர்?
alam the weapon named halam (plough); kezhu shining; thadam huge; kai having divine hands; Ayan krishNa, the cowherd boy, his; vAy playing from his divine lips; AmbaRku for the sound of flute; en uLLam my mind; azhiyum is getting destroyed; ennum she is saying;; pulam all the senses; kezhu to attract all senses towards it; poru rising waves; nIr having water; putkuzhi incidents relating to vijayarAghavan emperumAn of thirupputkuzhi; pAdum she is singing;; nIr malaikku for thirunIrmalai; pOdhumO let us go; ennum she is saying;; kolli like the doll in kolli mountain; kezhu best; kulam born in the clan; kOmaLam beautiful; valli one who is tender like a creeper; kodi idai one who is having waist like a vanji creeper; nedu mazhai continuously flowing tears, like a torrential rain; kaNNi having eyes; ilangu shining; ezhil beautiful; thOLikku on the matter of this girl who is having shoulder; en ninaindhirundhAy what are you thinking?; idavendhai having arrived in thiruvidavendhai; endhai pirAnE Oh lord of my clan!; sollu You should mercifully speak a word.

PTM 17.61

2773 மாமலர்மேல் அன்னம்துயிலும் அணிநீர்வயலாலி *
என்னுடையவின்னமுதை எவ்வுள் பெருமலையை *
கன்னிமதிள்சூழ் கணமங்கைக்கற்பகத்தை *
மின்னையிருசுடரை வெள்ளறையுள்கல்லறைமேற்
பொன்னை * மரதகத்தைப் புட்குழியெம்போரேற்றை *
மன்னுமரங்கத்துஎம்மாமணியை * -
2773 மா மலர்மேல் அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி *
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை *
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை *
மின்னை, இரு சுடரை, வெள்ளறையுள் கல் அறைமேல்
பொன்னை * மரதகத்தை புட்குழி எம் போர் ஏற்றை *
மன்னும் அரங்கத்து எம் மா மணியை * 63
māmalarmEl-annam thuyilum aNin^eer vayalāli, *
ennudaiya innamudhai evvuL perumalaiyai, * (2)
kanni madhiLsoozh kaNamangaik kaRpagatthai, *
minnai irusudarai veLLaRaiyuL kallaRaimEl-
ponnai, * marathagatthaip putkuzhi em pOrERRai, *
mannum arangatthu em māmaNiyai, * (63)(2)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2773. my sweet nectar and the god of Thiruvayalāli (Thiruvāli) surrounded with beautiful water where swans sleep. Strong as a mountain, he is the god of Thiruyevvul, and generous as the karpagam tree, and the god of Thirukkannamangai surrounded with strong forts. He is lightning, the bright sun and moon and the god of Thiruvellarai. As precious as gold, he is the god of Thirukkallarai. Gold and emerald, a fighting bull, he is the god of Thiruputkuzhi. He, the god of everlasting Srirangam shines like a precious diamond. (63)

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மா மலர் மேல் சிறந்த தாமரைப் பூக்களின் மேல்; அன்னம் துயிலும் அன்னப்பறவைகள் உறங்கும்; அணி நீர் அழகிய நீர் நிறைந்த; வயல் வயல்களை உடைய; ஆலி திருவாலியில் இருக்கும்; என்னுடைய என்னுடைய; இன் அமுதை இனிய அமுதம் போன்றவனும்; எவ்வுள் பெரு திருவெவ்வுளுரில் பெரிய; மலையை மலை போன்றவனும்; கன்னி மதிள் சூழ் மதில்களாலே சூழப்பட்ட; கணமங்கை திருக்கண்ணமங்கையில்; கற்பகத்தை கற்பக விருக்ஷம் போல் இருப்பவனும்; மின்னை மின்னலைஒத்த ஒளியுள்ளவனாயிருப்பவனும்; இரு சூரிய சந்திரன் போன்ற ஒளியுள்ள; சுடரை சக்கரத்தை உடையவனும்; வெள்ளறையுள் திருவெள்ளறையில்; கல் அறைமேல் கருங்கல் மயமான ஸந்நிதியில்; பொன்னை பொன் போன்ற ஒளியுடனும்; மரதகத்தை மரகத பச்சை போன்ற வடிவுடன் இருப்பவனும்; புட்குழி திருப்புட் குழியிலே இருக்கும்; எம் போர் ஏற்றை போர் வேந்தன் போன்றவனும்; அரங்கத்து திருவரங்கத்தில்; மன்னும் இருப்பவனான எம்பெருமான்; எம் மா நீலமணிபோன்று; மணியை விளங்குகிறவனை
mAmalar mEl annam thuyilum swans sleeping on distinguished lotus flowers; aNi nIr vayal Ali thiruvAli, the divine abode, which has (agricultural) fields, full of water; ennudaiya innamudhai the supreme enjoyer, who is giving me dharSan (for me to worship); evvuL perumalaiyai one who is reclining at thiruvevvuL (present day thiruvaLLUr) as if a huge mountain were reclining; kanni madhiL sUzh kaNamangai kaRpagaththai one who is dwelling mercifully like a kalpaka vruksham (wish-fulfilling divine tree) at thirukkaNNamangai which is surrounded by newly built compound wall; minnai one who has periya pirAtti (SrI mahAlakshmi) who is resplendent like lightning; iru sudarai divine disc and divine conch which appear like sUrya (sun) and chandhra (moon); veLLaRaiyuL at thiruveLLaRai; kal aRai mEl inside the sannidhi (sanctum sanctorum) made of stones; ponnai shining like gold; maradhagaththai having a greenish form matching emerald; putkuzhi em pOr ERRai dwelling in [the divine abode of] thirupputkuzhi, as my lord and as a bull ready to wage a war; arangaththu mannum residing permanently at thiruvarangam; em mAmaNiyai one who we can handle, like a blue gem