25

Thiru Thalai Changa Nānmadhiyam

திருத்தலைச்சங்கநாண்மதியம்

Thiru Thalai Changa Nānmadhiyam

Thalaichankādu

ஸ்ரீ தலைச்சங்க நாச்சியார் ஸமேத ஸ்ரீ நாண்மதியம் ஸ்வாமிநே நமஹ

The history of this Divya Desam includes a notable event where the Lord appeared before Chandra (the Moon god) to relieve him from a curse. Therefore, this temple is one of the three Divya Desams known for curing Chandra Dosham, along with Thiruindaloor and Thiruvarangam, where the Chandra Pushkarani is located within the temple premises.

### Unique + Read more
சந்திரனுக்கு உண்டான சாபத்தைத் தீர்த்து இவ்விடத்தில் எம்பெருமான் சந்திரனுக்கு காட்சியளித்ததாக சரித்திரம். அதனால், சந்திர தோஷம் தீர்வதற்கான திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. மற்ற இரண்டு, திருஇந்தளூர், மற்றும் திருவரங்கம். திருவரங்கம் கோயில் உள்ளேயே சந்திர புஷ்கரணி உள்ளதை நினைவில் கொள்ளவும்

இந்த + Read more
Thayar: Sri Thalaichanga Nāchiyār
Moolavar: Nānmadhiya Perumāl, Vensudar Perumāl
Utsavar: Viyomjodhipirān (Vensudarpirān, Lokanāthan)
Vimaanam: Chandhra
Pushkarani: Chandhra
Thirukolam: Nindra (Standing)
Direction: East
Mandalam: Chozha Nādu
Area: Maayavaram
State: TamilNadu
Aagamam: Pāncharāthram
Sampradayam: Thenkalai
Timings: 9:00 a.m. to 5:00 p.m. (Please take the archaga from their home for darshan.)
Search Keyword: Thalaichangam
Mangalāsāsanam: Thirumangai Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 8.9.9

1736 கண்ணார்கண்ணபுரம் கடிகைகடிகமழும் *

தண்ணார்தாமரைசூழ் தலைச்சங்கமேல்திசையுள் *

விண்ணோர்நாண்மதியை விரிகின்றவெஞ்சுடரை *

கண்ணாரக்கண்டுகொண்டு களிக்கின்றதுஇங்குஎன்றுகொலோ. (2)
1736 கண் ஆர் கண்ணபுரம் * கடிகை கடி கமழும் *
தண் ஆர் தாமரை சூழ் * தலைச்சங்கம் மேல்திசையுள் **
விண்ணோர் நாண்மதியை * விரிகின்ற வெம் சுடரை- *
கண் ஆரக் கண்டுகொண்டு * களிக்கின்றது இங்கு என்றுகொலோ?-9
1736
kaNNār kaNNapuram * kadigai kadikamazhum *
thaNNār thāmaraichoozh * thalaichchaNGga mElthichaiyuL *
viNNOr nNāNmadhiyai * virigiNnRa venchudarai *
kaNNārak kaNdukondu * kaLikkiNnRathu iNGku eNnRukolO? 8.9.9

Ragam

மோஹன

Thalam

திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1736. He is the lord of beautiful Thirukkannapuram and Thirukkadigai surrounded with fragrant cool lotus flowers. When will the time come that I can rejoice seeing with my eyes the god of Thalaichangam who is the bright moon for the gods and the sun that spreads light?

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண் ஆர் கண் கவரும்; கண்ணபுரம் திருக்கண்ணபுரத்திலும்; கடிகை திருக்கடிகாசலத்திலும்; கடி கமழும் மணம் கமழும்; தண் ஆர் குளிர்ந்த பூர்ண; தாமரை சூழ் தாமரைகளால் சூழ்ந்த; தலைச்சங்கம் தலைச்சங்காட்டில்; மேல் திசையுள் மேற்கு திசையில்; விண்ணோர் நித்யசூரிகளுக்கு; மதியை குளிர்ந்த சந்திரன்போல்; நாண் இனியவனாய்; விரிகின்ற உதயகாலத்தில்; வெம் வெப்பமுடைய; சுடரை ஸூரியன்போன்ற பிரகாசமான எம்பெருமானை; இங்கு கண்ணார இங்கு கண்குளிர; கண்டுகொண்டு கண்டு வணங்கி; களிக்கின்றது களிப்பது; என்றுகொலோ? எக்காலமோ?

PTM 17.70

2782 மன்னும்மறைநான்குமானானை * புல்லாணித்
தென்னன்தமிழை வடமொழியை *
நாங்கூரில் மன்னுமணிமாடக் கோயில்மணாளனை *
நல்நீர்த்தலைச்சங்கநாண்மதியை * - நான்வணங்கும்
கண்ணனைக் கண்ணபுரத்தானை * தென்னறையூர்
மன்னுமணிமாடக் கோயில்மணாளனை *
2782 மன்னும் மறை நான்கும் ஆனானை * புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை *
நாங்கூரில் மன்னு மணிமாடக்கோயில் மணாளனை *
நல் நீர்த் தலைச்சங்க நாள் மதியை * நான் வணங்கும்
கண்ணனைக் கண்ணபுரத்தானை * தென் நறையூர்
மன்னு மணிமாடக்கோயில் மணாளனை * 72
mannum maRain^ān_gum ānānai, * pullāNith-
thennan thamizhai vadamozhiyai, * nāngooril-
mannum maNimādak kOyil maNāLanai, *
nanneerth thalaicchanga nānmathiyai, * (72)-nānvaNangum-
kaNNanaik kaNNa puratthānai, * thennaRaiyoor-
mannum maNimādak kOyil maNāLanai, *

Ragam

நாதநாமக்ரியை

Thalam

ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2783. He is the four everlasting Vedās. He is Tamizh Vedā flourishing in Thiruppullāni in the Pandiyan country and he is Sanskrit Vedā. He is the beloved of Lakshmi and shines like the moon, the god of Manimādakkoyil in Nāgai, and the god of Thalaichangam surrounded by the ocean. (72) I worship the god Kannan, the lord of Thirukkannapuram and of Manimādakkoyil in southern Thirunaraiyur. ”

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மறை நான்கும் நான்கு வேதங்களுமாக; மன்னும் ஆனானை ஆனவனை; புல்லாணித் திருப்புல்லாணியிலிருக்கும்; தென்னன் தமிழை தமிழ் வேதங்களுக்கும்; வடமொழியை சமஸ்க்ருத வேதங்களுக்கும் நிர்வாஹனனை; நாங்கூரில் திருநாங்கூரின்; மன்னும் மணிமாடக்கோயில் மணிமாடக் கோயிலில்; மணாளனை இருக்கும் மணாளனை; நல் நீர் நீர்வளம் உள்ள; தலைச் சங்க திருத்தலைச்சங்காட்டில்; நாள் மதியை முழு மதியைப்போல் விளங்கும்; நான் வணங்கும் நான் வணங்கும்; கண்ணனை கண்ணனை
maRai nAngum AnAnai having the form of four vEdhas; pullANi one who has taken residence at thiruppullANi; thennan thamizhai vadamozhiyai one who is described by both thamizh and samaskrutha languages; nAngUr at thirunAngUr; maNimAdak kOyil mannu maNALanai standing forever at maNimAdakkOyil (divine abode in thanjAvUr) as a bridegroom; nal nIr thalaichchanga nANmadhiyai as the nANmadhiyapperumAL at thalaichchangAdu which is surrounded by good water; nAn vaNangum kaNNanai as kaNNan (krishNa) who I worship; kaNNapuraththAnai one who is dwelling at thirukkaNNapuram; then naRaiyUr maNi mAdak kOyil mannu maNALanai one who has taken residence as a bridegroom in the famous thiruraRaiyUr maNi mAdak kOyil