Chapter 17

She praises the Divyadesams where the god stays and worships him - (தாமரைமேல்)

எம்பெருமான் தங்கியிருக்கும் திவ்ய தேசங்களை அவள் புகழ்ந்து வணங்குகிறாள்
Verses: 2772 to 2790
Grammar: Kaliveṇpā / கலிவெண்பா
Recital benefits: I will surely ride on a horse made of palm leaves.
  • PTM 17.60
    2772 தாமரைமேல்
    மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை *
    பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை *
    தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை *
    மன்னிய தண் சேறை வள்ளலை 62
  • PTM 17.61
    2773 மா மலர்மேல் அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி *
    என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை *
    கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை *
    மின்னை, இரு சுடரை, வெள்ளறையுள் கல் அறைமேல்
    பொன்னை * மரதகத்தை புட்குழி எம் போர் ஏற்றை *
    மன்னும் அரங்கத்து எம் மா மணியை * 63
  • PTM 17.62
    2774 வல்லவாழ்ப்
    பின்னை மணாளனைப் பேரில் பிறப்பிலியை *
    தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை *
    என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை *
    மன்னும் கடல்மல்லை மாயவனை * 64
  • PTM 17.63
    2775 வானவர் தம் சென்னி மணிச் சுடரைத் தண்கால் திறல் வலியை *
    தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை *
    அன்னத்தை மீனை அரியை அரு மறையை *
    முன் இவ் உலகு உண்ட மூர்த்தியை * 65
  • PTM 17.64
    2776 கோவலூர் மன்னும் இடைகழி எம் மாயவனை *
    பேய் அலறப் பின்னும் முலை உண்ட பிள்ளையை * 66
  • PTM 17.65
    2777 அள்ளல்வாய் அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை *
    தென் தில்லைச் சித்திரகூடத்து என் செல்வனை * 67
  • PTM 17.66
    2778 மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை *
    மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை *
    கொல் நவிலும் ஆழிப் படையானை * 68
  • PTM 17.67
    2779 கோட்டியூர் அன்ன உருவின் அரியை * திருமெய்யத்து
    இன் அமுதவெள்ளத்தை இந்தளூர் அந்தணனை *
    மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை *
    மன்னிய பாடகத்து எம் மைந்தனை * 69
  • PTM 17.68
    2780 வெஃகாவில்
    உன்னிய யோகத்து உறக்கத்தை * ஊரகத்துள்
    அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை *
    என்னை மனம் கவர்ந்த ஈசனை *
    வானவர் தம் முன்னவனை 70
  • PTM 17.69
    2781 மூழிக்களத்து விளக்கினை *
    அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை *
    நென்னலை இன்றினை நாளையை * நீர்மலைமேல் முன்னவனை 71
  • PTM 17.70
    2782 மன்னும் மறை நான்கும் ஆனானை * புல்லாணித்
    தென்னன் தமிழை வடமொழியை *
    நாங்கூரில் மன்னு மணிமாடக்கோயில் மணாளனை *
    நல் நீர்த் தலைச்சங்க நாண்மதியை * நான் வணங்கும்
    கண்ணனைக் கண்ணபுரத்தானை * தென் நறையூர்
    மன்னு மணிமாடக்கோயில் மணாளனை * 72
  • PTM 17.71
    2783 கல் நவில் தோள் காளையைக் கண்டு ஆங்குக் கைதொழுது *
    என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான் *
    தன் அருளும் ஆகமும் தாரானேல் * 73
  • PTM 17.72
    2784 தன்னை நான் மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும் *
    தன் அடியார் முன்பும் தரணி முழுது ஆளும் *
    கொல் நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும் *
    தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் * 74
  • PTM 17.73
    2785 தான் முன நாள்
    மின் இடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின்கண் *
    துன்னு படல் திறந்து புக்கு * 75
  • PTM 17.74
    2786 தயிர் வெண்ணெய் தன் வயிறு ஆர விழுங்க *
    கொழுங் கயல் கண் மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால் *
    பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும் *
    அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்கண் *
    துன்னு சகடத்தால் புக்க பெருஞ் சோற்றை *
    முன் இருந்து முற்றத் தான் துற்றிய தெற்றெனவும் *
    மன்னர் பெருஞ் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய் *
    தன்னை இகழ்ந்து உரைப்பத் தான் முன நாள் சென்றதுவும் *
    மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப *
    கொல் நவிலும் கூத்தனாய்ப் பெயர்த்தும் குடம் ஆடி *
    என் இவன்? என்னப்படுகின்ற ஈடறவும் * 76
  • PTM 17.75
    2787 தென் இலங்கையாட்டி அரக்கர் குலப் பாவை *
    மன்னன் இராவணன் தன் நல் தங்கை * வாள் எயிற்றுத்
    துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகா சோர்வு எய்தி *
    பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால் *
    தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்து *
    மன்னிய திண்ணெனவும் 77
  • PTM 17.76
    2788 வாய்த்த மலை போலும் *
    தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை * மா முனிக்காத்
    தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் * 78
  • PTM 17.77
    2789 மற்று இவைதான்
    உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான் * 79
  • PTM 17.78
    2790 முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த *
    மன்னிய பூம் பெண்ணை மடல் 80