26

Thiru Indhalur

திருஇந்தளூர்

Thiru Indhalur

ஸ்ரீ சந்திரசாபவிமோசனவல்லீ ஸமேத ஸ்ரீ சுகந்தவன பரிமளரங்கநாதய நமஹ

The Final Divya Desam in the Pancha Ranga Kshetrams

The five Pancha Ranga Kshetrams are:

  1. Adi Ranga – Srirangapatnam Ranganatha
  2. Madhya Ranga – Srirangam Ranganatha
  3. Appala Ranga – Koviladi or Thirupper Nagar Appakkudathān
  4. Chaturtha Ranga – Thirukkudanthai Sarangapani
  5. Pancha Ranga – Thiruvindalur Parimala Rangan

Description

+ Read more
பஞ்ச ரங்க க்ஷேத்திரத்தில் இறுதியாக உள்ள க்ஷேத்திரம் இந்த திருஇந்தளூர்.

பஞ்ச ரங்க க்ஷேத்திரங்கள் ஐந்து. அவை,

1. ஆதி ரங்கம் – ஸ்ரீரங்கபட்டினம் ரங்கநாதன்,
2. மத்திய ரங்கம் – திருவரங்கம் ரங்கநாதன்,
3. அப்பாலரங்கம் – கோவிலடி அல்லது திருப்பேர்நகர் அப்பக்குடத்தான் ,
4. சதுர்த்த + Read more
Thayar: Sri Parimala Ranga Nāyaki (Chandra Sāba Vimochana Valli, Pundarika Valli)
Moolavar: Parimala Ranganāthan, Maruviniya Maindan, Sugandavana nāthan
Utsavar: Parimala Ranganāthan
Vimaanam: Vedhachakra
Pushkarani: Indhu
Thirukolam: Sayana (Reclining)
Direction: East
Mandalam: Chozha Nādu
Area: Maayavaram
State: TamilNadu
Sampradayam: Thenkalai
Timings: 6:00 a.m. to 12:00 noon 4:30 p.m. to 9:00 p.m.
Search Keyword: Indalur
Mangalāsāsanam: Thirumangai Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 4.9.1

1328 நும்மைத்தொழுதோம் நுந்தம்பணிசெய்திருக்கும் நும்மடியோம் *
இம்மைக்குஇன்பம்பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே! *
எம்மைக்கடிதாக்கருமம்அருளி ஆவா! என்றிரங்கி *
நம்மைஒருகால்காட்டிநடந்தால் நாங்கள்உய்யோமே? (2)
1328 ## நும்மைத் தொழுதோம் * நும்-தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம் *
இம்மைக்கு இன்பம் பெற்றோம் * எந்தாய் இந்தளூரீரே **
எம்மைக் கடிதாக் கருமம் அருளி * ஆ ஆ என்று இரங்கி *
நம்மை ஒருகால் காட்டி நடந்தால் * நாங்கள் உய்யோமே?-1
1328 ## nummait tŏzhutom * num-tam paṇicĕytu irukkum num aṭiyom *
immaikku iṉpam pĕṟṟom * ĕntāy intal̤ūrīre **
ĕmmaik kaṭitāk karumam arul̤i * ā ā ĕṉṟu iraṅki *
nammai ŏrukāl kāṭṭi naṭantāl * nāṅkal̤ uyyome?-1

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1328. We, your slaves and servants, worship you, our father who stay in Indalur. We have enjoyed all the pleasures of this birth. Won’t you be kind to us? Give us your grace and show us the divine path. Isn’t that the way for us to survive?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நும்மைத்தொழுதோம் உம்மைத்தொழுது; நும் தம் வணங்கி உமக்கே; பணிசெய்து இருக்கும் பணிவிடை செய்து; நும் உம்முடைய; அடியோம் அடியவர்களான நாங்கள்; இம்மைக்கு இப்பிறவியிலே; இன்பம் ஞானமாகிற இன்பம்; பெற்றோம் பெற்றோம்; இந்தளூரீரே! திருவிந்தளூரிலிருக்கும்; எந்தாய்! எம்பெருமானே!; எம்மைக் கடிதா சீக்கிரமாக ஏதேனுமொரு; கருமம் அருளி கைங்கரியத்தை அருளிச்செய்து; ஆ வா! என்று இரங்கி ஆ வா என்று மனமிரங்கி; நம்மை ஒருகால் எங்களுக்கு ஒரு முறையாவது; காட்டி நடந்தால் நடந்து காட்சி தந்தால்; நாங்கள் உய்யோமே நாங்கள் உய்வடைவோமே
nummai ẏour highness; thozhudhŏm surrendered, considering to be the means;; nundham your highness-; paṇi kainkaryam (service); seydhu performed; irukkum to sustain; num adiyŏm became servitors;; immaikku now; inbam peṝŏm got the joy of acquiring knowledge;; indhal̤ūṛīr one who is mercifully present in thiruvindhal̤ūr; en thāy you who are like my mother!; emmai for me; kadidhā quickly; karumam kainkaryam which is the ultimate goal; arul̤i mercifully grant; ā ā enṛu saying -ālas! ālas!-; irangi being merciful; nammai for us; oru kāl some time; kātti showing your divine form; nadandhāl if you mercifully come; nāngal̤ we who are ananya prayŏjanar (who don-t seek anything other than kainkaryam); uyyŏmŏ will we not live well?

PT 4.9.2

1329 சிந்தைதன்னுள் நீங்காதிருந்ததிருவே மருவினிய
மைந்தா! * அந்தணாலிமாலே! சோலைமழகளிறே! *
நந்தாவிளக்கின்சுடரே! நறையூர்நின்றநம்பீ! * என்
எந்தாய்! இந்தளூராய்! அடியேற்குஇறையும் இரங்காயே. (2)
1329 ## சிந்தை-தன்னுள் நீங்காது இருந்த திருவே * மருவினிய
மைந்தா ** அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே **
நந்தா விளக்கின் சுடரே * நறையூர் நின்ற நம்பீ * என்
எந்தாய் இந்தளூராய் * அடியேற்கு இறையும் இரங்காயே-2
1329 ## cintai-taṉṉul̤ nīṅkātu irunta tiruve * maruviṉiya
maintā ** am taṇ āli māle colai mazha kal̤iṟe **
nantā vil̤akkiṉ cuṭare * naṟaiyūr niṉṟa nampī * ĕṉ
ĕntāy intal̤ūrāy * aṭiyeṟku iṟaiyum iraṅkāye-2

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1329. You, our father, the god of Indalur are a treaure that never disappears from our hearts. You are our sweet god of Thiruvāli and you embrace us. You are the young elephant of Thirumālirunjolai, bright like an everlasting lamp. O Nambi of Thirunaraiyur, have pity on me and give me your grace—I am you slave.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சிந்தை சிந்தையில்; தன்னுள் ஒரு நொடிப்பொழுதும்; நீங்காது விட்டுப் பிரியாமலிருக்கிற; இருந்த திருவே! செல்வமே!; மருவினிய அனுபவிக்க அனுபவிக்க; மைந்தா! இனிமையாயிருப்பவனே!; அம் தண் அழகிய குளிர்ந்த; ஆலி மாலே! திருவாலிப் பெருமானே!; சோலை சோலையில் சஞ்சரிக்கும்; மழ களிறே ஒரு யானைக்குட்டி போன்றவனே!; நந்தா விளக்கின் ஒரு நாளுமணையா; சுடரே விளக்குப் போன்றவனே!; நறையூர் நின்ற நறையூரில் நின்ற; நம்பீ என் என் ஸ்வாமியே!; இந்தளூராய்! திருவிந்தளூரிலிருக்கும்; எந்தாய்! எம்பெருமானே!; அடியேற்கு தாஸபூதனான அடியேனுக்கு; இறையும் இரங்காயே! அருள் செய்வாயே
sindhai thannul̤ in the heart; nīngādhu without separating; irundha residing; thiruvĕ ŏh wealth!; maruva iniya one who is enjoyable as we experience him repeatedly; maindhā ŏh youthful one!; am beautiful; thaṇ cool; āli mercifully present in thiruvāli; mālĕ ŏh you who are very loving towards your devotees!; sŏlai roaming in the garden; mazha kal̤iṛĕ ŏh you who are like an elephant calf!; nandhā always burning; vil̤akkin lamp-s; sudarĕ ŏh you who are radiant like the light!; naṛaiyūr in thirunaṛaiyūr; ninṛa mercifully residing; nambī ŏh you who are complete!; indhal̤ūrāy being mercifully present in thiruvindhal̤ūr; en endhāy ŏh my lord!; adiyĕṛku for me, the servitor; iṛaiyum this small favour (kainkaryam); irangāy you are not granting.

PT 4.9.3

1330 பேசுகின்றதுஇதுவே வையம்ஈரடியாலளந்த *
மூசிவண்டுமுரலும கண்ணிமுடியீர்! * உம்மைக்காணும்
ஆசையென்னும்கடலில்வீழ்ந்து இங்கு அயர்த்தோம் * அயலாரும்
ஏசுகின்றதுஇதுவேகாணும் இந்தளூரீரே!
1330 பேசுகின்றது இதுவே * -வையம் ஈர் அடியால் அளந்த *
மூசி வண்டு முரலும் * கண்ணி முடியீர்! ** -உம்மைக் காணும்
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து * இங்கு அயர்த்தோம் * அயலாரும்
ஏசுகின்றது இதுவே காணும் * இந்தளூரீரே-3
1330 pecukiṉṟatu ituve * -vaiyam īr aṭiyāl al̤anta *
mūci vaṇṭu muralum * kaṇṇi muṭiyīr! ** -ummaik kāṇum
ācai ĕṉṉum kaṭalil vīzhntu * iṅku ayarttom * ayalārum
ecukiṉṟatu ituve kāṇum * intal̤ūrīre-3

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1330. This is how I praise you, “You with hair adorned with garlands swarming with bees measured the world with your two feet. ” Longing to see you we plunged into the ocean of devotion and grew exhausted when we couldn’t see you. See how others look at us and mock us because we are crazy about you, O god of Indalur!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இந்தளூரிரே! இந்தளூரிரே!; வையம் உலகங்களை; ஈரடியால் இரண்டு அடிகளாலே; அளந்த அளந்து கொண்டவரும்; மூசி வண்டு வண்டுகள் மொய்த்துக்கொண்டு; முரலும் கண்ணி ரீங்காரம் செய்யும்; முடியீர்! மாலையை முடியில் அணிந்தவருமான; இங்கு உம்மைக் இவ்வுலகில் உம்மைப்; காணும் பார்க்க விரும்பி; ஆசை என்னும் ஆசை என்னும்; கடலில் வீழ்ந்து கடலில் வீழ்ந்து; அயர்த்தோம் அறிவு கெட்டோம் நீர் முகம் காட்டாததால்; அயலாரும் அயலாரும் இது பற்றி; ஏசுகின்றது இதுவே பழித்தார்கள்; காணும் பேசுகின்றது உமக்கொரு பழிச்சொல்; இதுவே வரக்கூடாது என்பதே நாம் விரும்புவது
indhal̤ūrīrĕ ŏh you who are mercifully residing in thiruvindhal̤ūr!; vaiyam earth; īradiyāl with two steps; al̤andha one who scaled; vaṇdu beetles; mūsi swarmed; muralum humming; kaṇṇi garland; mudiyīr ŏh you who are wearing on your divine crown!; ingu in this world; kāṇum to see; āsai ennum that which is known as desire; kadalil in the ocean; vīzhndhu fell; ayarththŏm became bewildered;; ayalārum neighbours; idhuvĕ on this matter; ĕsuginṛadhu blaming;; nān ī am too; idhuvĕ this matter only; pĕsuginṛadhu speaking

PT 4.9.4

1331 ஆசைவழுவாதேத்தும் எமக்கிங்கிழுக்காய்த்து * அடியோர்க்கு
தேசமறிய உமக்கே ஆளாய்த்திரிகின்றோமுக்கு *
காசினொளியில்திகழும்வண்ணம் காட்டீர் எம்பெருமான்! *
வாசிவல்லீர்! இந்தளூரீர்! வாழ்ந்தேபோம்நீரே!
1331 ஆசை வழுவாது ஏத்தும் * எமக்கு இங்கு இழுக்காய்த்து * அடியோர்க்கு
தேசம் அறிய * உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு **
காசின் ஒளியில் திகழும் வண்ணம் * காட்டீர் எம் பெருமான் *
வாசி வல்லீர் இந்தளூரீர்! * -வாழ்ந்தே போம் நீரே-4
1331 ācai vazhuvātu ettum * ĕmakku iṅku izhukkāyttu * aṭiyorkku
tecam aṟiya * umakke āl̤āyt tirikiṉṟomukku **
kāciṉ ŏl̤iyil tikazhum vaṇṇam * kāṭṭīr ĕm pĕrumāṉ *
vāci vallīr intal̤ūrīr! * -vāzhnte pom nīre-4

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1331. We praise you, saying we long to see you, but you do not show us your grace, and we wander through all lands as your slaves. O dear lord! Won’t you show us your bright form shining like a kāsi flower? O lord of Indalur, you are cheating us. If that is what you want, do as you wish.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இங்கு இங்கு இது; ஆசை வழுவாது ஆசைகுறையாமல்; ஏத்தும் எமக்கு துதிக்கின்ற எமக்கு; அடியோர்க்கு உமக்கு அடியோங்களான எமக்கு; இழுக்காய்த்து இழுக்காகிவிட்டது; தேசம் உலகமெல்லாம்; அறிய அறியும்படியாக; உமக்கே உமக்கே; ஆளாய் தொண்டராய்; திரிகின்றோமுக்கு திரிகின்ற எமக்கு; காசின் பொன்னை; ஒளியில் திகழும் போன்று ஒளியைக் காட்டிலும் மேலாக பிரகாசிக்கும்; வண்ணம் வடிவழகை எங்களுக்கு; காட்டீர் காட்டவில்லை; எம்பெருமான்! எம்பெருமான்!; இந்தளூரீரே! இந்தளூரீரே!; வாசி வல்லீர் பாரபட்சம் காட்டுகிறீர்; வாழ்ந்தே போம் நீரே நீரே வாழ்ந்தே போம்
ingu in this, your matter; āsai desire to worship you; vazhuvādhu without a break; ĕththum having the nature to praise you; adiyŏrkku your servitors; emakku for us; izhukkāyththu (praising) ended up causing blame.; thĕsam all over the place; aṛiya to be known; umakkĕ for you, the lord; āl̤āy as servitors; thiriginṛŏmukku for us, who are roaming around; kāsin (molten) golden coins-; ol̤iyil more than the shine; thigazhum shining; vaṇṇam beauty; kāttīr not showing;; emperumān being our lord; indhal̤ūrīr oh you who are mercifully present in thiruvindhal̤ūr!; vāsi valleerĕ you who understand the difference of various aspects; nīrĕ you; vāzhndhu pŏm remain joyful.

PT 4.9.5

1332 தீஎம்பெருமான்நீர்எம்பெருமான் திசையும்இருநிலனு
மாய் * எம்பெருமானாகிநின்றால் அடியோம்காணோமால் *
தாயெம்பெருமான் தந்தைதந்தையாவீர் * அடியோமுக்
கேஎம்பெருமானல்லீரோ? நீர் இந்தளூரீரே!
1332 தீ எம் பெருமான் நீர் எம் பெருமான் * திசையும் இரு நிலனும்
ஆய் * எம் பெருமான் ஆகி நின்றால் * அடியோம் காணோமால் *
தாய் எம் பெருமான் * தந்தை தந்தை ஆவீர் * அடியோமுக்-
கே எம் பெருமான் அல்லீரோ நீர்? * -இந்தளூரீரே-5
1332 tī ĕm pĕrumāṉ nīr ĕm pĕrumāṉ * ticaiyum iru nilaṉum
āy * ĕm pĕrumāṉ āki niṉṟāl * aṭiyom kāṇomāl *
tāy ĕm pĕrumāṉ * tantai tantai āvīr * aṭiyomuk-
ke ĕm pĕrumāṉ allīro nīr? * -intal̤ūrīre-5

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1332. Even though you, the dear lord, are fire, water, all the directions and this large earth, we, your slaves, cannot see you. You are our mother, our father and grandfather. O lord of Indalur, won’t you give your grace to your slaves.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தீ எம் பெருமான் அக்னிக்கு எம்பெருமானாயும்; நீர் எம் பெருமான் ஜலத்துக்கு எம்பெருமானாயும்; திசையும் திசைகளுக்கும்; இரு நிலனும் விசாலமான பூமிக்கும்; ஆய் எம் பெருமானாகி எம்பெருமானாயும்; நின்றால் நின்றால்; அடியோம் நாங்கள்; காணோமால் பார்க்கமுடியவில்லையே; தாய் எம் பெருமான் தாயாகவும் எம்பெருமான்; தந்தை தந்தையாகவும்; தந்தை ஆவீர் இருக்கும் எம்பெருமானே!; இந்தளூரீரே! திருவிந்தளூர்ப் பெருமானே!; அடியோமுக்கே நாங்கள் பணிவிடை செய்யும்; எம் பெருமான் அல்லீரோ? ஸ்வாமி அன்றோ?; நீர் நீர் எமக்கு
thī being antharyāmi of agni (fire); emperumān being its controller; nīr being antharyāmi of jalam (water); emperumān being its controller; thisaiyum directions; iru vast; nilanum for earth; āy being antharyāmi,; emperumān āgi being their controller; ninṛāl though you mercifully remain; adiyŏm we, the servitors; kāṇŏmāl (what is the use) if (we are) unable to see you and worship you;; thāy being mother; emperumān being the lord; thandhai thandhai āvīr being father of father (as the lord of our clan); indhal̤ūrīr mercifully residing in thiruvindhal̤ūr; nīr your highness; adiyŏmukku engaging us who are without refuge in kainkaryam; emperumān alleerŏ are you not the lord?

PT 4.9.6

1333 சொல்லாதொழியகில்லேன் அறிந்தசொல்லில் * நும்மடியார்
எல்லாரோடும்ஒக்க எண்ணியிருந்தீர் அடியேனை *
நல்லார்அறிவீர்தீயார் அறிவீர் நமக்குஇவ் வுலகத்தில் *
எல்லாம்அறிவீர் ஈதே அறியீர்இந்தளூரீரே!
1333 சொல்லாது ஒழியகில்லேன் * அறிந்த சொல்லில் * நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க * எண்ணியிருந்தீர் அடியேனை **
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் * நமக்கு-இவ் உலகத்தில் *
எல்லாம் அறிவீர்-ஈதே அறியீர் * இந்தளூரீரே-6
1333 cŏllātu ŏzhiyakilleṉ * aṟinta cŏllil * num aṭiyār
ĕllāroṭum ŏkka * ĕṇṇiyiruntīr aṭiyeṉai **
nallār aṟivīr tīyār aṟivīr * namakku-iv ulakattil *
ĕllām aṟivīr-īte aṟiyīr * intal̤ūrīre-6

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1333. I won’t go away without telling you what I think of you. You think of me the same as you think of your other devotees. I am your slave and I will not leave you. You know who is good, who is bad and you know everything in the world. The only thing you don’t know is what I want, O lord of Indalur!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இந்தளூரீரே! திருவிந்தளூர் பெருமானே!; சொல்லாது சொல்ல நினைத்ததை; ஒழியகில்லேன் சொல்லாதிருக்க முடியவில்லை; அறிந்த நான் அறிந்தவற்றைச்; சொல்லில் சொல்லத் தொடங்கினால்; அடியேனை என்னை; நும் அடியார் உம்முடைய மற்ற அடியவர்கள்; எல்லாரோடும் ஒக்க எல்லாரோடும் ஸமமாக; எண்ணியிருத்தீர் நினைத்திருக்கிறீர்; நல்லார் நல்லவர்களையும்; அறிவீர் தெரிந்து கொண்டிருக்கிறீர்; தீயார் தீயவர்களையும்; அறிவீர் தெரிந்து கொண்டிருக்கிறீர்; இவ் உலகத்தில் இவ் உலகத்தில்; எல்லாம் அறிவீர் எல்லாம் அறிவீர்; நமக்கு ஈதே உமது பிரிவால் வாடும் என்னை மட்டும்; அறியீர் அறியவில்லை
indhal̤ūrīrĕ ŏh lord who are mercifully present in thiruvindhal̤ūr!; sollādhu not telling (forcefully to your highness); ozhiyagillĕn unable to remain;; aṛindha known (to me); sollil if ī try to tell; adiyĕnai ī who cannot bear the separation; num adiyār servitors of your highness; ellārŏdum okka equal to others; eṇṇiyirundhīr you are thinking;; nalllār the nature of those who have the goodness of being unable to bear the separation of your highness; aṛivīr you know;; thīyār the nature of those who have the bad quality of being able to bear the separation of your highness; aṛivīr you know;; ivvulagaththu in this world; ellām everything else; aṛivīr you know;; namakku for us who are unable to bear the separation of your highness; īdhĕ aṛiyīr you do not know about our tender nature only.

PT 4.9.7

1334 மாட்டீரானீர்பணி நீர் கொள்ள எம்மைப் பணியறியா
விட்டீர் * இதனைவேறே சொன்னோம் இந்தளூரீரே! *
காட்டீரானீர் நுந்தமடிக்கள் காட்டில் * உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே?
1334 மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள * எம்மைப் பணி அறியா
வீட்டீர் * இதனை வேறே சொன்னோம் * இந்தளூரீரே **
காட்டீர் ஆனீர் * நும்-தம் அடிக்கள் காட்டில் * உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டர் ஆன * நாங்கள் உய்யோமே?-7
1334 māṭṭīr āṉīr paṇi nīr kŏl̤l̤a * ĕmmaip paṇi aṟiyā
vīṭṭīr * itaṉai veṟe cŏṉṉom * intal̤ūrīre **
kāṭṭīr āṉīr * num-tam aṭikkal̤ kāṭṭil * umakku inta
nāṭṭe vantu tŏṇṭar āṉa * nāṅkal̤ uyyome?-7

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1334. We have caught hold of you so we can serve you, but you don’t tell us how to serve you. Should we have to tell that you are the god of Indalur? We, your devotees, have come to your place because we want to see you. Won’t we be saved if you show yourself to us?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இந்தளூரீரே! இந்தளூர்! பெருமானே!; நீர் நீர் எம்மிடத்தில்; பணி கொள்ள கைங்கரியங்கொள்ள; மாட்டீர் ஆனீர் விரும்பாதவராயிருக்கின்றீர்; எம்மை அடியோங்களுக்கு; பணி பணியை உணர்த்திவிட்டு; அறியா வீட்டீர் கைவிட்டு விட்டீர்; இதனை இதனை; வேறே சொன்னோம் தனியே சொன்னோம்; நும் தம் அடிக்கள் உம் பாதங்களைக்; காட்டீர் ஆனீர் காட்டாமல் போனீர்; காட்டில் உமக்கு இந்த காட்டியருளினால் இந்த; நாட்டே நாட்டிலே உமக்கு இசைந்து; வந்து வந்து உங்கள்; தொண்டர் ஆன தொண்டர்கள் ஆன; நாங்கள் நாங்கள்; உய்யோமே? உய்ந்து போகமாட்டோமோ?
indhal̤ūrīrĕ ŏh lord who are mercifully present in thiruvindhal̤ūr!; nīr your highness; paṇi kol̤l̤a to accept (our) kainkaryam; māttīr ānīr not having the desire,; emmai us; paṇi taste for kainkaryam; aṛiyā made to know; vīttīr have abandoned;; idhanai this; vĕṛĕ separately (in a distinguished manner); sonnŏm informed to you;; nundham your highness-; adikkal̤ divine feet; kāttīr ānīr did not show;; kāttil if you showed; indha nāttĕ in this world which does not accept servitude; vandhu came agreeably; umakku for your highness; thoṇdarāna being engaged in servitude; nāngal̤ us; uyyŏmĕ will we not survive?

PT 4.9.8

1335 முன்னைவண்ணம்பாலின்வண்ணம்முழுதும்நிலைநின்ற *
பின்னைவண்ணம்கொண்டல்வண்ணம் வண்ணம் எண்ணுங்கால் *
பொன்னின்வண்ணம்மணியின்வண்ணம் புரையும் திருமேனி *
இன்னவண்ணமென்றுகாட்டீர் இந்தளூரீரே!
1335 முன்னை வண்ணம் பாலின் வண்ணம் * முழுதும் நிலைநின்ற *
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் * வண்ணம் எண்ணுங்கால் ** -
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் * புரையும் திருமேனி *
இன்ன வண்ணம் என்று காட்டீர் * இந்தளூரீரே-8
1335 muṉṉai vaṇṇam pāliṉ vaṇṇam * muzhutum nilainiṉṟa *
piṉṉai vaṇṇam kŏṇṭal vaṇṇam * vaṇṇam ĕṇṇuṅkāl ** -
pŏṉṉiṉ vaṇṇam maṇiyiṉ vaṇṇam * puraiyum tirumeṉi *
iṉṉa vaṇṇam ĕṉṟu kāṭṭīr * intal̤ūrīre-8

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1335. From ancient times you have had the white color of milk, and always you have the color of the dark clouds. If someone thinks of you, you are precious gold for them, yet your body is the color of a dark sapphire. O god of Indalur, show us your real color.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இந்தளூரீரே! இந்தளூர்! பெருமானே!; வண்ணம் தங்களின் திருமேனி நிறத்தை; எண்ணுங்கால் ஆராயுமளவில்; முன்னை வண்ணம் கிருதயுகத்தில் நிறம்; பாலின் வண்ணம் பாலின் நிறமான வெண்மை; பின்னை வண்ணம் பின்பு த்ரேதாயுகத்தில் நிறம்; பொன்னின் வண்ணம் பொன் போன்ற சிவந்த நிறம்; மணியின் த்வாபர யுகத்தில் மணியின்; வண்ணம் பச்சை நிறம்; முழுதும் நிலைநின்ற கலியுகத்தின் நிறம்; கொண்டல் வண்ணம் கருத்த மேகத்தின் நிறம்; புரையும் இப்படிப் பட்ட வர்ணங்களையுடைய; திருமேனி திருமேனி அழகை; இன்ன வண்ணம் இன்ன வண்ணமுடையது; என்று காட்டீர் என்று காட்டி அருள வேண்டும்
indhal̤ūrīrĕ ŏh one who is mercifully present in thiruvindhal̤ūr dhivyadhĕṣam!; vaṇṇam (your highness-) physical beauty; eṇṇungāl if we start thinking about it; munnai vaṇṇam the physical beauty in krutha yugam, first; pālin vaṇṇam will be milk-s complexion, that is white; pinnai vaṇṇam physical beauty in the subsequent thrĕthā yugam; ponnin vaṇṇam will have the reddish complexion of gold; maṇiyin vaṇṇam (subsequently the physical beauty in dhvāpara yugam) will have the complexion of a dark-blue gem; muzhudhum at all times; nilai ninṛa remaining firm; vaṇṇam physical beauty; koṇdal vaṇṇan cloud-s complexion; puraiyum remaining together (with the four complexions); thirumĕni divine form; inna vaṇṇam enṛu having such complexion; kāttīr mercifully show.

PT 4.9.9

1336 எந்தைதந்தை தம்மானென்றென்று எமரேழேளவும் *
வந்துநின்றதொண்டரோர்க்கே வாசிவல்லீரால் *
சிந்தைதன்னுள்முந்திநிற்றிர் சிறிதும்திருமேனி *
இந்தவண்ணமென்றுகாட்டீர் இந்தளூரீரே!
1336 எந்தை தந்தை தம்மான் என்று என்று * எமர் ஏழ் அளவும் *
வந்து நின்ற தொண்டரோர்க்கே * வாசி வல்லீரால் **
சிந்தை-தன்னுள் முந்தி நிற்றிர் * சிறிதும் திருமேனி *
இந்த வண்ணம் என்று காட்டீர் * இந்தளூரீரே-9
1336 ĕntai tantai tammāṉ ĕṉṟu ĕṉṟu * ĕmar ezh al̤avum *
vantu niṉṟa tŏṇṭarorkke * vāci vallīrāl **
cintai-taṉṉul̤ munti niṟṟir * ciṟitum tirumeṉi *
inta vaṇṇam ĕṉṟu kāṭṭīr * intal̤ūrīre-9

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1336. My father, his father, his father, and all for seven generations were your devotees and worshiped you. You try to see whether we are suitable to be your devotees. You have entered the hearts of your other devotees, but you don’t show me the color of your divine body, O god of Indalur.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இந்தளூரீரே! இந்தளூர்! பெருமானே!; எந்தை என் தகப்பனார்; தந்தை தகப்பனாரின் தகப்பனார்; தம்மான் என்று என்று என்கிற முறையில்; எமர் எமது முன்னோர்கள்; ஏழ் அளவும் ஏழுதலை முறையாக; வந்து கைங்கரியத்திற்கு; நின்ற இசைந்து வந்திருக்கும்; தொண்டரோர்க்கே தொண்டர் விஷயத்தில்; வாசி வல்லீரால் வித்யாசம் பார்கிறீர்; சிந்தை தன்னுள் என் மனதில்; முந்தி நிற்றிர் வந்து நிற்கிறீர்; சிறிதும் திருமேனி ஆனால் சிறிதும் திருமேனி; இந்த வண்ணம் இந்த நிறமுடையது; என்று காட்டீர் என்று காட்டவில்லையே
indhal̤ūrīrĕ ŏh one who is mercifully present in thiruvindhal̤ūr dhivyadhĕṣam!; endhai for me and my father; thandhai for his father (in this manner, for our whole clan); thammān being the lord; enṛu saying in this manner; emar our ancestors; ĕzh al̤avum for seven generations; vandhu accepting and arriving to do kainkaryam (to your highness); ninṛa stood firmly; thoṇdarŏrkkĕ in our matters only; vāsi valleer you are analysing (that ī cannot show myself);; sindhai thannul̤ in (my) heart; mundhi for a very long time; niṝīr are present; (ṣtill) ; thirumĕni divine form; indha vaṇṇam enṛu as having such nature; siṛidhum even a little bit; kāttīr you are not showing

PT 4.9.10

1337 ஏரார்பொழில்சூழ் இந்தளூரில்எந்தைபெருமானை *
காரார்புறவில்மங்கைவேந்தன் கலியனொலிசெய்த *
சீராரின்சொல்மாலை கற்றுத்திரிவார்உலகத்தில் *
ஆராரவரே அமரர்க்குஎன்றும் அமரராவாரே. (2)
1337 ## ஏர் ஆர் பொழில் சூழ் * இந்தளூரில் எந்தை பெருமானை *
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன் * கலியன் ஒலிசெய்த **
சீர் ஆர் இன் சொல் மாலை * கற்றுத் திரிவார் உலகத்தில் *
ஆர் ஆர் அவரே * அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே-10
1337 ## er ār pŏzhil cūzh * intal̤ūril ĕntai pĕrumāṉai *
kār ār puṟaviṉ maṅkai ventaṉ * kaliyaṉ ŏlicĕyta **
cīr ār iṉ cŏl mālai * kaṟṟut tirivār ulakattil *
ār ār avare * amararkku ĕṉṟum amarar āvāre-10

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1337. Kaliyan, the chief of Thirumangai composed a sweet garland of ten pāsurams praising our father, the god of Indalur surrounded by lovely groves. If devotees, whoever they are, learn and recite these ten pāsurams they will become the god of the gods in the sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏர் ஆர் அழகிய; பொழில் சூழ் சோலைகளாலே சூழப்பட்ட; இந்தளூரில் இந்தளூர்; எந்தை பெருமானை எம்பெருமானைக் குறித்து; கார் ஆர் மேகங்கள் படிந்த; புறவின் தோப்புகளையுடைய; மங்கை வேந்தன் திருமங்கைத் தலைவரான; கலியன் திருமங்கை ஆழ்வார்; ஒலிசெய்த அருளிச்செய்த; சீரார் இன் சிறந்த மதுரமான; சொல் மாலை இச்சொல் மாலையை; கற்றுத் திரிவார் கற்றுத் திரிபவர்; உலகத்தில் உலகத்தில்; ஆர் ஆர் அவரே எவரெவருண்டோ அவர்களே; அமரர்க்கு நித்யஸூரிகளால்; என்றும் எக்காலத்திலும்; அமரர் ஆவாரே கொண்டாடப்படுவர்
ĕr ār very beautiful; pozhil by gardens; sūzh surrounded; indhal̤ūril mercifully present in thiruvindhal̤ūr; endhai my lord; perumānai on sarvĕṣvaran; kār ār filled with clouds; puṛavil having surroundings; mangai for thirumangai region; vĕndhan king; kaliyan āzhvār; oli seydha mercifully spoke; sīr ār filled with bhagavān-s qualities; in sol having sweet words; mālai these ten pāsurams which are a garland of words; kaṝu learnt; thirivār those who fearlessly roam around; ulagaththu in this world; ār ār those people (irrespective of their birth, conduct etc); avarĕ they; amararkku for nithyasūris; enṛum at all times; amarar āvār will remain praiseworthy.

PTM 17.67

2779 கோட்டியூர் அன்னவுருவினரியை * திருமெய்யத்து
இன்னமுதவெள்ளத்தை இந்தளூரந்தணனை *
மன்னுமதிள்கச்சி வேளுக்கையாளரியை *
மன்னியபாடகத்து எம்மைந்தனை * -
2779 கோட்டியூர் அன்ன உருவின் அரியை * திருமெய்யத்து
இன் அமுதவெள்ளத்தை இந்தளூர் அந்தணனை *
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை *
மன்னிய பாடகத்து எம் மைந்தனை * 69
2779 koṭṭiyūr aṉṉa uruviṉ ariyai * tirumĕyyattu
iṉ amutavĕl̤l̤attai intal̤ūr antaṇaṉai *
maṉṉu matil̤ kacci vel̤ukkai āl̤ ariyai *
maṉṉiya pāṭakattu ĕm maintaṉai * 69

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2779. He has the form of a man-lion in Thirukkottiyur, a flood of sweet nectar and the god of Thirumeyyam, the good Andanan of Thiruvindalur, the man-lion of Thiruvelukkai in Thirukkachi surrounded with strong forts. He is the young god of Thiruppādagam, (69)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோட்டியூர் திருக்கோட்டியூரில்; அன்ன உருவில் விலக்ஷணமாக இருக்கும்; அரியை நரசிம்ம மூர்த்தியை; திருமெய்யத்து திருமெய்யத்திலிருக்கும்; இன் அமுத இனிய அமுத; வெள்ளத்தை வெள்ளத்தை; இந்தளூர் திருவிந்தளூரிலிருக்கும்; அந்தணனை அந்தணனை; மன்னு அழகிய; மதிள் மதிள்களையுடைய; கச்சி காஞ்சீபுரத்தில்; வேளுக்கை திருவேளுக்கை என்னும் இடத்திலிருக்கும்; ஆள் அரியை நரசிம்ம மூர்த்தியை; பாடகத்து திருப்பாடகத்தில்; மன்னிய வாஸம் செய்யும்; எம் மைந்தனை எம் மைந்தனை
kŏttiyūr at thirukkŏttiyūr; anna uruvil ariyai as narasimhamūrththy (emperumān’s divine form with lion face and human body) who has such (distinguished) divine form; thiru meyyaththu in thirumeyyam; in amudham vel̤l̤aththai being greatly enjoyable as a sweet ocean of nectar; indhal̤ūr at thiruvindhal̤ūr; andhaṇanai being supremely merciful; kachchi in the town of kānchīpuram; vĕl̤ukkai āl̤ariyai as narasimha in the divine abode of thiruvĕl̤ukkai; pādagaththu manniya em maindhanai as our youthful entity at thiruppādagam where he has taken permanent residence